சில நேரங்களில் நமக்குத் தெரியாமலேயே விஷகடியால் பாதிக்கபடுவோம். ஆனால் இன்னதென தெரியாமல் இருக்கும். விஷகடி பிரச்னையால், தோலில் அரிப்பு ஏற்படுதல், தடிப்பு ஏற்பட்டு சிவந்து போதல் போன்ற ஓவ்வவாமை ஏற்படும்.
விஷகடி அறிகுறிகள்:
உடல் முழுதும் எரிச்சலாக இருக்கும். அடிக்கடி வாந்தி, மயக்கம் ஏற்படும். உடலின் சில இடங்களில் புழுக்களின் ரோமங்களைப் போன்று வளர்ச்சி ஏற்பட்டு இருக்கும்.
விஷகடிக்கு இயற்கை வைத்தியம்:
இந்த பிரச்னைக்கு தீர்வு தருகிறது கரிசலாங்கண்ணி. இந்த இலையுடன் மோர் கலந்து கொடுக்க விஷகடி பிரச்னை தீரும்.
செய்முறை:
கரிசலாங்கண்ணி இலைகளை போதுமான அளவு எடுத்து, அதை நன்றாக கசக்கி அல்லது மிக்சியில் போட்டு அரைத்து, சாறு பிழிந்து எடுத்துக்கொள்ளவும். அதனுடன் போதுமான அளவு மோர் கலந்து, காலை , மாலை என இருவேளை கலந்து குடித்து வர, விஷகடி பிரச்னை தீரும்.
Post a Comment
Post a Comment