வயோதிகத்தினால் சிலருக்கு தீராத மூட்டு வலி வந்து சேரும். மூட்டுகளில் ஏற்படும் தேய்மானம் மற்றும் உராய்வு காரணமாக வலி வந்து உயிர் போகும். இன்னதென்ன சொல்ல முடியாத அளவுக்கு துயரம் அதிகரிக்கும். எந்த வைத்தியம் செய்தாலும் சரியாகாது. அல்லது இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு வலி குறைந்து மீண்டும் வலி வந்து பின்னி எடுக்கும். சில நேரங்களில் இந்த உலகத்தில் இந்த வலியோடு நாம வாழத்தான் வேண்டுமா என்று தோன்றும்.
வயோதிகர்களுக்கு அப்படி என்றால், வாலிப வயதுடையவர்களுக்கும் வலி வந்து உயிர் போகும். அதிக எடை, ஜங்க் புட் என்று சொல்லப்படும் துரித வகை உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்வதால் பக்க விளைவுகளாக மூட்டுவலி, உடல் வலி, முதுகு வந்து சேரும்.
சிலருக்கு வாத பிரச்னைகளால் வலி வந்து குத்தி எடுக்கும். அதிக நேரம் நின்று வேலை செய்பவர்கள், காலுக்கு அதிக வேலை கொடுப்பவர்கள், கால்சியம் சத்து குறைபாடு உடையவர்கள் என பலருக்கும் மூட்டு வலி வந்து பின்னி எடுக்கும்.
குழந்தைகளுக்கு கூட சில நேரங்களில் மூட்டுகளில் அடிபடுதல், சத்து பற்றாக்குறை மற்றும் அதிக எடை காரணமாக மூட்டு வலி தொந்தரவு வந்து சேரும். எடுக்கும் சில மாத்திரைகள், மருந்துகளின் பக்க விளைவாக மூட்டு வலி ஏற்பட்டு, சிரமத்திற்கு உள்ளாவர்கள்.
மூட்டு வலி தீர்க்கும் மூலிகை மருத்துவம்.
மூட்டு வலி விலக முடக்கத்தான் கீரை
முடக்கத்தான் கீரை. இது பெயரிலேயே முடக்கு வாத த்தை முடக்கும் என்ற பொருளை பொதிந்துள்ளது நமக்குத் தெரியவரும். எப்பேர்ப்பட்ட மூட்டு வலி, முழங்கால் வலி, கால் வலி க்கும் இது மிகச்சிறந்த இயற்கை மூலிகை கீரை. மருத்துவர் கு. சிவராம் இந்த கீரையை பற்றி மிக அழகாக எடுத்துரைக்கிறார். வீடியோவில் மிகத்தெளிவாக இது பற்றி நமக்கு விளக்குகிறார்.
Post a Comment
Post a Comment