இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன். இவரது வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட இருந்த ‘800’ திரைப்படத்தில் நடிப்பதற்கு, நடிகர் விஜய் சேதுபதி ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார்.
முத்தையா முரளிதரன் வேடத்தில் நடிக்க இருந்த விஜய் சேதுபதிக்கு பல்வேறு தரப்பிலும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து ‘800’ திரைப்படத்திலிருந்து விலகுவதாக விஜய் சேதுபதி அறிவித்தார்.
இந்நிலையில், விஜய் சேதுபதி தன் மகளுடன் இருக்கும் புகைப்படத்துடன் பதிவிட்டிருந்த ட்விட்டர் பதிவு ஒன்றில், ரித்திக்என்ற நபர், விஜய் சேதுபதியின் மகளுக்கு பாலியல் வன்கொடுமை மிரட்டல் விடுத்து கருத்து பதிவிட்டார்.
இது பலரையும் அதிர்ச்சியடைய வைத்தது. அந்த நபரை அடையாளம் கண்டு அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனபலரும் வலியுறுத்தினர். இதுதொடர்பாக சைபர் கிரைம் போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில், மிரட்டல் விடுத்தது இலங்கையைச் சேர்ந்தவர் என போலீஸார் தெரிவித்துள்ளனர். அவரை கைது செய்ய விரைவில் தனிப்படை போலீஸார் இலங்கை செல்ல உள்ளனர்.
சாதாரண சினிமா படத்தில் நடிப்பதற்காக இப்படி என்றால், உண்மையாகவே பல பயங்கர வாதி செயல்களில் ஈடுபடும் மக்களுக்கு என்ன தண்டனை கொடுப்பார்கள் இவர்கள். சினிமாவை சினிமாவாகவே பார்க்க வேண்டும். இல்லையென்றால், இந்தமானுடம் வீழ்வது உறுதி.
Post a Comment
Post a Comment