கால் ஆணியை எடுப்பது எப்படி? (இயற்கை மருத்துவம்)

kall ani gunamaga

காலில் ஏதாவது குத்தி, அது உள்ளே இருந்து, தோலில் வினையாற்றி, கடைசியில் வலியை ஏற்படுத்தும். குத்தின இடத்தைச் சுற்றி கால் மரத்துப் போகும். நாளடைவில் அது "கால் ஆணி" யாக மாறிவிடுகிறது. இதனால் காலை கீழே வைத்து ஊன்றி நடக்க முடியாது. சில கிருமி தொற்றுகளினாலும் காலில் ஆணி ஏற்டும். அப்படி ஏற்பட்ட கால் பிரச்னையை சரி செய்ய பின்வரும் முறைகளைப் பின்பற்றுங்கள். கண்டிப்பாக உங்களது KAAL AANI பிரச்னை தீரும். 


கால் ஆணியை சரி செய்யும் கடுகு

கடுகை பயன்படுத்தி கால் ஆணியை சரிசெய்யும் மருந்து தயாரிக்கலாம். பாத்திரத்தில் விளக்கெண்ணெய் எடுக்கவும். இதனுடன் வறுத்து பொடி செய்த கடுகு, மஞ்சள் பொடி சேர்த்து தைலப்பதத்தில் காய்ச்சவும். இதை ஆறவைத்து வடிகட்டி எடுத்து வைக்கவும். இரவு நேரத்தில் தூங்க போகும் முன்பு கால்களை  சுத்தப்படுத்தி இந்த தைலத்தை தடவினால், கால் ஆணி குணமாகும்.

kall annikku theervu


பூண்டு போக்கும் கால் ஆணி 

கால் ஆணி ஏற்பட்ட உடனேயே பூண்டை நசுக்கி அதன் சாறை காலில் ஆணி இருக்கும் இடங்களில் தடவி வரவும். இரவுப் பொழுதில் பூண்டை நசுக்கி காலில் வைத்து துணியால் கட்டுப்போட்டு விட்டு காலையில் எடுத்துவிடலாம்.


கால் ஆணி குணமாக வேப்பிலை

 

வேப்பிலை இலை பசை, குப்பைமேனி இலை பசையுடன் சிறிது மஞ்சள் பொடி சேர்த்து நன்றாக கலந்து கால் ஆணி, உள்ளங்கை தடித்திருந்தால் அந்த  இடத்தில் இந்த பசையை வைத்து துணியால் இரவு முழுவதும் கட்டி வைத்தால் கால் ஆணி பிரச்சனை சரியாகும். 

 இஞ்சி சாறு போக்கும் கால் ஆணி பிரச்னை

இஞ்சிச் சாற்றுடன் சிறிதளவு நீர்த்த சுண்ணாம்பைக் கலந்து கால் ஆணிக்கு மருந்தாக போட்டு வந்தால் கால் ஆணி நீங்கி விடும். 5 கிராம் மஞ்சள், 5 கிராம்  வசம்பு, கைப்பிடி அளவு மருதாணி இலைகள் ஆகியவற்றை தண்ணீர் விட்டு அரைத்து, கால் ஆணி உள்ள இடத்தில் அடைபோல் கனமாக வைத்து மேலே ஒரு  வெற்றிலையை வைத்து, துணியினால் இறுகக் கட்டி விட வேண்டும். படுக்கும் முன்பு இதை செய்யவதால், கால் ஆணி இருந்த இடம் தெரியாமல் மறைந்து  விடும்.

கால் ஆணி குணமாக்கும் இயற்கை மருத்துவம் (வீடியோ)



Post a Comment

0 Comments