சளி, இருமல், காய்ச்சல் சரியாக வீட்டு வைத்தியம்

headache-treatment-for-child-in-tamil

சளி, காய்ச்சல் இருமல் என்பது இயல்பாகவே நோய் எதிர்ப்பு சக்தி குறைவானவர்களுக்கு ஏற்படக்கூடியதுதான். எதிர்ப்பு சக்தி குறையும் நேரத்தில் எந்த ஒரு மனிதருக்கும், குழந்தைகளைக்கும், முதியவர்களுக்கும் கிருமி தொற்றினால் இது ஏற்படலாம்.

முதலில் இது போன்ற தொற்று ஏற்பட்டால் பீதி அடைய்யாமல், கொரோனோ தானா என்று பயப்படமால் இருக்க வேண்டும். அதன் பிறகு அது தீவிரமாகும் பட்சத்தில் மருத்துவரை அணுகி சிகிச்சை பெற்றுக்கொள்வது நலம் தரும். 

உங்களுக்கு சாதாரண காய்ச்சல், இருமல், சளி, மூச்சுத்திணறல் ஏற்பட்டால் அது கொரோனாவாகத்தான் இருக்கும் என்று அர்த்தமில்லை. அது SARI இன்ஃபெக்‌ஷனாகவும் இருக்கலாம்.

sali irumal kaichal veetu vaithiyam


என்றாலும், கொரோனா காலத்திற்கு முன்பு நமக்கோ, குழந்தைகளுக்கோ லேசான காய்ச்சல், சளி, இருமல் வந்தால் பெரும்பாலும் அதைப் பொருட்படுத்தியிருக்க மாட்டோம். 


குழந்தைகளை வழக்கம்போல் பள்ளிக்கு அனுப்பியிருப்போம். நாமும் ஒரு பாராசிட்டமால் மாத்திரையை விழுங்கிவிட்டு வழக்கம்போல் அலுவலக வேலைக்குச் சென்றுகொண்டிருந்தோம். 


இந்தக் காய்ச்சல், இருமல், ஜலதோஷமெல்லாம் 'மாத்திரை சாப்பிட்டா ஒரு வாரத்துல சரியாயிடும்; மாத்திரை சாப்பிடலைன்னா ஏழு நாள்ல சரியாயிடும்' என்ற ரேஞ்சில்தான் ஓடிக்கொண்டிருந்தோம். கொரோனா நமக்கு அறிமுகமான பிறகு காய்ச்சல், சளி லேசாக வந்தாலே ஒரு பயமும் எச்சரிக்கை உணர்வும் ஏற்படுகிறது. சொல்லப்போனால் இது தேவையான ஒன்றுதான்.


கொரோனா தீவிரமாகப் பரவிக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில் ஒருவேளை உங்களுக்கு லேசான காய்ச்சல், தொண்டை வலி, இருமல், சளி, மூச்சுத்திணறல் என இவற்றில் ஏதாவது ஒன்றிரண்டு அறிகுறிகள் ஏற்பட்டால்கூட அலட்சியப்படுத்தாமல் உடனடியாக மருத்துவமனைக்குச் செல்லுங்கள். 

டெஸ்ட் எடுத்தால் மட்டுமே உங்களுக்கான காய்ச்சலும் இருமலும் கொரோனாவா இல்லை வேறு ஏதாவது காரணங்களால் ஏற்பட்ட அறிகுறிகளா என்பதை உறுதியாகக் கூற முடியும்.

அதனால் கொரோனாவிற்கான அறிகுறிகள் ஏதாவது தென்படும் பட்சத்தில் உடனடியாகக் கொரோனா டெஸ்ட் செய்துவிடுங்கள். டெஸ்ட் ரிசல்ட் பாசிட்டிவ் என்று வந்தால் கொரோனா தொற்றுக்கான சிகிச்சை எடுத்துக்கொள்ளலாம்.

 ரிசல்ட் நெகட்டிவ் என்று வரும் பட்சத்தில் எதனால் உங்களுக்குக் காய்ச்சல், இருமல் ஏற்பட்டுள்ளது என்பதைக் கண்டறிந்து அதற்கான சிகிச்சையை மேற்கொள்ளலாம். பழங்கள், காய்கறிகள், கீரை வகைகளை தினமும் உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்.


வருமுன் காப்போம்!

கபசுரக் குடிநீர்

'சாதாரண சளி, காய்ச்சலா கொரோனாவா' என்ற குழப்பத்துக்கும் பிரச்னைக்கும் சுலபமான ஒரு தீர்வு இருக்கிறது. அது, வரும் முன் காப்பது. இந்தச் சூழ்நிலையில், சாதாரண சளி, இருமல், காய்ச்சல் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கு உங்களை ஆளாக்காமல் தற்காத்துக்கொள்வது உங்கள் குழப்பத்துக்கும் அச்சத்துக்கும் சிறந்த தீர்வு.


இந்நேரத்தில் குளிர்பானங்கள், ஐஸ்கிரீம் சாப்பிடுவதைத் தவிர்க்கவும். உடலின் நோய் எதிர்ப்புச்சக்தியைப் பெருக்கிக் கொள்ள ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொள்ளுங்கள். 14 நாள்கள் கபசுரக் குடிநீர் எடுத்துக்கொள்ள வேண்டும். இதனை முதல் 7 நாள்கள் தொடர்ச்சியாகவும், பின்பு இரண்டு நாள்கள் இடைவெளிவிட்டு அடுத்த 7 நாள்களும் எடுத்துக்கொள்ள வேண்டும். 


  • தினமும் காலையில் உப்பு போட்டு வெதுவெதுப்பான நீரில் வாய் கொப்பளிப்பது நல்லது. 
  • வெந்நீரில் மஞ்சள் தூள் கலந்து ஆவிபிடிக்கலாம். 


இவற்றையும் மீறி லேசாகக் காய்ச்சல், சளி ஏற்பட்டால்கூட அலட்சியப்படுத்தாமல் உடனடியாக மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொள்வதே சிறந்தது" 

Post a Comment

0 Comments