பெண் ணுறுப்பை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள பின்பற்ற வேண்டிய 9 விஷயங்கள்... இதோ...

pen uruppai eppadi sutham seivathu



பெண்கள் தங்கள் இனப்பெருக்க உறுப்பை ஆரோக்கியமாக வைத்திருப்பது மிகவும் அவசியம். காரணம் பெண் ணுறுப்பில் நோய்த் தொற்று ஏற்பட்டால் பிறகு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் வரை பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. 

எனவே பெண்கள் தங்கள் பெண் ணுறுப்பை ஆரோக்கியமாக வைக்க சில டிப்ஸ்களை கடைபிடிக்க வேண்டியது அவசியம். அவைகள் எவை என அறிந்து கொள்வோம்.

 

pen uruppai arokkiyamaga vaipathu eppadi

பெண் ணுறுப்பு மிகவும் உணர்திறன் வாய்ந்த பகுதியாகும். அதே நேரத்தில் மிக முக்கியமான உறுப்புகளில் ஒன்றாகும். எனவே பெண்கள் அதை கவனித்துக் கொள்வதும் பராமரிப்பதும் மிகவும் அவசியம். 

ஆனால் நாம் வாழும் சமூகத்தில் பெண்ணுறுப்பை பராமரிப்பதற்கான வழிகளை பற்றி யாரும் வெளிப்படையாக பேசுவதில்லை. 

இதனால் தான் பெண் ணுறுப்பு பற்றிய கட்டுக்கதைகள் நிறைய நிலவி வருகிறது. எனவே உங்க பெண்ணு றுப்பை ஆரோக்கியமாக வைக்க ஒவ்வொரு பெண்ணும் செய்ய வேண்டிய 10 விஷயங்களை அவர்கள் வலியுறுத்துகின்றனர்.

​எப்போதும் பருத்தி உள்ளாடைகளை அணியுங்கள்

பருத்தி உள்ளாடைகளை மட்டுமே அணிந்து வாருங்கள். ஏனெனில் பருத்தி உள்ளாடைகள் உங்களுக்கு காற்றோட்டத்தை தரும். சருமம் சுவாசிக்க உதவி செய்யும். உங்க பெண் ணுறுப்பை ஈரப்பதம் இல்லாமல் வைத்திருக்கவும், ஈரப்பதத்தை உறிஞ்சவும் உதவுகிறது.



​​தண்ணீரால் கழுவுங்கள்


உங்க பெண் ணுறுப்பை கழுவ கண்ட கண்ட க்ரீம்களை பயன்படுத்துவது உங்களுக்கு பிரச்சினையை உண்டாக்கும். எனவே தீங்கு விளைவிக்கும் கெமிக்கல் க்ரீம்களை பயன்படுத்துவது தவறு. இது உங்க யோனியின் pH சமநிலையை பாதிக்கும். இது தொற்று நோய்களுக்கு வழி வகுக்கும்.

ஆன்டி பயாடிக் மருந்துகளை பயன்படுத்துவதை தவிருங்கள். ஆண்டிபயாடிக் அதிகமாக பயன்படுத்துவது உங்கள் யோ னி ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். இது உங்க பெண்ணு றுப்பில் உள்ள நல்ல மற்றும் கெட்ட பாக்டீரியாக்கள் இரண்டையும் பாதிக்கும். ஈஸ்ட் மற்றும் பிற நோய்த்தொற்றுக்கள் உருவாக்க வழி வகுக்கும்.


​கெகல் பயிற்சிகளை தொடர்ந்து செய்யுங்கள்

இவை உங்க இடுப்பு மாடி தசைகளை குறிவைத்து பலப்படுத்தும் ஒரு வகை உடற்பயிற்சி ஆகும். உங்க இடுப்பு மாடி தசைகளை வலுப்படுத்துவதால் கெகல் பயிற்சிகளை தவறாமல் செய்யுங்கள். இதன் விளைவாக சிறுநீர்ப்பை மற்றும் குடல் செயல்பாடு மேம்படும்.



​பாதுகாப்பாக இருங்கள்

உடலுறவு மேற்கொள்ளும் போது பாதுகாப்பாக இருங்கள். உங்கள் நெருக்கமான தருணங்களில் எப்போதும் பாதுகாப்பு முறையைப் பின்பற்றுங்கள். ஏனெனில் பாதுகாப்பாக இருப்பது தான் பாலியல் பரவும் நோய்களில் இருந்து உங்களை பாதுகாப்பதற்கான மிகச்சிறந்த வழியாகும். துணையை ஆணுறை அணியச் சொல்லுங்கள். பெண் ணுறுப்பு உறையும் அணிந்து கொள்ளலாம்.

வழக்கமான சோதனைகளுக்குச் செல்லுங்கள்


வழக்கமான சோதனைகள் மற்றும் ஸ்க்ரீனிங் முறைகள் பெண்ணு றுப்பில் ஏற்படும் பாதிப்பை கண்டறிய உதவி செய்யும். கர்ப்பப்பை வாய் புற்றுநோயை ஆரம்ப கட்டத்திலயே தடுக்க உங்க மகளிர் நல மருத்துவரிடம் சென்று சிகிச்சை பெறுங்கள். HPV தடுப்பூசியை நீங்கள் போட்டுக் கொள்ளலாம்.


​மாதவிடாய் நின்ற பின் இரத்த போக்கு


மாதவிடாய் நின்ற பிறகு வரும் இரத்த போக்கு சாதாரணது கிடையாது. அதை நீங்கள் புறக்கணிக்கக் கூடாது. உங்களுக்கு இரத்தப் போக்கு இருந்தால் மகப்பேறியியல் மருத்துவரிடம் செல்லுங்கள்.

உங்க பெண்ணு றுப்பை ஒழுங்காக கழுவுங்கள்


pen uruppai arokkiyamaga vaipathu eppadi


நீங்கள் சிறுநீர் கழித்த பிறகு உங்க பெண்ணு றுப்பை சாதாரண நீரில் கழுவுவது அவசியம். முன்பக்கத்திலிருந்து பின்புறம் என ஒரு டிஸ்யூ வைத்து துடைத்து எடுங்கள்.


பேடுகளை பயன்படுத்துங்கள்


பெண்கள் சைக்கிளிங், உடற்பயிற்சி செய்யும் போது பெண்ணு றுப்பில் பாதிப்பு ஏற்படாமல் இருக்க பேடுகளை பயன்படுத்தலாம்.


​பெண்ணு றுப்பில் ஏற்படும் அரிப்பை போக்குங்கள்


பெண்ணு றுப்பில் அரிப்பு ஏற்படுவது தோய்த்தொற்றின் மிக முக்கியமான அறிகுறியாகும். இதை நீங்கள் புறக்கணிக்க கூடாது. உடலுறவின் காரணமாக ஏற்படும் வலிகளை புறக்கணிக்காதீர்கள். உடனே மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுவது பலனளிக்கும்.

பெண் உறுப்பு எப்படி கிளீன் செய்வது ? (வீடியோ)

Post a Comment

0 Comments