வயிற்றுப்போக்கை சரி செய்யும் சுரைக்காய் ஜூஸ் !

 

vayiru pokkinai sariseiyya

கோடை காலத்தில் வயிறு சம்பந்தமான பிரச்னைகள் ஏற்படுவது சகஜம். உடல் வெப்பம் அதிகரித்து, பல உபாதைகளை சந்திக்க நேரிடும். குறிப்பாக குழந்தைகளுக்கு வயிற்று வலி, வயிற்று உப்புசம், வயிற்றுப்போக்கு போன்றவை ஏற்பட அதிக சாத்தியங்கள் உள்ளன. அவற்றை நமது பாரம்பரிய முறைப்படி "வீட்டு வைத்தியம்" செய்து சரி செய்யலாம். 


வயிற்றுப்போக்கை சரி செய்யும் உணவுகள்: 

வயிற்றுப்போக்கை சரி செய்ய , அந்த சீசனில் கிடைக்கும் பழங்கள், வீட்டு சமையல் பொருட்கள் போன்றவை உபயோகமாக உள்ளன. 


மாதுளை: 


இது உடலுக்கு மிக நல்ல ஒரு ஆரோக்கியமான பழம். இதை சாப்பிட்டால் வயிற்று போக்கு நின்று, உடல் தெம்பு அடையும். மாதுளை விதை வயிற்றுப்போக்கு சிறந்த மருந்து. விதையும் மாதுளையை அரைத்து ஜூஸ் ஆக எடுத்துக்கொள்ள வயிறு தொடர்பான பிரச்னைகள் தீரும். 


மோர்: 


மோர் ஒரு நல்ல வெப்பம் குறைக்கும் இயற்கை பானம். இதில் உள்ள ஆன்ட்சி ஆக்சிடன்கள் குடலில் உள்ள கிருமிகளை அழித்து நல்லதொரு இதயமான குடலியக்கத்திற்கு துணை புரிகிறது. இயற்கையிலேயே உடலுக்கு குளிர்ச்சியை கொடுக்கக் கூடியது. வயிற்றுப் போக்கின் போது மோர் குடிக்க, உடல் இழந்த நீர் சக்தியை ஈடுகட்டி, வெகு விரைவில் அந்த பிரச்னையை சரி செய்கிறது. 


ப ப்பாளி:


இது கோடை காலத்தில் அதிகம் கிடைக்கும் பழம் ஆகும். இந்த காயை எடுத்து துருவி மூன்று கப் நீர் சேர்த்து கொதிக்க விட்டு, அதை ஆற விட வேண்டும். அதை ஒரு நல்ல தூய்மையான வடி கட்டி கொண்டு வடிகட்டி, அந்த நீரை பருக "வயிற்றுப்போக்கு" நின்றுவிடும்.


வெந்தயம்: 

வெந்தயத்தில் இருக்கும் ஆன்ட்ரி பாக்டீரியல் , வயிற்று போக்கை ஏற்படுத்தும் கிருமிகளை அழித்து, நம்மை வயிற்று போக்கிலிருந்து காக்கிறது. வீட்டில் கிடைக்கும் வெந்தயத்தை ஒரு ஸ்பூன் அளவு எடுத்து பொடியாக்கி, அதை வெறும் வயிற்றில், வெது வெதுப்பான நீரில் கலந்து குடிக்க வயிற்றுப் போக்கு மட்டுப்படும். 


தேன்: 


தேன் ஒரு இயற்கை மருந்து. உணவு. இது சாப்பிட்டால் எந்த ஒரு பக்க விளைவுகளும் ஏற்படுவதில்லை. எனவேதான் இதை சித்த மருத்துவத்தில் மருந்துடன் கலந்து சாப்பிட சொல்கின்றனர். எடுத்துக்கொள்ளும் மருந்து, நோயிற்கு உகந்ததாக இருந்தால் சரியாகும். இல்லையென்றால் அதை வெறும் உணவாக மாற்றும் குணம் தேனிற்கு உண்டு.  தேன் மற்றும் ஏலக்காய் பொடி கலந்த வெந்நீரை நாள் ஒன்றிற்கு இரண்டு முறை குடித்தால் வயிற்றுப் போக்கு சரியாகிவிடும். 


இஞ்சி: 


நான் ஒன்றிற்கு இரண்டு அல்லது மூன்று முறை சுக்கு கலந்த மோரை மூன்று அல்லது நான்கு முறை குடித்து வர வயிற்றுப் போக்கு சரியாகும். இதில் உள்ள ஆன்ட்டி பாக்டீரியல் அஜீர கோளாறை சரிசெய்யும். இஞ்சி அஜீரணத்திற்கு அருமையான இயற்கை மருந்து என்பதால் அதை அடிக்கடி உணவில் சேர்த்து வருவது உடல்நலத்திற்கு நன்மை பயக்கும். 


எலுமிச்சை சாறு: 

இயற்கையாகவே எலுமிச்சை சாறு உடல் நலத்திற்கு ஏற்ற உணவு. குடலில் உள்ள அழுக்குகளை, தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களை அழிக்கவல்லது. வயிற்றுப் போக்கின்போது எலுமிச்சை மற்றும் உப்ப கலந்த சாற்றினை கொடுக்க வயிற்றுப் போக்கு சரியாகும். 


Post a Comment

0 Comments