வந்திருப்பது என்ன வகையான தலைவலி ? ஈசியா கண்டுபிடிக்கலாம் ! ட்ரீமெண்ட் எடுக்கலாம்

Post a Comment

 

தலைவலி

தலைவலி என்பது நாம் சிறிது உணர்ச்சிவசப்பட்டாலோ, பதற்றமானாலோ அல்லது அதிகமாக எதை பற்றியாவது யோசித்தாலோ கூட உடனே வந்துவிடும்.

நம் உடலில் ஏற்படும் பல வலிகளில் தலைவலி முக்கியமான பிரச்னையாக இருக்கிறது. ஏனென்றால் மற்ற வலிகள் எல்லாம் உடல் பலவீனம் மற்றும் சத்து குறைபாடுகள், அதிக உடல் உழைப்பு உள்ளிட்ட பல காரணங்களால் ஏற்படும்.


thalaivali maruthuvam


ஆனால் தலைவலி என்பது நாம் சிறிது உணர்ச்சிவசப்பட்டாலோ, பதற்றமானாலோ அல்லது அதிகமாக எதை பற்றியாவது யோசித்தாலோ கூட உடனே வந்துவிடும். தலைவலியை அனுபவிக்காதவர்களே இருக்க முடியாது. மாறுபட்ட காரணங்களால் தலைவலி அவ்வப்போது வருவது என்பது மிகவும் சாதாரணமான விஷயமாக உள்ளது.

கட்டி, ரத்தம் உறைவது, சைனஸ், ரத்த நாளங்களில் ஏற்படும் அசாதாரண நிலை உள்ளிட்டவற்றின் வெளிப்பாடாக தலைவலி உள்ளது. 

சிலருக்கு தலைவலி என்பது தினமும் ஏற்படும் ஒரு சாதாரண விஷயமாக மாறி, அவர்களது அன்றாட வாழ்க்கையை பாதித்து சிக்கலை ஏற்படுத்துகிறது. உங்களுக்கு ஏற்பட கூடிய 3 வகையான நாள்பட்ட தலைவலிகளை எவ்வாறு கையாள்வது என்பது பற்றி பார்க்கலாம்.

நாள்பட்ட தலைவலிகள் ஒவ்வொன்றுக்கும் பல அறிகுறிகள் உள்ளன. இவற்றுக்கு வெவ்வேறு சிகிச்சைகள் தேவைப்படுகிறது.

டென்ஷன் தலைவலி:

டென்ஷன் காரணமாக ஏற்படும் நாள்பட்ட தலைவலியானது பலரும் அனுபவிக்கும் பொதுவான தலைவலி. நாம் எந்த விஷயத்திற்காக டென்ஷன் ஆகும் போது நம் தலை, நெற்றி மற்றும் கழுத்து பகுதியில் உள்ள தசைகள் சுருங்குவதால் இந்த தலைவலி வருகிறது. 

இது தலையின் இருபுறமும் லேசானது முதல் தீவிர வலியை ஏற்படுத்தும். நெற்றியை சுற்றி ஒரு அழுத்தத்தை உணர முடியும்.

இந்த நாள்பட்ட டென்ஷன் தலைவலிக்கு நாம் எடுத்து கொள்ளும் உணவுகள், நாம் செய்யும் செய்யும் செயல்கள், நமக்கு ஏற்படும் மனஅழுத்தங்கள் உள்ளிட்டவையும் காரணியாக உள்ளன. சிலர் நீண்ட நேர கம்ப்யூட்டர் முன் உட்கார்ந்த பின் அல்லது நீண்ட நேரம் வாகனம் ஒட்டிய பின் இந்த தலைவலியை அனுபவிப்பார்கள்.

பலமான சத்தம், தீப்பொறிகள் மற்றும் கேஜெட்களின் பிரகாசமான நீல நிற ஸ்கிரீன்கள் உள்ளிட்டவை டென்ஷன் தலைவலிக்கு வழிவகுக்கும். இந்த தலைவலிக்கு நீரிழப்பும் கூட ஒரு காரணமாக இருக்கலாம். எனவே நாளொன்றுக்கு தேவையான போதுமான அளவு தண்ணீரைக் குடிக்க வேண்டும். சிஸ்டம் முன் அமர்ந்து செய்யும் வேலை என்றால் சீரான இடைவெளி எடுத்து கொண்டு வேலையே தொடரலாம்.

தலைவலி குணமாக இயற்கை வைத்தியம் கூட பலனளிக்கும். 


சரியான தூக்கம் இல்லாவிட்டாலும் கூட இந்த தலைவலி ஏற்படும். எனவே 6 முதல் 8 மணி நேரம் தூக்கம் அவசியம். தலைவலியிலிருந்து விடுபட வலி மருந்துகளை எப்போதாவது மட்டுமே பயன்படுத்த வேண்டும்.


what type of headache do you have


நாள்பட்ட ஒற்றைத் தலைவலி (மைக்ரேன் தலைவலி):

தலையின் ஒரு பக்கத்தில் விடாமல் ஒரு வலி வரும் பாருங்கள். அதற்கு இரு பக்க தலைவலியே பரவாயில்லை என்று நம்மை நினைக்க வைத்து விடும். ஒற்றை தலைவலியானது எப்போதாவது வந்தாலே தாங்க முடியாது. அதுவே தினசரி ஏற்படும் நாள்பட்ட தலைவலியாக சிலருக்கு மாறி விடுவதுண்டு. 

இந்த மைக்ரேன் தலைவலி, இளம் வயதினரையும், பெண்களையும் அதிகம் பாதிக்கும். உலகளவில் 20 முதல் 20 சதவீத மக்கள் மைக்ரேன் தலைவலியால் அவதிப்படுவதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.


சளி, தொண்டை வலியால் பாதிக்கப்பட்டிருந்தால் இந்த உணவுகளை தவிர்த்துவிடுங்கள்..


இந்த தலைவலி ஒவ்வொரு முறை வரும்போதும் நீண்ட நேரம் வலி உணர்வு இருக்கும். சிறிது சிறிதாக வலி அதிகரிக்கும். வலியின் போது பார்வை தெளிவாக இருக்காது. தலைச்சுற்றல், வாந்தி உணர்வு அதிகமாக இருக்கும். மயக்கம் உண்டாவது போன்ற உணர்வுடன் காலை எழும்போதே வாந்தியோடு கூடிய தலைவலி இருந்தால் அது மைக்ரேன் தலைவலி என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.


மைக்ரேன் என்பதை குணப்படுத்தமுடியாது. ஆனால் இதை தவிர்க்க முடியும் என்பதே உண்மை நிலை. நமக்கு எதனால் இந்த மைக்ரேன் தலைவலி வருகிறது என்பதை நாமே கண்டறியலாம். 

உதாரணமாக மது அருந்துவதாலோ, டென்ஷன் ஆனாலோ சரியாக தூங்காமல் இருந்தாலோ அல்லது சிலவகை உணவுகள் மற்றும் காய்கறிகளை சாப்பிடும் போது என ஏதோ ஒரு வகையில் மைக்ரேன் வருவதை நாம் கண்டுபிடித்தால் அதனை சரிசெய்து கொள்ள வேண்டும்.

கஃபைன் தலைவலி:

இந்த நாட்பட்ட தலைவலிக்கான காரணம் இதன் பெயரிலேயே அடங்கி இருக்குறது. ஒரு நாளில் அதிக அளவு கஃபைன் உட்கொள்வதால் இந்த தலைவலி தூண்டப்படுகிறது. இது காபி பிரியர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்று. காபியில் உள்ள கஃபைன் மூளை ரத்த ஓட்டத்தை பாதிக்க்கும் தன்மை உடையது. காபியை அளவோடு சாப்பிட்டால் தவறில்லை. 

சிலர் காலை எழுவது முதல் இரவு படுக்க போகும் வரை 10 கப் காபியாவது குடிப்பார்கள். இந்த காஃபின் தலைவலியை தவிர ஒரு நாளைக்கு இரண்டு கப் காபி அல்லது 250 மில்லி எடுத்து கொள்வது போதுமானது.

Description: The pain from a headache may be a dull ache, sharp, throbbing, constant, intermittent, mild, or intense. But there are some ways to cure as well as prevent it.

Related Posts

Post a Comment

Subscribe Our Newsletter