ஓ... சார்லி அதிகம் விருது வாங்க முடியாமல் போனதற்கு இதுதான் காரணமா? வெளிவந்த ரகசியம் !

 சரியான அவதானிப்புகள். மிகவும் யதார்த்தமான நடிப்பை திரையில் வெளிப்படுத்தக் கூடியவர்.


ஆனாலும் அவருக்கு பரிசளிப்போ, பாராட்டோ அதிகம் வெளியே தெரிவதில்லை. இதை இரண்டு விதமாக விளக்கலாம்.


முதல் காரணம்: இதற்கு அவரே தான் காரணம். அவர் தேர்ந்தெடுத்த கதாபாத்திரங்கள், அல்லது அவருக்கு வாய்த்த வாய்ப்புகள்.


4 நண்பர்களில் ஒருவராக - கோபுர வாசலிலே, பிரண்ட்ஸ், சிங்கார வேலன் etc…

கூட்டத்தில் ஏமாறும் ஒருவராக - வெற்றி கொடி கட்டு

அவரது தனித்துவம் அவரது வெகுளித்தனமான டயலாக் டெலிவரி. பஞ்ச் டயலாக் எல்லாம் எடுபடாது. அல்லது முயற்சிக்கவேயில்லை.



பட விநயம்: வெகுளித்தனத்தை காட்டும் கூகிள் Images


நேசமணியை நினைவு வைத்து டிவிட்டரில் டிரெண்டிங் செய்த உலகம், நேசமணியின் உண்மை தொழிலாளி கோபாலை நினைவில் வைக்க வில்லை.


ஒரு நிலைக்கு பின், உங்கள் வேலையில் முன்னேற வேண்டுமெனில், டீம் பிளேயர் என்ற வட்டத்திலிருந்து வெளியே வந்து "டீம் லீட்" என்று உங்களை காட்ட வேண்டும். இல்லையெனில் அரபிக் கடலில் இறங்கி கப்பலையே தள்ளிய உங்களை, "இவன் நல்லா கப்பல் தள்ளுவான் பா!" என்று பசிபிக் கடலிலும் இறங்கி கப்பல் தள்ள விடுவார்கள்.


அப்புறம் என்னிக்கு தான் நீங்கள் டைட்டானிக் கப்பல் கேப்டன் ஆகறது?


இப்பொழுது வடிவேலுவை கவனிப்போம். "போடா போடா புண்ணாக்கு!" என்று பாட்டு பாடி ஆரம்பித்து, செந்தில் -கவுண்டர் என்ற மாபெரும் கூட்டணியில் அவர்களுடன் பயணித்து, மெல்ல மெல்ல தனி ஆளுமையாக வந்தார்.


nadigar charli



இடையில் தேவர் மகன் போன்ற ஜாக்பாட்டுகளும் கிடைத்தன.


அவருக்கென ஒரு டீமை உருவாக்கிக் கொண்டார். நன்றாக கவனித்தால், அவர் குழு நபர்களை கூட உங்களுக்கு வெவ்வேறு படங்களில் அடையாளம் தெரியும், ஆனால் அவர்கள் பெயர்கள் உங்களுக்கு தெரிந்திருக்காது. ஏனெனில் அவர்கள் வைகை புயல் டீம் மெம்பர்ஸ்.


இரண்டாவது காரணம்:


எந்தளவுக்கு ஒரு பிராடக்ட் தரமா, சிறப்பா இருக்கோ அந்த அளவுக்கு மார்க்கெட்டிங், பிராண்டிங்கும் முக்கியம் என்பதை வெகு சிலர் தான் புரிந்து கொண்டிருப்பர்.


திரையிலும் நடிகர்களுக்கு, (நடிகைகளுக்கும் தான்) பிராண்ட் வளர்க்க தனியா ஒரு பிஆர் டீம்,(PR team), கம்பனி எல்லாம் இருக்கு.


மாதா மாதம் ஒரு தொகையை படியளந்து விட்டால், வாராவாரம், அல்லது தினமும் ஒரு செய்திகள் அவரை பற்றி வந்த வண்ணம் இருக்கும்.


எ.கா:


மானை வேட்டையாடிய வழக்கில் சிறை வரை சென்று, பெயில் கிடைத்து வந்த மான் பாய் "இந்த குடும்பத்துக்கு அவ்வளவு நிதியளித்தார்", அந்த தொண்டு நிறுவனத்துக்கு இந்த சேவை புழிந்தார்னு செய்திகள் வந்தேதே, எல்லாம் பிஆர் டீம் வேலை தான்.

அந்த பெரிய B நடிகர், ஊர் பெயர் தெரியாத தீவில், ஒரு உப்புமா கம்பெனி தொடங்கி, கருப்பை வெள்ளை ஆக்கினதாக ஒரு செய்தி வந்த வேகத்தில் அமுங்கியதும் பிஆர் டீமின் சிறப்பான செயல்பாடுகளால் தான்.

இப்பொழுதெல்லாம் விருதுகள் கூட Match பிக்சிங் தான். தமிழில் சொன்னால் "நமக்கு நாமே" திட்டம்.


சார்லி புத்திசாலி, அனுபவஸ்தர். பாடுபட்டு சேர்ந்த பணத்தை, 25 வருடங்களுக்கு முன்பே, அழகா, சாலி கிராமத்தில் சொந்த வீடு கட்டிக் கொண்டார். அவர் வாங்கிய அவார்டுகள்:[1]


சுமார் 750+ படங்களில் நடித்துள்ளார்.

Tamil Nadu State Government Award

Film Fans Association,ChennaiBest Comedian Award – 1994– 2 times Best Character Artiste Award – 1996

Bharath Social & Cultural Academy, ChennaiBest Comedian Award – 1998, 1999, 2000 & 2001– 4 times

Kalaimamani Award 2004

Kalaichchigaram Award 2018

நிஜமாகவே ஆராய்ச்சி செய்து முனைவர் பட்டமும் தஞ்சை பல்கலைக்கழகத்தில் வாங்கி விட்டாராம். Ph.D topic: Humour in Tamil Cinema

வாங்கிய விருதை ஷோகேஸில் தான் வைக்க முடியும். வாரம் ஒரு தடவை துடைத்து வேறு வைக்கணும். நாலு நாளைக்கு அப்புறம் ஒருவரும் நியாபகம் வைத்துக் கொள்ள மாட்டார்கள்.


விஷயம் இது தான்:


ஒன்று தானாக அமைய வேண்டும், கொஞ்சம் முன்னெடுப்பு, சிறிது ரிஸ்க், நிறைய புத்திசாலித்தனம் கலந்த உழைப்பு.

இரண்டு, தனக்கான மதிப்பை உணர்ந்து, மார்க்கெட்டை உருவாக்க தெரியணும். இல்லாட்டி கொஞ்சம் சில்லறையை செலவு செய்ய வேண்டியிருக்கும்.

குன்றின் மேல் விளக்காய் அமைய வாய்ப்புகள் வரும். அதை கெட்டியா பிடிச்சுக்கணும்.


குடத்திலிட்ட விளக்காகவும் இருக்கலாம். தப்பில்லை.


மொத்தத்தில் விளக்கு எரிய வேண்டும், அதான் முக்கியம்.


பி.கு: இது எதுவுமே சரிப்படலைன்னா, பிரசாந்த் கிஷோருக்கு 380 கோடி ரூவாய் மொய் எழுத வேண்டியிருக்கும்.

Post a Comment

0 Comments