ஆரிக்கு இச் கொடுத்த ஷனம் ஷெட்டி ! வெளியான ப்ரோமா வீடியோவால் பரபரப்பு !!

Post a Comment

 

arikku mutham kodutha shana shetty

பிக் பாஸ் சீசன் 4 முடியும் தருவாயில் உள்ள நிலையில் எலிமினேட் ஆகி வெளியே சென்ற முன்னாள் ஹவுஸ் மேட்ஸ் வீட்டிற்குள் guest ஆக மீண்டும் வந்துள்ளார்கள். உள்ளே வந்த சனம் ஷெட்டி ஆரிக்கு முத்தம் கொடுத்து பாராட்டிய வீடியோ வைரலாகி வருகிறது. ஆனால் இதை நிகழ்ச்சியில் போடாமல் unseenஇல் போட்டதால் ரசிகர்கள் எடிட்டரின் மேல் கடுப்பாகி உள்ளனர்.


பிக் பாஸ் வீட்டில் ஆரியை எல்லோரும் குறிவைத்து ஓரம் கட்டி வந்தார்கள். யாருமே அவருடன் சப்போர்ட்டுக்கு நிற்கவில்லை. ஆனால் சனம் செட்டி மட்டுமே ஆரிக்கு ஆறுதலாக இருந்துள்ளார். இருவரும் பெரிதும் நட்பு பாராட்டி கொள்ளவில்லை என்றாலும் ஒருவரை ஒருவர் வெறுத்ததில்லை. பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே போகும்போது கூட ஆரியை நேர்மையின் சின்னம் என சனம் ஷெட்டி கூறினார். இது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.


இந்நிலையில் சனம் ஷெட்டியை பிக் பாஸ் திட்டமிட்டு வழி அனுப்பியதாகவும், அவர் வீட்டிற்குள் திரும்பி வரமாட்டார் எனவும் ரசிகர்கள் கூறி வந்தனர். அதற்கேற்றார்போல் மீண்டும் கெஸ்டாக உள்ளே வந்தபோது சனம் ஷெட்டிக்கு ப்ரோமோ ஏதும் போடாமல் பாரபட்சம் காட்டியது. 


மேலும் உள்ளே வந்த சனம் செட்டி ஆரியை பார்த்து நான் மீண்டும் உள்ளே வந்தது உங்களைப் பார்க்கத்தான் என்றார். இந்த வார்த்தைகள் ஆரிக்கு பெரும் நம்பிக்கையை அளித்தது. மேலும் ஆரியையும் அனிதாவையும் கட்டித்தழுவி பாராட்டிய சனம் செட்டி இருவருக்கும் முத்தம் கொடுத்தார்.


ஆனால் இந்த காட்சிகள் எதுவும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் வராமல் unseenஇல் வந்துள்ளதால் இதை ஏன் ஒளிபரப்பவில்லை என மக்கள் கொந்தளித்து வருகின்றனர். அன்பு கேங் வந்தபோது பல ப்ரோமோகளை போட்டது குறிப்பிடத்தக்கது. சனம் செட்டி ஆரிக்கும் அனிதாவிற்கு முத்தம் கொடுக்கும் இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Related Posts

Post a Comment

Subscribe Our Newsletter