மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20) : உங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் அதிகப்படியான நேரங்களை செலவு செய்வீர்கள். கிரக மாற்றங்கள் அதிக பலன்களைத் தரும்.
ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21) : உங்களின் தொழில்முறை வாழ்க்கை வலுவாக இருக்கின்றன. உங்களுக்கான மற்ற பொறுப்புகள் அதிகரிக்கும். நீங்கள் மற்றவர்களுக்கு ஒரு தந்தையாக முன்னின்று உதவிகளை செய்ய தயாராவீர்கள். உங்களை நீங்கள் நன்றாக உணர்வீர்கள்.
மிதுனம் (மே 22 – ஜூன் 21) : நிதிப் பாதுகாப்பை உறுதி செய்வது உங்களின் மேலோட்டமான கவலையாக இருக்கலாம். ஆனால் உளவியல் மட்டத்தில், நான் யார்? அடையாளம் என்ன? என்ற ஆழமான கேள்விகள் உங்களிடம் காணப்படும். உங்களை நீங்களே குறைத்து மதிப்பிட்ட காரணத்தால், மற்றவர்கள் உங்களை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ள அனுமதித்தீர்களா?. தீர்வு உங்கள் கைகளில் தான் உள்ளது!
கடகம் (ஜூன் 22 – ஜூலை 23 ) : நீங்கள் நெருங்கிப் பழகும் உறவின் ஆழத்தை பார்க்க நீங்கள் தயாரகி விட்டீர்கள். மேலோட்டமாக இருந்த உறவுகள் அடுத்தக்கட்ட நிலைக்கு முன்னேறுகின்றன. கடந்த கால குழப்பங்களையும், மூட நம்பிக்கைகளையும் விட்டொழிப்பதற்கான சரியான தருணம் இதுவாகும்.
சிம்மம் ( ஜூலை 24 – ஆகஸ்ட் 23 ): உண்மைக்கும், கற்பனைக்கும் இடையில் இருக்கும் அந்த மெல்லியக் கோடு உங்களை குழப்பமடைய செய்கிறது. எனவே, முக்கியமான விசயங்களுக்கு வாழ்க்கைத் துணையின் கருத்தைக் கேட்டு நடப்பது புத்திசாலித்தனமானது.
கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23 ) : உங்கள் உடல்நிலையில் அதிக கவனம் செலுத்தும் நேரம் வந்துவிட்டது. உணவு முறைகளில் மாற்றம் கொண்டு வருவீர்கள். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது மிகவும் நல்லது.
துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23 ) : பெற்றோர் மற்றும் குழந்தைகள் உடனான உறவில் பல மாற்றங்களை கொண்டு வருவீர்கள். குடும்ப வாழ்வில் அதிகம் கவனம் செலுத்துவீர்கள். அலுவலகப் பணியில் சில மாற்றங்கள் ஏற்படும்.
விருச்சகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22 ) : நாவடக்கத்தின் முக்கியத்துவத்தை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். அடுத்தவரை நீண்டகாலம் நம்பவேண்டாம் என்று முடிவெடுப்பீர்கள். குடும்ப சிக்கல்கள் தீரும். திடீர் முடிவுகள் உங்களை அலைக்கழிக்கும்.
தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 20 ): பணப் பரிமாற்றத்தில் அதிகமான குழப்பம் காணப்படும். பெரிய தொகைகள் இருந்தால் கவனமாக செயல்பட வேண்டும். உங்களிடம் சிறந்த யோசனைகள் இருக்கலாம், நிபுணர்களை கலந்து ஆலோசிப்பது மிகவும் நல்லது.
மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20 ): வாழ்க்கை வெகு விரைவில் மாறக் கூடிய ஒன்று என்பதை நீங்கள் புரிந்துக் கொள்ள வேண்டும். வாழ்க்கையுடன் இணைந்து பயணப்படும் நிச்சயமற்ற தன்மையை புரிந்துக் கொள்ள வெந்டியுஅ நேரமும் இதுதான்.
கும்பம் ( ஜனவரி 21 – பிப்ரவரி 19 ): அனைத்து விசயங்களையும் நீங்கள் தனிப்பட்ட முறையில் எடுத்துக்கொள்ள வாய்ப்புள்ளது. ஆனால், நடக்கும் அனைத்து செயல்களும் உங்களுக்கானது என்று எடுத்துக் கொள்ள வேண்டும். உங்களை நேசிக்கும் அன்பானவர்களின் உணர்வுகளை புரிந்துகொள்ள முயற்சிக்கவும்.
மீனம் ( பிப்ரவரி 20 – மார்ச் 20 ): தெளிவான கொள்கைகளை கடைப்பிடிப்பதன் முக்கியத்துவத்தை காண்பீர்கள். நல்லது எது? , கெட்டது எது? என்ற பாகுப்பாட்டை உணரும் இடத்தில் இருக்கின்றீர்கள். இது, உங்களின் முக்கிய சொத்தாக கருதப்படுகிறது.
Post a Comment
Post a Comment