ஒரு பிளேட் பிரியாணிக்கு ஜே ஜே என கூட்டம் கூடிய கூட்டம் ! அதிகாலை நேரத்தில் ஒரு அசத்தல் சம்பவம் !!!

suvaiyana mutton biriyani

சோத்துக்கு தான் இந்த பாடு படுகிறோம். அந்த சோறு பிரியாணியாக கிடைத்தால் மகிழ்ச்சி இரட்டிப்பு ஆகிறது. சுவையான பிரியாணி என்றால் சும்மவா? அதுவும் குறைந்த விலையில் கிடைத்தால்? மக்கள் சும்மா இருக்க போகிறார்களா? என்ன? கேரள மாநிலம் ஒசக்கோட்டையில் இந்த பிரியாணி விற்பனை கன ஜோராக நடக்கிறதாம். 

அதிகாலை 4 மணி முதலே விற்பனை சூடு பிடித்து விடுகிறதாம். நெடுஞ்சாலை ஓரத்தில் பத்துக்கும் மேற்பட்ட பிரியாணி கடைகள் இருந்தாலும், இந்த கடையில் மட்டும் ஓயாத கூட்டம். தமிழ் நாட்டு சுவையுடன் வழங்கப்படும் இந்த உணவிற்கு மவுசு அதிகமாம் இங்கு. 

கோலார் கேஜிஎப், சித்தூர்,     பங்காரு பேட்டை, சென்னை நெடுஞ்சாலையில் இது அமைந்திருப்பதால் கூட்டத்திற்கு குறைவில்லையாம்.  மற்ற மட்டன் பிரியாணி கடைகளில் 300 ரூபாய்க்கு விற்க்கப்படும் பிரியாணி இங்கு மட்டும் 150 ரூபாய்க்கு விற்கப்படுகிறதாம். ஆட்டுப் பாயா 50 ரூபாய்க்கு கிடைக்கிறதாம். 

சுவைக்கு அடிமையான நம்ம இந்தியர்கள் சும்மா இருப்பார்களா? நேரமானாலும் பரவாயில்லை என காத்திருந்து, சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரம் வரிசை நிற்குமாம். அந்தளவுக்கு பொறுமையுடன் நின்று பிரியாணி பொட்டலத்துடன் செல்கின்றனராம். அந்த உணவின் ருசி, எஎவ்வளவு நேரம் வேண்டுமானாலும் நின்று வாங்கி போக வைத்துவிடுவாம். அந்தளவிற்கு பயங்கரமான சுவையான பிரியாணியாம் அது. 

நேரம் கிடைத்தால் , நீங்களும் அங்கு சென்று ஒரு பிடி பிடித்து விட்டு வரலாம். 

#குறைந்தவிலை #பிரியாணி #உணவு #சுவை #மக்கள்

Post a Comment

0 Comments