புயல் வெள்ளத்தில் மூழ்கிய பிக்பாஸ் வீடு; தலைக்தெறிக்க ஓடிய போட்டியாளர்கள்.. பிக்பாஸ் தொடருமா?

Post a Comment

bigboss vetil malai

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியானது தற்போது 50 நாட்களை கடந்து கால் சென்டர் டாஸ்கில் சுவாரசியமாக சென்றுகொண்டிருக்கிறது.

இதையடுத்து, வங்க கடலில் உருவான புயலானது சென்னையை கடந்த இரண்டு நாட்களாக புரட்டி போட்டுள்ளது.

எங்கு பார்த்தாலும் வெள்ளம் சூழ்ந்து, வீடுகள், வாகனங்கள் மூழ்கி மக்கள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

இந்த நிலையில், சென்னை பூந்தமல்லி ஈ.வி.பி ஃபிலிம் சிட்டி வளாகத்திலிருக்கும் பிக்பாஸ் வீட்டை வெள்ளம் சூழ்ந்துள்ளது.

இதில், வீட்டின் கார்டன் ஏரியா, நீச்சல் குளம் முழுக்க இடுப்பளவு தண்ணீர் புகுந்து விட்டதாம்.

மேலும், செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்பட்ட பின் அருகில் இருக்கும் பிக்பாஸ் வீட்டிலும் சில அசாதராண சூழல் ஏற்பட்டுள்ளது.

இதனால், பதறிய போட்டியாளர்கள் "நாங்க ஷோவிலிருந்தே வெளியேறிக் கொள்கிறோம். ஆளை விட்டுடுங்க'' என்றே கூறியுள்ளனர்.

இதன்பின்னர், சேனல் துரிதமாகச் செயல்பட்டு பூந்தமல்லியில் அமைந்திருக்கும் பிரபல தனியார் ஹோட்டலில் போட்டியாளர்களைத் தங்க வைக்க முடிவு செய்தது.

அதனைத்தொடர்ந்து, நேற்று மாலை சுமார் 4 மணி அளவில் போட்டியாளர்கள் அத்தனை பேரும் பத்திரமாக நான்கு வாகனங்களில் அதி தீவிரப் பாதுகாப்புடன் அந்த ஹோட்டலுக்குள் அழைத்துச் செல்லப்பட்டு தங்கவைக்கப்டிருக்கிறார்கள்.

நேற்று இரவு முழுக்க அந்த ஹோட்டலில்தான் தங்கியிருந்தனர் போட்டியாளர்கள். தற்போது தண்ணீரை வெளியேற்றும் வேலைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

அந்த வேலைகள் முடிவடைந்தால் போட்டியாளர்கள் இன்று இரவு மறுபடியும் பிக்பாஸ் வீட்டுக்குள் செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Posts

Post a Comment

Subscribe Our Newsletter