யார் யாருக்கெல்லாம் மருத்துவக் காப்பீடு தேவை? யாரெல்லாம் தகுதியுடைவர்கள்? விரிவான அலசல் !

Post a Comment

 

maruthuva kappeedu

மருத்துவ காப்பீடு அனைவருக்கும் அவசியமான ஒன்று…யார் யார்‌ இதை பெறலாம் என்று பார்ப்போம்…


பிறந்த குழந்தைக்கு மருத்துவ காப்பீடு


பிறந்த முதல் நொடியிலிருந்து காப்பீடு உள்ளது…ஆனால் அதை அனுபவிக்க குழந்தையின் பெற்றோர் இருவரும் அல்லது யாரேனும் ஒருவர் காப்பீடு வைத்திருக்க வேண்டும்…குழந்தை பிறந்த பின்வரும் முதல் மூன்று மாதங்களுக்கான மருத்துவ‌காப்பீடு முற்றிலும் இலவசம்…அதன்பின் அந்த குழந்தையின் பெயரை, பெயர் வைக்காத பட்சத்தில் நியூ பார்ன் பேபி என்று பிரீமியம் தொகை செலுத்தி‌ சேர்த்துக் கொள்ளலாம்…


புதுமணப்பெண் அல்லது புதுமணப்பையன்


திருமணமான ஆண் அல்லது பெண் ஒருவருக்கு, ஏற்கனவே மருத்துவகாப்பீடு இருக்கும் பட்சத்தில் தன் இணையை தனது பாலிசியிலே இணைத்துக் கொள்ளலாம். ஆனால் திருமணம் முடிந்து 60 நாட்களுக்குள் சேர்க்க வேண்டும்…ஆதாரமாக திருமண அழைப்பிதழ் நகல் சமர்ப்பிக்க வேண்டும்.


நான் எப்போது மருத்துவ காப்பீடு எடுக்கலாம்?


ஒருவர் தனக்கு எதாவது நோயுக்கான அறிகுறி தென்படும் வேளையில் எடுப்பது நல்லதா?


தன்னோடு வேலை பார்க்கும் 28 வயது நபர் திடீரென மாரடைப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு இலட்சங்களை தன் சேமிப்பில் கரைத்துக் கொண்டிருப்பதை பார்த்து நீங்கள் உஷார் ஆகி காப்பீடு எடுக்க போகிறீர்களா?


நாம் ஆரோக்கியமாக இருக்கும் இள வயதிலேயே அல்லது காப்பீடு குறித்த விழிப்புணர்வு உள்ள அனைவரும் தங்களுக்கு மருத்துவ காப்பீடு வைத்திருத்தல் மிக மிக அவசியம்…


ஏன் 25 வயதிலேயே நான் எடுக்க வேண்டும்? 40 வயதை நெருங்கும் போது எடுத்துக் கொள்கிறேன் என்றிருப்பது முட்டாள்தனம்…


ஏன்‌ என்று விளக்குகிறேன்..


மருத்துவ காப்பீடானது உங்களின் வயது மற்றும் உங்களின் உடல் ஆரோக்கியம் பொருத்து பிரீமியத்தொகையை நிர்ணயம் செய்யும்.


25 வயது நபர் சர்க்கரை நோய் மற்றும் இரத்த கொதிப்பு இவற்றால் பாதிப்பு அடைந்த பட்சத்தில் பாலிசி எடுக்க வருகிறார் எனில் அவரின் வயதுக்கான பிரீமியத் தொகையோடு சேர்த்து லோடிங்க் என்ற பெயரில் பத்து சதவீதம் கூடுதலாக பிரீமியம் வசூலிக்கப்படும்…


இதை மறைத்து அவர் பாலிசி எடுத்தால் பிரச்சினை எப்போது வரும் என தெளிவுபடுத்துகிறேன்…


சர்க்கரை நோயால் காலில் புண் ஏற்பட்டு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் எனில் அதற்காக ஏற்படும் மருத்துவ செலவானது காப்பீடு நிறுவனம் ஏற்க மறுக்கும் …ஏனெனில் நீங்கள் காப்பீட்டின் அட்மோஸ்ட் குட் ஃபேய்த் என்னும் விதியை மீறியுள்ளீர்கள்…


வயதான பின்பு நீங்கள் மருத்துவ காப்பீடு எடுத்தால் ரிஸ்க் அதிகம் அதனால் நாங்கள் சம் அசூர்டு அதாவது காப்பீடு தொகை லிமிட் செய்வோம்…60 வயது நபர் முதல் முறையாக காப்பீடு எடுத்தால் அதிகபட்சம் 5 இலட்சம் வரை தான் எடுக்க முடியும்…36 வயதிற்கு மேல் காப்பீடு எடுக்க வந்தால் 10 லட்சம் மட்டுமே அதிக பட்சமாக எடுக்க முடியும்…35 வயதிற்குள் எடுத்தால் 20 இலட்சம் வரை காப்பீடு எடுக்கலாம்…


மேற்கூறிய வரையறை காப்பீடு நிறுவனங்களுக்குள் வேறுபடும்…


60 வயதுக்கு மேல் காப்பீடு எடுத்தால் சில மருத்துவ பரிசோதனைகள் எடுத்த பின்னரே அனுமதிக்கப்படுவர்…


4 வருட விதிவிலக்கு


சில நோய்களுக்கு உண்டாகும் மருத்துவ செலவு, பாலிசி எடுத்த முதல் நான்கு வருடங்களுக்கு கவர் செய்யப்படாது…


உதாரணமாக எனக்கு சைனஸ் பிரச்சினை…2018 ல் பாலிசி எடுக்கிறேன்…2022 வரை அந்த நோய்க்கு என்னால் கிளைம்‌ பெற முடியாது…ஆனால் 35 வயதுக்குட்பட்டோர் எனில் சில நிறுவனங்கள் இந்த 4 வருட விதிவிலக்கை தள்ளுபடி செய்கிறது…


கண்புரை நோய்,மூலம்,சைனஸ் இது போன்ற சில நோய்கள் இந்த 4 வருட விதிவிலக்கின் கீழ் வரும்…


மருத்துவ காப்பீட்டின் நோக்கமானது எதிர்பாராது வரும் மருத்துவ செலவுகளை மட்டுமே ஏற்கும்…


பேறுகால செலவும் விதிவிலக்கே…ஆனால் குரூப் பாலிசியில் இதுவும் கவர் செய்யப்படும்…


குழந்தையின்மைக்கான சிகிச்சைகள், உடல் எடை குறைப்பு அறுவை சிகிச்சைகள், பல் பராமரிப்பு, அழகுபடுத்த மேற்கொள்ளும் சிகிச்சைகள் ஒருபோதும் கவர் செய்யப்படாது…


ஓவர்சீஸ் மெடிகிளைம்


நீங்கள் வெளிநாடு சென்றால் அங்கு மருத்துவ செலவு ஏற்பட்டால் அதை கவர் செய்ய தனியாக மெடிகிளைம் பாலிசி எடுக்க வேண்டும்…


மேலும் சந்தேகம் இருப்பின்‌ அருகிலுள்ள காப்பீடு நிறுவனத்துக்கு சென்று தெளிவடையவும்…

Related Posts

Post a Comment

Subscribe Our Newsletter