இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் பாலாஜி எல்லைமீறி ஆரியை வம்புக்கிழுத்து சண்டை போட்டது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆரி வெளியில் இருந்தால் அவருக்கு கொடுக்கும் மரியாதையே வேறு விதமாக இருந்திருக்கும் என பாலாஜி ஆரியை மிரட்டும் தொனியில் பேசி இருந்தார்.
இந்நிலையில் இன்று பிக் பாஸ் வீட்டுக்கு வந்திருக்கும் கமல்ஹாசன் பாலாஜி மற்றும் ரம்யா பாண்டியன் ஆகியோரை குறிவைத்து தாக்கி பேசினார்.
"சட்டப்படி நடப்பது, நியாயமா நடப்பது, நேர்மையா இருக்குறது..(ஆரியை பற்றி தான் சொல்கிறார்) இதெல்லாம் சுவாரஸ்யம் அற்றது என நினைப்பது தான் நியூ நார்மல். என்னை பொறுத்தப்பவர் அது அப்நார்மல்."
"மூஞ்சில அடிச்சது போல பேசுவது straight forward இல்லை (ரம்யா). குரலை ஒசத்தி பேசிட்டா இது நியாயம் ஆகிடாது. அது முரட்டுத்தனம். தப்பு மேல தப்பு செஞ்சிட்டு இருக்குறவங்களை என்ன பண்றது. தட்டி கேட்போம்" என கமல் கூறி இருக்கிறார்.
ப்ரொமோ வீடியோ இதோ..
#BiggBossTamil இல் இன்று.. #Day90 #Promo2 of #BiggBossTamil #பிக்பாஸ் - தினமும் இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason4 #BiggBossTamil4 #VijayTelevision pic.twitter.com/sSlfcQa3wm
— Vijay Television (@vijaytelevision) January 2, 2021
Post a Comment
Post a Comment