ஆரோக்கிய வாழ்விற்கு இதை தவறாம செய்யுங்க !

daily activities for healthy life

 நண்பர்களுக்கு நான் சொல்ல விரும்பும் விஷயம் ஒன்றுதான்... நம் உடல் நலத்திற்குக் காரணம் நாம்தான்..

“தீதும் நன்றும் பிறர் தர வாரா..” உண்மை அல்லவா?

யான் பெற்ற இன்பம் - பெறுக இவ் வையகம் - என்பதுதான் என் அனுபவப் பதிவுகளின் நோக்கம்...


எல்லோருக்கும் எல்லாமும் தெரியும்... தெரியாதவர்கள் யாரும் இல்லை.. இருப்பினும் நம்மைக் கெடுப்பது நம் சோம்பேறித்தனம்தான்... ஆம் நாம் அனைவருமே ஒரு விதத்தில் சோம்பேறிகள்தான்....


என்னய்யா சொல்ல வர்றே...? என்று கேட்கலாம்...

நம் உடல் நலத்திற்கு இரண்டு விஷயங்கள்தான் தேவை

1. உடற் பயிற்சி... 2, எளிய உணவு

இதை நான் அடிக்கடி சொல்லி வருவதற்குக் காரணம் சமூக அக்கறைதான்.. எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும் என்கிற நல்லெண்ணம்தான்...


எல்லா வீடுகளிலும் பூஜை அறைகள் இருக்கும்.. இருக்கட்டும் தவறில்லை... அவரவர் விருப்பம்.. ஆனால் கண்டிப்பாக உடற்பயிற்சி சாதனங்கள் இருக்க வேண்டும். எதுவும் இல்லையா? கவலை வேண்டாம்... தினம் அரை மணி நேரம் ஏதாவது விளையாடுங்கள்.. எந்த விளையாட்டாக இருந்தாலும் வேர்வை வர வேண்டும்


நடப்பது ஒடுவது சைக்கிள் ஒட்டுவது நீச்சலடிப்பது எதுவாக இருந்தாலும் நல்லததுதான்... எந்த வயதிலும் ஆண் - பெண் யாராக இருந்தாலும் தினம் உடற்பயிற்சி செய்வததுதான் வைரஸ் நோய்கள் தாக்காமல் இருக்க - பரவாமல் இருக்க ஒரே வழி... நேரமில்லை என்று நீங்கள் கதை விடலாம்... 10 நிமிடங்கள் பெரிய விஷயமில்லை..


சரி... அதற்கு என்ன செய்ய வேண்டும் குருவே? என்று கேளுங்கள்.... சொல்கிறேன்...

தினம் காலையில் மலம் கழிக்க வேண்டும்... இதுதான் தலையானது... பாதி வியாதிகள் டமால்... சரி.. அதற்கு என்ன செய்ய வேண்டும்? மிகவும் சுலபம். தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும்..(சாதா தண்ணீர்) கீரை தினம் சாப்பிட வேண்டும்... தினம் ஒரு சுண்டல் - வாழைப்பழம் அல்லது கொய்யாப்பழம் அல்லது அத்திப்பழம் சாப்பிட்டுப் பாருங்கள்... தினம் சுலபமாக கழியும்..


அதை விட்டு விட்டு கழிவறையில் அமர்ந்து கொண்டு அவரவர் கடவுளை அழைப்பதால் பலனில்லை... சரி.. அந்த வேலை முடிந்து விட்டதா? நீங்கள் இருக்கும் அறைக்குள்ளேயே மெதுவாக ஒடுங்கள்... அல்லது நிற்கும் இடத்திலேயே கையை வீசி ஒடுங்கள்... பள்ளியில் டிரில் செய்வதை எல்லாம் வீட்டில் 10 நிமிடம் செய்யுங்கள் கவனத்தில் கொள்ளுங்கள் - வேர்வை வர வேண்டும்.. அவ்வளவுதான்...


நேரம் கிடைக்கும்போது எந்த நேரத்திலும் எந்த இடத்திலும் மூச்சுப் பயிற்சி செய்யுங்கள்... நான் சொல்வது சுலபமான மூச்சுப் பயிற்சி - அதாவது மூச்சை நன்றாக இழுத்து நெஞ்சில் அடக்கிக் கொண்டு மெதுவாக நிறுத்தி விடுங்கள்...10 தடவை செய்யுங்கள்..


குளித்து முடித்து இருக்கும் உணவை சாப்பிடுங்கள்.. எந்த மாத்திரையும் மருந்தும் வெங்காயமும் வேண்டாம்...

உங்களை எந்த வைரசும் பற்றாது.. மன தைரியம்தான் பாதி ஆரோக்கியம்.. சரி சார்... அதையும் மீறி ஏதாவது வந்தால்...? வரத்தான் செய்யும்.. எது வேண்டுமானாலும் வரும்...


சாலையில் இடது புறமாகவே செல்கிறோம்... இருப்பினும் பின்னாலேயே வந்து வண்டி மோதுகிறது அல்லவா? அது மாதிரிதான்... வருவதை எதிர் கொள்ளத்தான் வேண்டும்...


இதை எல்லாம் சொல்ல - எழுத - எனக்கு தகுதி உண்டு என நினைக்கிறேன்.. காரணம் .. உடல் நலன் மன நலன் எல்லாம் நம்மிடமே உள்ளது என்ற நம்பிக்கைதான்... சில தினங்களாக மருத்துவரான எங்கள் தம்பி மாப்பிள்ளை என்னை வற்புறுத்தி வருகிறார் -


“மாமா நீங்க சொன்னா கேட்க மாட்டீங்க... எங்கும் போகாதீங்க.. வீட்டிலேயே இருங்க.. துக்க வீட்டுக்கு எல்லாம் போய் வர்றீங்க... முதல்ல சி டி ஸ்கேன் எடுங்க.. செக் பண்ணுங்க...“ - என்று...


என் பழக்கம் டெஸ்ட் எல்லாம் எடுப்பதில்லை.. எடுத்தால் ஏதாவது இருக்கும்... இல்லாத மனிதர்களே கிடையாது.. அது வே நமக்கு பெரிய மன உளைச்சல்.. பயம்... என்னதான் நடக்கும் நடக்கட்டுமே என்கிற மன தைரியம் வேண்டும்... அந்தத் துணிவு மட்டும் இருந்தால் பாதி நோய் நொடி ஒடி விடும்...


அதையும் மீறி டமால் ஆனால்...

ஆகி விட்டுப் போகிறோம்... இருந்து வாழ்ந்து என்ன செய்யப் போகிறோம்? என்ன சாதிக்கப் போகிறோம்?

நோய் நொடி இல்லாமல் விடை பெறுவதற்கும் கொடுத்து வைத்திருக்க வேண்டும் அல்லவா?

full-width

Post a Comment

0 Comments