பூவே உனக்காக சீரியலில் இருந்து விலகிய லிவிங்ஸ்டன் மகள் – அவர் சொன்ன அதிர்ச்ச காரணம் என்ன தெரியுமா?

Post a Comment

 

jovitha poove unakkaga

தமிழ் சினிமாவிற்கு வாரிசு நடிகர்கள், நடிகைகள் ஒன்று புதுசு இல்லை. பாலிவுட்டை போல தமிழ் சினிமாவிலும் எத்தனையோ வாரிசு நடிகர்கள் இருக்கிறார்கள். அந்த வகையில் பிரபல நடிகரான லிவிங்ஸ்டன் மகளும் ஒருவர். தமிழ் சினிமா உலகில் 80 ஒருவர். 90 காலகட்டங்களில் பிரபலமான நடிகர்களில் இருந்தவர் நடிகர் லிவிங்ஸ்டன். 

இவர் 1982 ஆம் ஆண்டு டார்லிங் டார்லிங் என்ற படத்தில் ஒரு ஸ்டேஷன் மாஸ்டராக நடித்து இருந்தார். அதோடு அந்த படத்தின் உதவி இயக்குனராகவும் லிவிங்ஸ்டன் பணியாற்றி இருந்தார். இவர் திரைப்பட நடிகர் மட்டும் இல்லாமல் திரைக்கதை எழுத்தாளராகவும் பணியாற்றி உள்ளார். .நடிகர் லிவிங்ஸ்டன் அவர்கள் ஜசின்தா என்பவரை திருமணம் செய்து கொண்டார். 


இவருக்கு ஜோவிதா மற்றும் ஜமீனா என இரண்டு பெண்கள் வாரிசுகள் உள்ளனர்.நடிகர் லிவிங்ஸ்டன் அவர்கள் தன்னுடைய மூத்த மகள் சினிமா உலகிற்கு வரப் போகிறார் என்று இரண்டு வருடங்களுக்கு முன்னரே பேட்டியில் கூறி இருந்தார்.


ஜோவிதா ஒரு படத்தில் ஹீரோயினாக நடிக்க போகிறார் என்றும் அந்த படத்தில் தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை அம்பிகாவின் மகன் ராம் கேசவ் லிவிங்ஸ்டன் மகளுக்கு ஜோடியாக நடிக்க இருந்தார். 

இந்த படத்தின் பெயர் கலாசல். மேலும், இந்த படத்தில் ராதாரவி, அம்பிகா, மதன் பாப், பானுசந்தர் என பலர்நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியானது. ஆனால், அந்த படம் என்ன ஆனது என்று தெரியவில்லை. தற்போது இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பூவே உனக்காக தொடரில் நடித்து வருகிறார்.

 இந்த சீரியல் இல்லத் தரசிகள் மத்தியில் ஓரளவிற்கு வரவேற்பை பெற்றது. இப்படி ஒரு நிலையில் இந்த சீரியலில் இந்த தனது மகள் விலகப் போகிறார் என்று நடிகர் லிவிங்ஸ்டன் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கூறி இருந்தார். இப்படி ஒரு நிலையில் அதனை உறுதிப்படுத்தும் விதமாக தற்போது இந்த சீரியலில் இருந்து விலகுவதாக ஜோவிதா அறிவித்துள்ளார். தனது உயர் கல்வி படிப்பை தொடருவதற்காக இந்த சீரியலில் இருந்து விலகுவதாக கூறியுள்ளார் ஜோவிதா.

Related Posts

Post a Comment

Subscribe Our Newsletter