உங்கள் ஆரோக்கியம் சிறந்ததாக அமைய இந்த 8 வழிகள் போதும் !!

Post a Comment

8 best health tips in tamil

ஒரு மனிதனுகு உடல் ஆரோக்கியமே பெரும் செல்வம். அதை முன்னோர்கள் நமக்கு அறிவுறுத்தி சென்றிருக்கிறார்கள். அனுபவ உண்மை அது. எனவேதான் பொருள், பணம், சொத்து சுகத்தை விட, நல்ல தேக ஆரோக்கியத்துடன் இருப்பவனே பெரும் செல்வந்தன் என நம்முடைய மூத்த புலவர் திருவள்ளுவர் கூறியிருக்கிறார். 


என்னதான் செவந்தனாக இருந்தாலும், உடல் ஆரோக்கியம் இல்லாதவன் மன நிம்மதி இழப்பான். இதனால் வாழ்க்கை நரகமாகிவிடும். உணவுக்கு, உடைக்கு, இருப்பிடத்திற்கு கஷ்டபடுகிறவன் கூட, நல்ல மன நிம்மதியுடன் இருப்பான். காரணம் அவன் உடல் உழைப்பு மற்றும் நிம்மதியான தூக்கம், பசிக்கு மட்டும் சாப்பிடுவது போன்ற நல்ல பழக்கங்களால் தான். 


சரி, அனைவரும் நலமுடன் இருக்க வேண்டுமானால் என்ன செய்வது? இதோ இந்த 8 வழிகளை மட்டும் தொடர்ந்து பின்பற்றினால், நல்ல தேக ஆரோக்கியத்துடன், மன நலத்துடன் இருப்பது நிச்சயம். 


உடல் ஆரோக்கிமாக அமைய 8 வழிகள் 


1. போதுமான தண்ணீர் குடிப்பது

2. சத்தான உணவு

3. தினம் ஒரு பழம்

4. உடற்பயிற்சி

5. நல்ல தூக்கம்

6. செல்போன் தவிர்ப்பது

7. உடல் எடை பேணுவது

8. மருத்துவ பரிசோதனை


1. போதுமான தண்ணீர் குடிப்பது

ஒரு மனிதனுக்கு உணவில் முதல் தேவை தண்ணீர்தான். உலகத்தில் முதலில் நீர்தான் தோன்றியது என்று கூறுவார்கள். அதிலிருந்துதான் உயிர்கள் தோன்றின என்று ஆராயச்சியாளர்கள் கூறுவார்கள். நம் உடலில் 90% நீர் தான் இருக்கிறது. அப்படிப்பட்ட உடலுக்கு போதுமான நீரை உணவாக கொடுப்பது மிக நல்லது. 


காலையில் எழுந்தவுடன் இரண்டு சொம்பு நீர் (1 லிட்டர்) வெறும் வயிற்றில் அருந்திவர உடல் சூடு, மலச்சிக்கல் குறையும். சரும ம் பொலிவு பெறும். காலை கடன் (மலர்) மிக எளிதாக வெளியேறும். 

ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் 3 லிட்டர் நீர் பருகுவது அவசியம். அத்துடன் இது சிறுநீரக கோளாறு வராமல் தடுத்திடும். உடலில் நீர் சத்து குறைந்தால் பல்வேறு பக்க விளைவுகள் ஏற்படும். உடல் உபாதைகளுக்கு ஆளாக நேரிடும். 

சிலர் அதிக நீர் அருந்தினால், சிறு நீர் அடிக்கடி கழிக்க நேரிடும் என் நினைப்பார்கள். குறிப்பாக பெண்களுக்கு வெளியில் செல்லும்பொழுது இந்த பிரச்னை எழும். ஆனால் அது தவறான செயல். கூடுமானவரை முழுமையான உடலுக்குத் தேவையான நீர்த்தேவையை நாம் பூர்த்தி செய்தே ஆக வேண்டும். குழந்தைகளுக்கும் தேவையான நீராகரத்தை கொடுத்து உடலில் போதுமான நீர் இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். 


2. சத்தான உணவு


சிலர் ஒரே வகையான உணவை அதிகம் விரும்பி உண்பர். அது தவறான பழக்கம். உடலுக்குத் தேவையான சத்துக்களை வழங்கக்கூடிய அனைத்து வகையான சத்துக்கள் அடங்கிய உணவுகளை வாரந்தோறும், பிரித்து பட்டியல் இட்டு சமைத்து உண்ண வேண்டும். அப்பொழுதுதான் உடலுக்குத் தேவையான சரிவிகித உணவு - சத்துக்கள் கிடைக்கும். 

வாரம் இருமுறை உணவில் கீரை இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். 

அரிசி உணவு ஒரு பகுதி, மற்ற காய்கறி, கீரை உணவுகள் மூன்று பகுதி என பிரித்து எடுத்து உணவு உண்ண வேண்டும். அப்பொழுதுதான் உடல் ஆரோக்கியம் பாதுகாப்பபடும். 


3. தினம் ஒரு பழம்


விலை உயர்ந்த பழ வகைகள மட்டும் உடலுக்கு ஆரோக்கியம் கொடுக்கும் என நம்புவது அறிவீனம். உங்கள் அருகாமையில் கிடைக்கும் பழங்கள் அனைத்துமே உடலுக்கு நன்மை அளிக்கக் கூடியவைதான். சீசனுக்கு கிடைக்கும் பழ வகைகளை தினம் ஒன்றாக எடுத்துக்கொள்ளலாம். 

வாழை, மா, பலாப்பழம், நாவல் பழம், ஆப்பிள், சப்போட்டா, அன்னாசி, ப ப்பாளி என்ன கிடைத்தாலும் தினம் ஒரு பழத்தை எடுத்துக்கொள்ளலாம். சாப்பாட்டிற்கு பிறகு 2 அல்லது 3 மணி நேரம் கழித்து எடுத்துக்கொள்வது நல்லது. இது மலச்சிக்கல் வராமல் பாதுகாத்திடும். பழங்களில் அதிக நார்சத்து இருப்பதால் செரிமானத்திற்கு நல்லது. 


4. உடற் பயிற்சி


தினம் உடற்பயிற்சி செய்வது நல்லது. சிலருக்கு நேரமிருப்பதில்லை என்று வருத்தப்படுவார்கள். அப்படி நேரமில்லை என்பவர்கள், உடலுக்கு உறுதி தன்மை கொடுக்க விருப்பமில்லை என்று சொல்லாமல் சொல்பவர்கள். உண்மையில் கிடைக்கும் நேரத்தில் ஒரு அரைமணி நேரம் அல்லது வேலைக்கு இடையே கிடைக்கும் நேரத்தில் கூட உடற்பயிற்சி செய்துகொள்ளலாம். திட்டமிடல் நேரமின்மை என்ற வார்த்தைக்கு இடம் கொடுக்காமல் பார்த்துக்கொள்ளும். 


வாக்கிங், ஜாக்கிங், ஜிம் உடற்பயிற்சி, யோகா, தியானம் என ஏதாவது ஒரு உடல் மற்றும் மன அமைதிக்கான பயிற்சி உங்கள் உடலை திடகாத்திரமாக வைத்துக்கொள்ள உதவும். 


5. நல்ல தூக்கம். 


எந்த வேலையாக இருந்தாலும், இரவில் அதிக நேரம் கண்விழிக்காமல், விரைவில் தூங்க சென்று விடும் பழக்கத்தை மேற்கொள்ள வேண்டும். குறைந்த பட்சம் 8 மணி நேர தூக்கம் ஒரு மனிதனுக்கு அவசியத்தேவை. 

இரவு நேரம் பணிபுரிபவர்களுக்கு இது விதிவிலக்கு. என்றாலும் அவர்களும் தேவையான தூக்கத்தை பெற்றுக்கொள்ள வேண்டும். 

குறைந்த பட்சம் ஒவ்வொருவரும் 6 மணி நேரமாவது தூங்குவது அவசியம். எனக்கு தூக்கமே வரவில்லை என்பவர்கள், இரவில் சாப்பிட்டிற்கு பிறகு 3 பல் பூண்டு எடுத்து அதை  இரண்டு மூன்றாக கட் செய்து, ஒரு தட்டில் பத்து நிமிடம் வைத்திருந்து, பிறகு மாத்திரை விழுங்குவது போல நீர் அருந்தி விழுங்க வேண்டும். அதன் பிறகு சிறிது நேரத்திற்குள் உங்களுக்கு தூக்கம் கண்ணை சொக்கும். Related Posts

Post a Comment

Subscribe Our Newsletter