வெந்நீர் செரிமானத்திற்கு உதவுகிறதா? உண்மை என்ன? தெரிஞ்சுக்கலாம் வாங்க ![DIGESTION TIPS]

Post a Comment

 சுடு தண்ணீர் நிச்சயம் உணவுச் செரிமானத்திற்கு உதவும். ஆனால் பின்விளைவுகள் பயங்கரமானது இல்லை என்றாலும் அது தேவையற்றதே!

நமது செரிமான மண்டலத்தில் உணவுச் செரிமானத்தின் போது சிறிதளவு வெப்பம் உண்டாக்கப்படுகிறது. அதாவது உணவானது எரிக்கப்பட்டே செரிக்கப்படுகிறது.

முதலில் ஒரு கடுமையான பொருளை மென்மையான பொருளாக ஆக்கியே நான் உணவாக உட்கொள்கிறோம். அதற்கு நமக்கு வெப்பம் தேவை! வெப்பத்தினால் பொருட்கள் விரிவடைவதே இதன் காரணம். வெப்பத்தினால் உணவுப்பொருட்களின் அணுக்களுக்கு இடையேயுள்ள பிணைப்பு விடுவிக்கப்பட்டு அதிர்வடைந்து, அதனால் விரிவடைகிறது. அதனால் பொருள் மென்மையாகிறது!

sapitavudan venner kudikkalama


பின் மென்மையான பொருளையும் சிறு சிறு பொருட்களாக்கும் வேலையினை நம் பற்கள் செய்கின்றன. மேலும் உமிழ்நீரிலுள்ள அமைலேசு நொதியானது சிக்கலான மூலக்கூறுகளை மேலும் பிரித்து செரிமான வேலையினை வாயிலேயே தொடங்கிவிடுகிறது!


பின் செரிமான மண்டலத்தில் சுரக்கும் 'ஹைட்ரோகுளோரிக்' அமிலம் நமது உணவினை எரிக்கப் பயன்படுகிறது. இது அமிலத்தன்மை குறைந்த அமிலமாகும். (இந்த அமிலத்தினாலேயே வயிற்றுப் புண் எனப்படும் 'அல்சர்' உருவாகிறது! கீழே விளக்குகிறேன்) உணவானது எரிக்கப்படும் செயலிலேயே புரதம் முதலிய உடலிற்குத் தேவையான அனைத்தும் கரிமங்களும் கனிமங்களும் தாதுஉப்புக்களும் மேலும் பலவகையிலான பொருட்கள் உணவுப்பொருளில் இருந்து பிரித்தெடுக்கப்பட்டு இரத்தத்துடன் கலக்கப்படுகிறது. 


இரத்தம் உடலின் அனைத்து பாகங்களுக்கும் இதனைச் சேர்க்கின்றது! (பெரும் விளக்கம் அளிக்காமல் எளிமையாகவும் சுருக்கமாகவும் கூறிவிட்டேன்! தவறிருப்பின் மன்னிக்கவும்!!)


இப்போது நீங்கள் வாயிலேயே மேலும் வெப்பத்தினையும் (அதாவது சுடுநீர்) அளிக்கையில் செரிமானத்தின் வேகம் இன்னும் அதிகம் தானே! ஆனால் இயற்கையாக ஒரு வழிமுறை இருக்கின்றது. 


உள் உறுப்பினுள் வருகையில் உணவு இப்படித்தான் இருக்கவேண்டும் என்ற படிப்படியாக பரிணாமத் தகவமைப்பினால் கட்டமைக்கப்பட்ட உறுப்புகள், உணவினை அந்த நிலையிலேயே எதிர்பார்க்கும் அல்லவா? எனில், அந்தந்த உறுப்புகள் அதனதன் வேலைகளினைச் செய்ய சில நொதிகளையும் அமிலங்களையும் சுரந்து வைத்திருக்கும். 


அவை இப்போது உணவின் மீதான வேலை குறைந்து போனதால், பின்விளைவுகளை அளிக்கத் தயாராகலாம்! இது என் அனுமானமேயன்றி உறுதிப்படுத்தப்பட்ட விடயமல்ல!! அதுவும் தேவைக்கும் அதிகமாக எடுத்துக்கொள்ளும் போதே!!!


சுடு தண்ணீரின் வெப்பம் சற்றே வினையூக்கியாகப் பயன்படும் அளவினுக்கு எடுத்துக் கொள்ளலாம். வெதுவெதுப்பாக இருப்பதைவிட சற்றே அதிக வெப்பத்தில் எடுத்துக் கொள்ளலாம். அதிலும் உணவு செரிமான செயலை பாதிக்காவண்ணம் தண்ணீரினை எடுத்துக்கொள்ள வேண்டும். நீங்கள் உட்கொள்ளும் தண்ணீர் வயிற்றில் சுரந்து செரிமானத்தினைச் செய்யத் தாயாராக இருக்கும் அமிலத்தினை நீர்த்துப்போகும் அளவினுக்கு இருக்கக்கூடாது. அதே அளவில் தான் சுடுதண்ணீரும் எடுக்கவேண்டும்!!

is hot water help to digestion


அளவிற்கு அதிகமாக வெப்பம் மட்டும் உடலினுள் சென்றால் தவறில்லை. உடலே அதிகப்படியான வெப்பதினை வெளியேற்றிவிடும். ஆனால் தண்ணீர் அமிலத்தினை நீர்த்துப்போகச் செய்திடும் அல்லவா? அது ஆபத்து என்பதை அறிக!


அதே நேரத்தில் நீங்கள் கேட்டதினைப்போன்றே உணவானது உடனடியாக செரிமானம் அடைந்தாலும் பக்கவிளைவுகள் அதிகம்!


வயிற்றிற்கு அதிக இரத்தம் ஓட்டம் செல்லும் படி செய்வதே உணவுச் செரிமானத்தினை துரிதமாக்கும் ஒரே வழியாகும். அதுவும் எந்தப் பக்கவிளைவுகளும் இல்லாத ஒரேயொரு வழி இதுவாகும்! (நல்ல நலமான மனித உடம்பிற்கு) இரத்த ஓட்டத்தினைத் துரிதப்படுத்த உடற்பயிற்சி முதல் நடைப்பயிற்சி வரை செய்யலாம்!


மேலும் உங்கள் உமிழ்நீரை அதிகப்படுத்துதலும் விரைவான செரிமானத்திற்கு உதவும்! இதுவும் குறிப்பிட்ட அளவு வரை மட்டுமே! அதனாலேயே நம் முன்னோர்கள் 'தலை தித்திப்பு கடை காப்பு' என்றனர். இதுவே வயிற்றிற்குள் உணவிடும் முறை ஆகும். அறிவியல் முறையிலும் இது 100% உண்மையே! முதலில் இனிப்பில் துவங்கி இறுதியில் கசப்பில் உணவினை முடிக்க வேண்டும் என்று உணவு உண்ண வழிமுறையினை வகுத்து ஆசாரக்கோவையில் தந்துள்ளனர். 


முதலில் இனிப்பினை உண்ணுவதல் அதிக உமிழ்நீர் சுரந்து செர்மானத்திற்கு எளிதாக உதவிடுகிறது. முதலில் என்பதையே 'தலை' என்று குறிப்பிட்டுள்ளனர்.


ஆனால், தண்ணீர் மற்றும் குளிர்நீரினால் உணவில் இருக்கும் எண்ணெயினைச் செரிக்கையில் கொழுப்பு அமிலங்கள் வெளிப்பட்டு அவை கொழுப்பாகப் படிகின்றது. ஆனால் சுடு நீரினை உணவுடன் எடுத்துக்கொள்கையில் கொழுப்பின் அளவனாதும் பெருமளவு குறைகிறது.


இதனை இந்த ஒளிப்படத்தில் காண்பித்தாலும் இதன் உண்மைத் தன்மையினை அறியமுடியவில்லை! ஆனால் ஓரளவு நம்பும்படியாகவே இருக்கின்றது என்பதே என் துணிபாகும்!


வயிற்றுப்புண் (அ) அல்சர்:


நான் ஏற்கனவே குறிப்பிட்டதைப் போன்று வயிற்றில் இடப்படும் உணவினை எரித்து செரிமானிக்க அங்கே 'ஹைட்ரோகுளோரிக்' அமிலம் சுரக்கப்படுகிறது. இதன் செரிவு குறைவு என்றாலும் உணவினை எரிக்கின்றதே!


வயிற்றில் உணவு இடப்படாமல் இருந்தால் வயிற்றில் சுரக்கப்பட்டுக் காத்திருக்கும் அமிலமானது, அங்கே எது இருக்கின்றதோ அதை எரிக்க ஆரம்பிக்கும். உணவு இருந்தால் அதனுடன் நீர் முதலிய அனைத்தும் எரிந்து முடிகிற அளவிற்கே இந்த அமிலத்தின் அளவு இருக்கும் என்றாலும், ஒரு நாள் என்றால் பெரும் ஆபத்தில்லை. 

தினமும் உணவினை இடாமல் இருக்கையில், அந்த அமிலம் சிறிது சிறிதாக வயிற்றின் உட்சுவற்றினை அரித்துப் புண்ணாக்கி விடும் அல்லவா? இதனையே வயிற்றில் புண் ஏற்பட்டுவிட்டதாக மருத்துவர்கள் 'அல்சர்' என்று கூறுகின்றனர். சரியான வேலைக்கும் உணவினை அதுவும் அமிலத்தன்மை குறைந்த உணவுகளை எடுத்துக்கொள்வதன் மூதல் இதனைத் தடுத்துக்கொள்ளலாம். அதிலும் காலை உணவினைத் தவிர்ப்போருக்கே இதன் பாதிப்பு அதிகம். ஏனெனில், காலையில் தான் வயிறு காலியாக இருக்கும். அமிலம் இருப்பதை அரித்துவிடுகிறது!

venner arunthuvathal unavu serimanam aguma


Related Posts

Post a Comment

Subscribe Our Newsletter