காப்பீடு (Insurance) எடுப்பதன் பயன்கள் எவை?

kappeedu payangal


 1.காப்பீடு எடுப்பதன் மூலம் பல பயன்களை நாம் காணலாம்.

. குடும்பத்திற்கு நிதி நிலை ஸ்திரத்தன்மை - குடும்பத்தின் பிரதம வருமானம் ஈட்டுபவர் (குடும்ப தலைவர் அல்லது குடும்ப தலைவி) மரணம் அடைந்தால் குடும்பத்தின் வருங்கால செலவுகள் மற்றும் தேவைகளை பூர்த்தி செய்யும் நிதி நிலை பாதிக்கபடும். அதை பெருமளவுக்கு ஈடு காட்டும் விதத்தில் ஆயுள் காப்பீடு எடுப்பது மிகவும் முக்கியம். ஆயுள் காப்பது மூலம் கொடுக்க படும் நிதியை வைத்து குடும்பம் தங்கள் எதிர்கால வாழ்க்கையை பெரும் சிரமம் இன்றி நடத்த முடியும்.


2. வரி விலக்கு - அரசாங்கம் மக்களை ஆயுள் காப்பீடு எடுப்பதற்கு வரி விளக்கும் அளிக்கிறார்கள். இது ஒருவருடைய வரி விதிக்கப்பட வேண்டிய வருமானத்தை (Taxable income) குறைக்க உதவி செய்கிறது


3. கடன் வாங்கும் தகுதி - ஒருவர் தகுந்த அளவுக்கு ஆயுள் காப்பீடு எடுத்திருந்தால், அவர் ஏதேனும் தேவைக்கு ஒரு வங்கியிலோ அல்லது தனியார் நிதி நிறுவனத்திலோ கடன் வாங்க முற்படின், அவரின் விண்ணப்பம் முன்னுரிமை பெற வாய்ப்பு இருக்கிறது. ஏனெனில். கடன் எடுத்த பிறகு அவர் மரணம் அடைந்தால், அவரின் குடும்பத்தினனார் இடம் இருந்து பாக்கி கடனை வசூலிக்கும் வாய்ப்பு அதிகரிக்கிறது.


ஆயுள் காப்பீட்டை (life insurance) போல், மருத்துவ காப்பீடு (health insurance), வாகன காப்பீடு (motor insurance) , இல்ல காப்பீடு (home insurance) , சுற்றுலா காப்பீடு (Travel insurance) இன்னும் பல காப்பீடு திட்டங்கள் உள்ளன.


எப்போதும் ஆயுள் காப்பீடு எடுக்கும் போது Term Insurance என்கின்ற திட்டத்தை தேர்வு செய்யவும்.


இந்த திட்டம் தான் குறைந்த அளவு பிரீமியம் கட்டி அதிக அளவுக்கு காப்பீட்டை தருகின்ற திட்டம்.


காப்பீடு தரகர், நண்பர், உறவினர், சக தொழிலாளி சொல்கிறார் என்று முதலீடு கூடிய காப்பீட்டு (Investment cum Insurance) போன்ற திட்டத்தை தேர்வு செய்யாதீர்கள். ஏனெனில், அதில் உங்களுக்கு தேவையான காப்பீடு அளவோ நியாயமான முதலீடு வருமானமோ கிடைக்க வாய்ப்பே இல்லை.


காப்பீடை தனியாகவும் முதலீடை தனியாகவும் எப்போதும் பிரித்து கையாள வேண்டும்.

Post a Comment

0 Comments