வேல்முருகன்.. ஷனம் ரெட்டியா போய் நீங்க இப்படி தூக்கலாமா? பார்ப்பவர்களுக்கு எரியுமா எரியாதா?

Post a Comment

bigboss velmurugan

சனம் ஷெட்டிக்கு பாலாஜி முருகதாஸை ஜோடியாக்குவாரு பிக் பாஸுன்னு பார்த்தா, வேல்முருகனை ஜோடியாக்கிட்டாரு. வச்சிக்கவா உன்னை மட்டும் நெஞ்சுக்குள்ள பாட்டுக்கு டான்ஸ் ஆடுறேங்கிற பேர்ல எவ்ளோ ஜம்ப் பண்ண முடியுமோ வேல்முருகன் அந்த அளவுக்கு ஜம்ப் பண்ணிட்டாரு. 


கடைசியா, சனம் ஷெட்டியை அப்படி புடிச்சு தூக்கினதை எல்லாம் சிலர் பார்த்து டென்ஷன் ஆகாமல் இருந்தால் சரி. மோதலில் ஆரம்பித்து காதலில் முடியுமோ.. பிக் பாஸ் தமிழ் 4 போற போக்கை பார்த்தா அப்படித்தான் தெரியுது! முன்னாள் காதலி கிட்டத்தட்ட 22 படங்களில் நடித்தும் ஓ நீங்க படத்துல எல்லாம் நடிச்சு இருக்கீங்களா, ஒரு படத்தோட பெயராச்சும் சொல்லுங்க என கேட்கிற அளவுக்குத் தான் சனம் ஷெட்டி இன்றும் இருக்கிறார். 


ஆனால், அவர் தர்ஷனின் முன்னாள் காதலி என்பது மட்டும் ஊருக்கே தெரிந்த ஒன்று, தர்ஷன் மீது புகார் எல்லாம் கொடுத்து பரபரப்பை கிளப்பினார். பாலாஜியுடன் மோதல் இந்த சீசனில் தொடர்ந்து சனம் ஷெட்டிக்கும் பாலாஜி முருகதாஸுக்கும் தான் மோதல் வெடித்துக் கொண்டே இருக்கிறது. 


10ம் நாள் நிகழ்ச்சியிலும் கிச்சன் ஏரியாவில் பாலாஜி முருகதாஸ், ரியோவின் சிங் தொப்பி, கண்ணாடி எல்லாம் மாட்டிக்கொண்டு வந்து உதவி செய்கிறேன் என்கிற பெயரில் சனம் ஷெட்டியுடன் சண்டை போட்டார். 


வேல்முருகன் ஜோடி என்ன பிக் பாஸ் சுரேஷ் சக்கரவர்த்தியையும் அனிதா சம்பத்தையும் ஜோடி சேர்த்தது போல, பாலாஜி முருகதாஸையும், சனம் ஷெட்டியையும் ஜோடி சேர்ப்பீங்கன்னு பார்த்தா, கடைசியா நாட்டுப்புற பாடகர் வேல்முருகனுட்ன சனமை ஜோடி சேர்த்துட்டீங்க, இருவரும் இணைந்து வச்சிக்கவா உன்னை மட்டும் பாட்டுக்கு டான்ஸ் என்கிற பெயரில் எதையோ ஆடினார்கள். 


இது ரொம்ப சீட்டிங் அந்த பாட்டுக்கு கொடுத்த டிரெஸ்ஸை போட்டுக்கிட்டு சனம் ஷெட்டி கவர்ச்சி புயலா வந்து ஆடுவாருன்னு பார்த்தா, போட்டிருக்க டி சர்ட் மேல அந்த கில்மா டிரெஸ்ஸை போட்டு, ரொம்பவே சீட்டிங் பண்ணி விட்டார். 


இப்படியெல்லாம் பண்ணா உன் படத்தை யாரும்மா வந்து பார்ப்பாங்க என பிக் பாஸ் ரசிகர்கள் அப்பவே இணையத்தில் புலம்ப ஆரம்பித்து விட்டனர். 


அப்படி புடிச்சு தூக்கிட்டாரு டான்ஸ் ஆட சொன்னா சனம் ஷெட்டிக்கு இடமே தராமல் ஒட்டுமொத்த ஏரியாவிலும், டங்கு டங்குன்னு குதித்துக் கொண்டிருந்த வேல்முருகனை மொட்டை பாஸ் சுரேஷ் ஓப்பனாகவே சனத்துக்கிட்டேயே சொல்லி கலாய்ச்சு விட்டுட்டாரு. 


நடனத்தின் போதும் சரி, கடைசியா பந்து போடும் டாஸ்க்கின் போதும் சரி, சனம் ஷெட்டியை என்னாம்மா புடிச்சு தூக்கி வேல் முருகன் பலரது வயிற்றெரிச்சலை வாங்கிக் கட்டிக்கிட்டாருன்னு தெரியுமா.. எரியுமா எரியாதா வேல்முருகன், சனம் ஷெட்டி கிடைச்சுட்டாங்கன்னு பண்ண எக்ஸ்ட்ரா பர்ஃபெர்மான்ஸை அவரது வீட்டம்மா கலா பார்த்திருப்பாங்களே.. 


பிக் பாஸ் வீட்டை விட்டு சொந்த வீட்டுக்கு போட அடி கன்ஃபார்ம். இன்னும் சிலருக்கும் வேல்முருகன் பண்ண சேட்டைகளை எல்லாம் பார்த்தால் எரியத்தானே செய்யும் என நெட்டிசன்கள் பங்கமாக கலாய்த்து வருகின்றனர்.


Related Posts

Post a Comment

Subscribe Our Newsletter