லைஃப் இன்சூரன்ஸ் அல்லது டேர்ம் இன்சூரன்ஸ் இரண்டில் எது அதிக பயன் தரக்கூடியது?

Post a Comment

which is best? life or term insurance

காப்பீடுகளில் பல வகைகள் உள்ளன. அவற்றை கீழ்கண்ட சித்திரத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம். டெர்ம் இன்சூரன்ஸ் என்பது காப்பீடுகளிலேயே மிக குறைந்த விலைக்கு மிக அதிக காப்பீடை அளிக்கும் திட்டமாகும்.


ஆனால் வழக்கமாக ஒரு காப்பீடு ஏஜென்ட் தங்களிடம் பேசும்போது, டெர்ம் இன்சூரன்ஸ் திட்டம் பற்றி கூறுவதற்கான வாய்ப்புகள் மிக குறைவு, ஏனெனில், ஏஜென்ட்டுகளுக்கு இந்த திட்டத்தில் இருந்து கிடைக்கும் கமிஷன் மிக குறைவு. அதனால், அவர்கள் தங்களிடம் டேர்ம் இன்சூரன்ஸ் அல்லாத மற்ற பல திட்டங்களை மட்டுமே விவரிக்க வாய்ப்பு இருக்கிறது.


அப்படி கூறினால், தாங்கள் டேர்ம் இன்சூரன்ஸ் திட்டம் பற்றி அவர்களை கேட்கலாம். ஒருவருடைய வருட வருமானத்தின் பன்னிரண்டு பங்கு அளவுக்கு (12 x Annual Income ) டேர்ம் இன்சூரன்ஸ் எடுப்பது குறைந்த பட்ச அத்தியாவசியம். மேலும், ஒருவருக்கு பலவித கடன் பளுக்கள் இருப்பின், அதன் மதிப்பையும் சேர்த்து கொள்ள வேண்டும்.


காப்பீட்டையும் முதலீட்டையும் பிரித்து கையாள்வது உகந்தது.


டேர்ம் இன்சூரன்ஸ் அல்லாத மற்ற பல திட்டங்கள் காப்பீட்டையும் முதைலீட்டையும் கலந்து தரும் திட்டங்கள் ஆகும்., அது போன்ற திட்டங்களினால் தங்களுக்கு மிக குறைவான காப்பீடும், மற்றும் மிக குறைவான முதலீடு் வளர்ச்சியுமே கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.


இந்த காரணத்தால் நாம் டேர்ம் இன்சூரன்ஸ் அல்லாத திட்டங்களை எடுப்பதை தவிர்க்கலாம்.


காப்பீடு எடுப்பதற்கு முன் சரியான ஆலோசனை பெற்று சரியான திட்டத்தை தேர்ந்தேடுப்பது முக்கியம், ஏனெனில், பெரும்பாலான காப்பீடு திட்டங்கள் குறைந்தது 15 அல்லது 20 வருடங்களுக்கு மேற்பட்டதாக வடிவமைக்கப்படுகின்றன.


தவறான திட்டத்தை தேர்ந்தெடுத்தால், சில வருடங்கள் பொறுத்து நம்முடைய வாழ்க்கை சூழ்நிலைகளால் பணம் சம்பந்தப்பட்ட முடிவு எடுக்கும் நேரங்களில், நாம் மிகவும் வருத்தப்பட வேண்டி வரும்.


அப்படி பட்ட நுகர்வோர்களையும் முதலீட்டர்களையும் நான் தினமும் சந்திக்கிறேன் அவர்கள் வேகமாக முடிவெடுத்து விட்டு பின்னர் நிதானமாக விசனப்பட்டு கொண்டு இருக்கிறார்கள். இது தேவையா?

Related Posts

Post a Comment

Subscribe Our Newsletter