பச்சைக் காய்கறிகள், பழங்களைக் கொண்ட சாலடுகளை உண்பது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதா?

கொரோனா வைரஸ், உணவின் மேற்புறங்களில் வாழும் தன்மை கொண்டது என சில தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. அப்படியெனில் நல்ல சுகாதாரமான நடைமுறைகளை எவ்வாறு பராமரிப்பது?


ஆரோக்கியமான உணவுகளையும், சாலடுகளையும் உண்பது என்பது பலரது அன்றாட வாழ்க்கையில் சம்பந்தப்பட்ட விஷயமாக உள்ளது. கோவிட்-19 நோய்ப்பரவல் காரணமாக நம்மில் பலரும் சொந்த சமையலுக்கு மாறி, சாலடுகளை உண்பதைத் தவிர்த்து வீட்டில் துரித உணவுகளை செய்ய முயல்கிறோம். கோவிட்-19 உணவின் மேற்புறங்களிலும் வாழலாம் என்பது கண்டறியப்பட்டுள்ளது. எனவே, பழங்கள், காய்கறிகள், பேக் செய்யப்படாத ரொட்டி, கேக், சாலடு போன்றவற்றில் நல்ல சுகாதார நடைமுறைகளை பராமரிப்பது மிகவும் அவசியமாகும். இதனால் உணவு மாசுபாட்டைக் குறைக்க இயலும்.

veg salad eating


பதனிடப்படாத உணவுகளை உண்ணலாமா?

தற்போது எழுந்துள்ள முக்கியமான கேள்விகளுள் ஒன்று, பதனிடப்படாத உணவுகளையும், பழங்கள் காய்கறிகள் மற்றும் சாலடுகளையும் உண்ணலாமா? என்பதுதான்.


ஆம் உண்ணலாம். ஆனால் உங்களுடைய கைகளை உணவுண்ணும் முன் நன்கு கழுவ வேண்டும். அதோடு பழங்கள் மற்றும் காய்கறிகளையும் நன்கு கழுவ வேண்டும். இதோ உணவு மாசுபாட்டைக் குறைக்க சில பரிந்துரைகள்.


1. உணவு வாங்கும் போது மேற்கொள்ளப்படவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் 

வீட்டை விட்டு வெளியில் பொருட்கள் வாங்க செல்லும் முன் நினைவில் வைக்க வேண்டிய சில குறிப்புகள்:


தேவைப்படும் போது மட்டுமே மளிகைப் பொருட்கள் வாங்க வெளியே செல்ல வேண்டும்.


பொருட்களின் பட்டியலை முன்னரே தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.


உங்களுக்கென்று சொந்தமான பையை எடுத்துச் செல்ல வேண்டும்.


மக்கள் கூட்டம் குறைவான கடையையும், சரியான நேரத்தையும் தேர்வு செய்ய வேண்டும்.


வாங்கிய அனைத்து பொருட்களையும் தனித்தனியாக வைக்க வேண்டும்.


சில குறிப்பிட்ட ஆடை மற்றும் செருப்புகளை இதற்கென்றே தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். கடையிலிருந்து திரும்பிய பிறகு உடனடியாக அவற்றை மாற்ற வேண்டும்.

Post a Comment

0 Comments