இந்த 17 வழிகளை பின்பற்றினால் வயிற்று வலி என்பது உங்கள் வாழ்க்கையிலேயே வராது

Post a Comment

 தலைவலியா? ஜலதோசமா? என நொடிக்கு ஒருமுறை டி.வி.க்களில் வரும் விளம்பரங்கள் நம்மை எரிச்சலடைய வைத்தாலும், உண்மையில் அது இரண்டுமே மிக மோசமானவை என்பது அனுபவித்தவர்களுக்குத் தான் தெரியும். 

சமா? என நொடிக்கு ஒருமுறை டி.வி.க்களில் வரும் விளம்பரங்கள் நம்மை எரிச்சலடைய வைத்தாலும், உண்மையில் அது இரண்டுமே மிக மோசமானவை என்பது அனுபவித்தவர்களுக்குத் தான் தெரியும். 

ஆனால், அதைவிட மிக மோசமானது வயிற்று வலி. தலைவலி, ஜலதோசம் வந்தால்கூட எப்படியாவது சமாளித்துவிடலாம். ஆனால், வயிற்று வலி வந்துவிட்டால், நமக்கு மட்டுமல்ல, நம்மை சுற்றி இருப்பவர்களுக்கும் தொந்தரவு. வயிற்று வலியால் நாம் நெளிவதைக் கண்டு, நம் அருகில் இருப்பவர்கள், தர்மசங்கடத்தில் நம்மை விட மோசமாக நெளிவார்கள்.

சரி. அவ்வளவு மோசமான வயிற்று வலி வந்துவிட்டால், நாமே மருத்துவராகி, நாமே மருந்துகளை தேர்வு செய்துவிடக் கூடாது. நாமே மருத்துவரானால், நமக்கு நாமே சங்கு ஊதுகிறோம் என்றே சொல்ல வேண்டும். பொதுவாக வயிற்று வலி, நெஞ்செரிச்சல் என வந்துவிட்டால், நாம் முதலில் தேடுவது கைவைத்தியம்தான்.  

வெதுவெதுப்பான நீரைக் குடிப்பது, ஓமம் சாப்பிடுவது, வெந்தயம் விழுங்குவது என மாறி மாறி செய்து, கடைசியில் இருக்கிற நோயை அதிகமாக்கிக் கொண்டுதான் மருத்துவரை நாடுவோம். அவரும் தீட்டுகிறோன் பார்என்று, பில்லை ஒரு தீட்டு தீட்டி விடுவார். அப்போது நாம் மருத்துவரை தவறு சொல்வதில் பிரயோஜனமில்லை.

17 ways to cure stomach pain in tamilமருத்துவ வளர்ச்சி அடையாத காலங்களில் கிராமங்களில் கைவைத்தியம் தெரிந்தவர்கள் பலர் இருந்தார்கள். மருந்தை சொன்னால் பலிக்காது எனக் கூறியே, அவர்கள் அறிந்த மருத்துவ ரகசியத்தை, அவர்களே கொண்டுபோய்விட்டார்கள். அவர்களுடன் இருந்த சிலர் அரைகுறையாக கற்றுவந்ததை, நாம் தலைமுறை தலைமுறையாக கடத்திச் செல்வது மிகப்பெரிய மூடத்தனம். நாகரீக உலகில் மருத்துவத் துறையும் மாபெரும் வளர்ச்சி அடைந்துள்ளது.

செத்தவனை மீண்டும் உயிர்ப்பிக்க மட்டுமே இன்னும் மருந்து கண்டுபிடிக்கவில்லை. அதைத் தவிர, மற்ற அனைத்தையுமே சாத்தியமாக்கிவிட்டது இன்றைய மருத்துவ உலகம்.

இப்படிப்பட்ட சூழலில், வயிற்று வலி தொடங்கிய நேரத்திலேயே மருத்துவரிடம் சென்றால், ஒரே நாள் மருந்து. ஏன்? ஒரு வேளை மருந்திலேயே பிரச்சனை தீரும். ஆனால், நான் மருத்துவரிடம் செல்வதா… என வீரமுழக்கமிட்டு, மருத்துக்கடையை நாடினால், கடைசியில் மருத்துவரிடம் சென்று, அதே மருந்துக்கடைக்கு வரும்போது, நம் கையில் மருந்துப் பட்டியல் முளைத்திருக்கும். 

முன்பெல்லாம், வயிற்று வலி என மருத்துவரிடம் சென்றால், நெஞ்சு எலும்புக்கு கீழோ, மார்பின் நடுவிலோ விரல்களால் அழுத்தியோ, மருத்துவர்கள் பிரச்சனையைத் தெரிந்து கொள்வார்கள். அதன்படி மருந்து கொடுப்பார்கள். அதில் பிழைத்தவர்கள் பாதி, செத்தவர்கள் மீதி. 


ஆனால், தற்போது மருத்துவ உலகம் பிரமிப்பான வளர்ச்சி கண்டுள்ளது. இப்போதெல்லாம் மருத்துவரிடம் சென்றால், அவர் பார்வையாலேயே நம்மை ஸ்கேன் செய்துவிட்டு, வயிறை ஸ்கேன் எடுத்து வரச்சொல்லி அனுப்பி விடுகிறார்கள்.


ஆனால், பீசா, பர்கர், பிரைட் ரைஸ், ஸ்பிரிங் ரோல் என பாஸ்ட் ஃபுட் உணவுகளை உள்வாங்கி வயிறு பிதுங்கிப் போவதால், ஸ்கேனில் கூட பிரச்சனைகள் முழுமையாக தெரிவதில்லை. 


ஆண்கள் பலர் தொந்தி கணபதியாக திரியும் காலத்தில், இஞ்சி இடுப்பழகி நினைப்பில் பெண்கள் பலரும் சத்தான உணவுகளை தவிர்த்துவிட்டு, நார்ச்சத்து, மக்னீசியம், கால்சியம், வைட்டமின் சி மற்றும் ஃபோலேட் எனும் உயிர்ச்சத்துக்களை உணவில் எடுத்துக்கொள்ளாமல், கொழுப்பைக் கூடுதலாகவும், நார்சத்தைக் குறைவாகவும் சாப்பிடுகின்றனர். இதற்கு இடையே வாரத்தில் நான்கு நாட்கள் விரதம் வேறு இருப்பதுதான் கொடுமை.


இத்தகைய செய்முறைகளே பித்தப்பையில் அழற்சி ஏற்படுவதற்கும், கல் ஏற்படுவதற்கும் காரணம் என்கின்றனர் சித்த மருத்துவர்கள்.

சரி. வயிற்றுவலிக்கான காரணங்கள் தான் என்ன? 


1. நடு வயிற்றிலும், வலது பக்க விலாவுக்குக் கீழும் வலி வந்தால், அது வயிற்றுப் புண்ணாகவோ, பித்தப்பைக் கல் வலியாகவோ, கணைய அழற்சி வலியாகவோ இருக்கலாம் என்கின்றனர் மருத்துவர்கள்.


2. இரைப்பை, குடல் பகுதிக்குப் போகும் ரத்தக்குழாய்களில் உண்டாகும் அடைப்பு தீவிர வலியை உண்டாக்குமாம்.


3. நடு வயிற்றில் எரிச்சலுடன்கூடிய வலி, வயிற்றுப் புண் சார்ந்த வலியாக இருக்கலாம்.


4. விலா எலும்பில் பின் முதுகின் இரு பக்கங்களில் இருந்து முன் பக்கம் சிறுநீர்ப்பை நோக்கி வரும் வலி, சிறுநீரகக் கல்லின் வலியாக இருக்கலாம்


5. பெண்களுக்கு அடி வயிற்றின் இரு பக்கவாட்டில் வரும் வலி, சினைப்பைக் கட்டிகளின் வலியாக இருக்கலாம். அடி வயிற்றின் மையப் பகுதியில் வரும் வலி நார்க்கட்டி வலியாக இருக்கலாம்.


இவற்றைத் தாண்டி, அப்பெண்டிக்ஸ் வலி, அடினோமயோசிஸ் வலி... என வயிற்றுவலிக்குப் பல காரணங்கள் இருக்கின்றன. எல்லா வலிகளுக்குமே `ஒரு செவன் அப் குடிச்சா சரியாகிடும்’என்று அலட்சியமாக இருந்தால், சங்கு கன்ஃபார்ம். எனவே, வயிற்று வலி என வந்துவிட்டால், மருத்துவரை நாடுவதே புத்திசாலித்தனம்.


வரும் முன் காக்க… என்ன செய்யலாம்?


கண்ணில் கண்டதை எல்லாம் மேய்வதை விட்டு, சரியான உணவுகளை சாப்பிட்டு, மலச்சிக்கலை நீக்கி, உடல் வாதத்தைக் குறைக்க வேண்டும். எண்ணெய்ப் பலகாரங்களை அதிகம் சாப்பிட வேண்டாம். அதோடு, விரதம் முதலிய பித்தம் சேர்க்கும் விஷயங்களையும் தவிர்க்க வேண்டும் என்பதே நம் சித்த மருத்துவம் சொல்லும் அறிவுரைகள்.


பித்தைப்பைக் கல் வராமல் தடுக்க வழிகள்


சரியான உணவுகளைச் சாப்பிட்டும் மலச்சிக்கல் வந்துவிட்டால், கரிசலாங்கண்ணி மிகச்சிறந்த மருந்து. இதில் மஞ்சள் பூ, வெள்ளைப் பூ என இரண்டு வகை உண்டு. 


1.வெள்ளைப் பூ பூக்கும் கரிசலாங்கண்ணிக் கீரையை விழுதாக அரைத்து, இரண்டு சுண்டைக்காய் அளவு எடுத்து மோரில் கலந்து, ஒரு மாத காலம் சாப்பிட வேண்டும். 


2. ஒரு சாண் அளவு வளர்ந்திருக்கும் கீழாநெல்லிச் செடியை வேருடன் பிடுங்கி, நன்கு கழுவி, அரைத்து மோரில் இரண்டு சுண்டைக்காய் அளவு கலந்து சாப்பிட வேண்டும்.


3. சீரகத்தை கரும்புச் சாறு, கீழாநெல்லிச் சாறு, எலுமிச்சைச் சாறு, முசுமுசுக்கைச் சாற்றில் ஊறவைத்து (ஒவ்வொரு நாளுக்கு ஒவ்வொன்றாக ஊறவைக்க வேண்டும்) வெயிலில் நன்கு உலர வைக்கவும். 


அதை மிக்ஸியில் நன்கு பொடித்து, காலையில் இரண்டு டீஸ்பூன், மாலையில் இரண்டு டீஸ்பூன் என உணவுக்கு முன்னதாகச் சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும்.


4. வாரம் ஒரு நாள் நல்லெண்ணெய் தேய்த்துக் குளிப்பது, உடலில் பித்தத்தைத் தணிக்கும்; கல் வராமல் தடுக்க உதவும். பித்தப்பைக் கல் உள்ளவர்கள் தலைக்கு குளிர்தாமரைத் தைலம், கீழாநெல்லித் தைலம், காயத்திருமேனித் தைலம்... என இவற்றில் ஒன்றைத் தேய்த்துக் குளிப்பது நல்லது.

இதையெல்லாம் செய்து பாருங்கள்.. கைமேல்… இல்லையில்லை…வயிறுமேல் பலன் கிடைக்கும்!

Related Posts

Post a Comment

Subscribe Our Newsletter