எலுமிச்சை பழத்தின் 17 மருத்துவ குணங்கள்

 ஆசியாவில் உள்ள சிறிய பசுமையான மரங்களில் ஒன்று சிட்ரஸ் பழமான எலுமிச்சை. இதை ஆயுர்வேதத்தில் பரவலாக பயன்படுத்துவதுண்டு. உணவு, அழகு பராமரிப்பு, மருந்துகள் மற்றும் பல்வேறு உலோகங்களின் சுத்தகரிப்பு செயல்பாட்டிலும் பயன்படுத்தப்படுகிறது.

தினமும் நீங்கள் உட்கொள்ளும் உணவில் ஏற்படும் சிறிய மாற்றங்களே உங்கள் ஆரோக்கியத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். பழங்கள் மற்றும் காய்கறிகளை பொறுத்தவரை எலுமிச்சை அளவில் மிகச் சிறியதாக இருக்கலாம். அதன் அளவிற்கு மாறாக இது அதிக அடர்த்தியான ஊட்டச்சத்து மிக்கதாகவும் குறைந்த கலோரிகள் கொண்ட பழமாகவும் உள்ளது.


​எலுமிச்சையின் தனித்துவமான நன்மைகள்:


எலுமிச்சை வைட்டமின் சி நிறைந்த மூலம். இந்த சிறிய பழத்தில் பொட்டாசியம், ஃபோலேட் கால்சியம், ஃபைபர் மெக்னீசியம் மற்றும் ஃப்ளாவனாய்டுகள் நிறைந்து காணப்படுகிறது.

எலுமிச்சையின் தனித்துவமான நன்மைகள் குறித்து ஆயுர்வேதம் என்ன சொல்கிறது என்பதை விளக்குகிறார் ஆயுர்வேத மருத்துவ நிபுணர்G.K.தாராஜெயஸ்ரீ BAMS.

மாதவிடாய் கால பிரச்சனைகள் அனைத்துக்கும் தீர்வாகும் மூலிகைகள், எல்லாமே வீட்டில் இருக்க கூடியவை !

தங்கானக்‌ஷரா (tankana kshara) என்னும் ஆயுர்வேத மருந்துடன் எலுமிச்சை சாறை பயன்படுத்தி உடலில் உள்ள மருக்கள் இயற்ற அகலும்.

எலுமிச்சை இலைகளை வெதுவெதுப்பான நீரில் நனைத்து சிறிதளவு ஜீரகம், வெல்லம், உப்பு, மஞ்சள் தூள் சேர்க்கவும். இதை கொதிக்க வைத்து குடிப்பதால் குமட்டல் மற்றும் அஜீரணக் கோளாறு நீங்குகிறது.


வயிற்றுப்போக்கு நீங்குவதற்கு எலுமிச்சை


நன்றாக பழுத்திருக்கும் எலுமிச்சைத் தோல் எடுத்து நறுக்கி ( 3-4 ) துண்டுகளை உலர்த்தி அரைத்து பொடி செய்து வைக்கவும். இந்த பொடியுடன் அரை கப் தயிர் கலந்து இரண்டு அல்லது மூன்று முறை சாப்பிட்டால் வயிற்றுப்போக்கு நீங்கும்.


​எலுமிச்சை விதைகள்


எலுமிச்சை விதைகள் உலர்த்தி இடித்து பொடியாக்கவும். அதனுடன் 1 கிராம் உப்பு 1 டீ ஸ்பூன் நெய் சேர்க்கவும். இதை ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் கலந்து உட்கொண்டால் மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலியை நீக்கும்.

எலுமிச்சை எண்ணெய் உடலில் ஏற்படும் பெரும்பாலான பிரச்சனைகளுக்கு தீர்வாக இருக்கிறது. இந்த எண்ணெய்களை உட்புறமாக அல்லது நீரில் கலந்து நீர்க்க செய்து, பல்வேறு நிலையிலும் மேற்பூச்சாகப் பயன்படுத்தப்படுகின்றன.அதோடு நறுமணமாகவும் உள்ளிழுக்கப்படுகின்றன.


​உடலுக்கு எதிர்ப்பு சக்தி


எலுமிச்சை வைட்டமின் சி நிறைந்தவை மட்டுமல்லாமல், வெள்ளை அணுக்களை உருவாக்கும் சக்தி உள்ளதால் உடலின் பாதுகாப்பை அதிகரிப்பது மட்டுமின்றி தொற்று நோய் தவிர்த்து ஏராளமான நோய்களை தடுக்கவும் வழி வகுக்கிறது.

வைட்டமின் சி கொண்ட எலுமிச்சை ஸ்கர்விக்கு எதிராக சிகிச்சையளிக்க உதவுகிறது. வைட்டமின் சி கொண்ட இது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கவும் உதவும்.

​லோகோமோட்டர்களின் செயல்பாட்டை அதிகரிப்பதில் எலுமிச்சையின் பங்களிப்பு

எலுமிச்சை எண்ணெய் மேம்பட்ட மற்றும் நேர்மறையான மனநிலை முடிவுகளில் தாக்கத்தை உண்டாக்குகிறது. உண்மையில், எலுமிச்சையின் நறுமணத்தை உள்ளிழுப்பதால் எபினெஃப்ரின் டிரான்ஸ்மிட்டரின் செறிவுகள் அதிகரித்தது கண்டறியப்பட்டது. இது மூளைக்குள் மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் நல் விளைவு உண்டவதை நிரூபிக்கின்றது.


​ஒற்றைத் தலைவலிக்கு எலுமிச்சை


எலுமிச்சை காஃபைன் அருந்துவதால் உண்டாகும் ஒற்றைத்தலைவலியை நீக்குகிறது. முக்கியமாக பெரி கிரானியல் இரத்த நாளத்தை கட்டுபடுத்துவதன் மூலம் ஒற்றை தலைவலி குணமாகிறது.

​டையூரிடிக் - எலுமிச்சையின் செயல்பாடு

எலுமிச்சை சிறுநீரக கற்கள், பித்தப்பை கற்கள், சிறுநீரக தொற்றுகளை எதிர்த்து போராடுகிறது. மேலும் சிறுநீரகத்தின் ஆரோக்கியமான செயல்பாட்டையும் ஊக்குவிக்கின்றன.


​ஆற்றலை மேம்படுத்தும் எலுமிச்சை:


எலுமிச்சை மூளையின் செயல்பாட்டை அதிகரிக்கவும் மேம்படுத்தவும் செய்கிறது. எப்போதும் விழிப்புணர்வுடன் இருத்தல், ஆற்றல் வழங்குவதல், தெளிவான மனநிலை போன்றவற்றை மேம்படுத்துகிறது. உடம்பில் வலுவை அதிகரிக்க எலுமிச்சை எண்ணெயை மருத்துவரின் அறிவுரையோடு உட்கொள்ளலாம்.



super benefits of lemon


​முகப்பருவை குணப்படுத்தும் எலுமிச்சை:


எலுமிச்சை முகப்பருக்கள் போக்கும் தன்மை கொண்டது. முகப்பருவை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களை அழிக்கும் பழமாக எலுமிச்சை இருக்கிறது. சிட்ரஸ் நிறைந்த இதன் சாறை வெதுவெதுப்பான நீரில் கலந்து தினமும் காலையில் குடிப்பதன் மூலம் மிகவும் மோசமான முகப்பருவை தடுக்கலாம். இது எளிய வழிமுறை ஆகும்.

எலுமிச்சை சாற்றில் ரோஜா அல்லது முலாம்பழம் தண்ணீரில் கலந்து முகப்பரு இருக்கும் இடத்தில் பேஸ்ட் ஆக பயன்படுத்துவதன் மூலம் குணமாகிறது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

இந்த கரைசலை அரை மணி நேரம் தோலின் மீது வைத்து தண்ணீரில் கழுவ வேண்டும். ஃப்ரெஷ்ஷாக எடுக்கப்பட்ட சிட்ரஸ் சாற்றை ஒரு பஞ்சு அல்லது துணியால் நேரடியாக பயன்படுத்த வேண்டும். மேலும் பாதிப்பு அதிகம் உள்ள இடங்களில் இரவு முழுவதும் விட வேண்டும். காலை எழுந்தவுடன் கழுவ வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்வதால் முகப்பரு படிப்படியாக குறைய ஆரம்பிக்கும்.


​கேன்சர் புண்களை குணப்படுத்தும் எலுமிச்சை:


எலுமிச்சையில் ஆன்டி வைரல் மற்றும் பாக்டீரியாவை எதிர்க்கும் பண்புகள் கொண்டுள்ளன. இது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. எலுமிச்சை எண்ணெய் புற்றுநோய் தடுக்கும் பண்புகளை கொண்டுள்ளது இது ஆன்டிடூமர் பண்புகளை உடையது.

மாதவிடாய் காலத்தில் கருப்பை எப்படி இருக்கும்? ஏன் தனித்திருக்க வேண்டும், சித்த மருத்துவர் சொல்றத கேளுங்க!


புற்றுநோய் புண்களை குணப்படுத்தும் தன்மை எலுமிச்சைக்கு உண்டு. நாள் ஒன்றுக்கு மூன்று முறை எலுமிச்சை சேர்த்த நீரை கொண்டு வாய் கொப்புளித்தது தொண்டை கேன்சரால் பாதிக்கப்பட்டவர்களின் புண்களை ஆற்றுவதற்கு உதவியது.


புற்றுநோய் திறந்த காயங்களாக இருப்பதால் ஆரம்பத்தில் எரிச்சல் உண்டாகலாம். ஆனால் காயங்கள் ஆற்றும் வரை இது இருக்கலாம் என்றாலும் காயங்கள் ஆற்றும் தன்மை இதற்கு உண்டு.

Post a Comment

0 Comments