குழந்தைகள் வீட்டில் இதெல்லாம் செய்யவே கூடாது… 43 ரூல்ஸ்… !!!

kulanthaigal munbu ithai seiyathinga

குழந்தைகள் முன் இதெல்லாம் செய்ய கூடாது, பேச கூடாது என விதிமுறைகள் உள்ளன. இவற்றை ஒவ்வொரு பெற்றோரும் புரிந்து செயல்படுவது நல்லது. குழந்தைதானே என அவர்கள் முன் நீங்கள் செய்யும் தவறுகள். குழந்தையின் தவறுகளுக்கு ஆரம்பமாகலாம்.

குழந்தை முன்னிலையில் இதையெல்லாம் தவிருங்கள்… சரி செய்யுங்கள்...

#1.குழந்தைகள் நிறையத் தவறு செய்வார்கள். அதைக் கண்டிக்காமல் விட்டு விட்டு கொஞ்சி கொண்டே இருக்க வேண்டாம். 

#2.தந்தையை, தாயை, பெரியவர்களைக் குழந்தை அடிக்கும் போது பார்த்துக் கொண்டு இருப்பது தவறு. குழந்தையை திருத்தாவிட்டால் பெரியவர்கள் ஆனதும் திருத்தவே முடியாமல் போகும். 

#3.’தண்டனைத் தருகிறேன்’ எனக் குழந்தையிடம் அன்பாக இல்லாமல் இருப்பதும் தவறுதான். 

#4.குழந்தைகள் முன்னிலையில் மற்றோரு குழந்தையுடன் ஒப்பிட்டு பேச கூடாது. அதுபோல், மற்றொரு குழந்தையை ஒப்பிட்டு தன் குழந்தையை தாழ்த்தி மற்றவர்களிடம் பேச கூடாது. 

#5.தன் குழந்தையைப் பற்றி தாங்களே அதிகமாக பெருமையாக பேசுவதைத் தவிர்க்க வேண்டும். 

#6.உன்னை ஹாஸ்டலில் விட்டுவிடுவேன். உன்னை வேறு யாருக்காவது கொடுத்து விடுவேன் என பயமுறுத்தி வைக்க கூடாது. 

#7.’தனக்கு உதவி செய்ய யாருமே இல்லை’ என்ற நிலையில் குழந்தை உணரக் கூடாது. அது போன்ற சூழலை குழந்தைக்கு உருவாக்காதீர்கள். குழந்தை சொல்வதை தயவு செய்து காதுக் கொடுத்து கேளுங்கள். 

#8.தேவையில்லாத காரணங்களுக்காக குழந்தை இன்னொருவரை சார்ந்து இருக்கும்படி வைக்க வேண்டாம். 

#9.ஆண் குழந்தையோ பெண் குழந்தையோ தெரிந்த நபரிடமோ அதிகம் பழக்கமில்லாத நபரிடமோ போக மறுத்தால் வலுகட்டாயமாகக் குழந்தையை அவர்களிடம் விட வேண்டாம். 

#10.குழந்தைகள் தவறு செய்யும்போது தடுக்க வேண்டாம். தவறு செய்யும்போதுதான் அவர்கள் கற்று கொள்வார்கள். தவறு செய்கையில் குழந்தையின் உடலுக்கு ஆபத்து என்றால் மட்டும் தடுத்துவிடுங்கள்.

#11.குழந்தை கவலையிலே இருந்தால், அதைப் பார்த்தும் நீங்கள் அலட்சியமாக இருக்க வேண்டாம். 

#12.குழந்தை மன உளைச்சலில் இருந்தால் நீங்கள் சாக்லேட்டோ பிஸ்கெட்டோ வாங்கித் தந்து சமாளிக்க கூடாது. என்ன பிரச்னை எனக் கேட்டு தீர்த்து வையுங்கள். மருத்துவரிடம் அழைத்துச் செல்லுங்கள். 

#13.குழந்தை தோல்வி அடைந்தால் அவர்களைத் திட்டுவது, அடிப்பது போன்றவற்றை செய்யாதீர்கள். தோல்வியிலிருந்து குழந்தையை மீட்க அனைத்து முயற்சிகளையும் நீங்கள் செய்யுங்கள். 

#14.குழந்தைக்கு விருப்பம் இல்லாத வகுப்பில் சேர்த்து விட வேண்டாம். கட்டாயப்படுத்தி பாடல் கற்கும் வகுப்பு, நடனம், நீச்சல் என எதையும் வலுகட்டாயமாக சேர்க்க வேண்டாம். 

#15.குழந்தையின் கேள்விகளுக்கு பொறுமையாகவும் விளக்கமாகவும் பதில் அளியுங்கள். கேள்வி கேட்பதற்காக குழந்தையை அடிக்க வேண்டாம். இதையும் படிக்க: குழந்தை வளர்ப்பில் தந்தை செய்ய தவறுவது என்னென்ன? 

#16.குழந்தையின் பொருட்களை வைத்துக்கொள்ள ஒரு இடமோ ஒரு அலமாரியோ ஒரு அறையோ கொடுக்கலாம். குழந்தைகெல்லாம் எதற்கு தனி இடம் என அலட்சியப் படுத்த வேண்டாம். 

#17.குழந்தைகளின் வயதுக்கு மீறிய வேலைகளையும் பொறுப்புகளையும் தரக்கூடாது. குழந்தையால் செய்ய முடிவதை மட்டும் கொடுக்கலாம். 

#18.குழந்தை வெளியே போக வேண்டும் எனக் கேட்டால், அவர்களைத் திட்ட கூடாது. வசதி இல்லாவிட்டாலும் பீச், பார்க் போன்ற இடங்களுக்கு அழைத்துச் செல்லலாம். 

#19.வெவ்வேறு குடும்ப முறையில் வரும் குழந்தைகளுடன் விளையாட அனுமதியுங்கள். யாருடனும் சேராதே வீட்டிலே இரு எனக் குழந்தையை அடைத்து வைப்பதைத் தவிர்க்கவும். 

#20.குழந்தையின் பொழுதுபோக்குகளை வளர்த்துக்கொள்ள பென்சில், பெயின்ட் பாக்ஸ், பொம்மைகள் போன்றவற்றை வாங்கித் தரலாம். டிவி பார் என டிவியைப் பார்க்கக் குழந்தைகளை விடாதீர்கள். 

#21.எல்லாக் குழந்தையும் வளர்ச்சியிலும் படிப்பிலும் ஒரே மாதிரி இருக்க மாட்டார்கள். அவர்களை ஒப்பிட்டு திட்ட வேண்டாம். கேலி செய்ய வேண்டாம். 

#22.குண்டு, ஒல்லி, கருப்பு, வெள்ளை, மூக்கு சப்பை, வாய் கோணல் எனக் குழந்தையின் உடல் தோற்றத்தை வைத்து கேலி செய்ய கூடாது. இதையும் படிக்க: குழந்தை வளர்ப்பில் தாய்மார்கள் செய்யும் தவறுகள் என்னென்ன? 

#23.குழந்தைகளிடம் கெட்ட வார்த்தைகளைப் பேசுவது, குழந்தை முன்னிலையில் கெட்ட வார்த்தைகளை பேசுவதைத் தவிர்க்க வேண்டும். 

#24.குழந்தையிடம் மற்றவர்களைப் பற்றி தவறாகச் சொல்லி, சிறு வயதிலே தவறான கண்ணோட்டத்தை வளர்க்க கூடாது. 

#25.பெண் குழந்தைகள் விளையாட கூடாது, வீட்டிலே இரு எனச் சொல்லி வளர்க்கக் கூடாது. 

#26.ஆண் குழந்தைகள் விளையாடலாம். ஆண் குழந்தைகள் என்னவேண்டுமென்றாலும் செய்யலாம் என்ற மமதையை குழந்தையின் மனதில் தோன்ற செய்யாதீர்கள். 

#27.குழந்தையை பொத்தி பொத்திப் பாதுகாக்காதீர்கள். மற்ற குழந்தைகளைப் போல அவர்களும் சுகந்திரமாக செயல்பட உதவி செய்யுங்கள். 

#28.குழந்தை ஏதாவது ஒரு போட்டியில் தோற்றுவிட்டால், நீங்களும் சேர்ந்து அழுது குழந்தையை பலவீனமாக மாற்றாதீர்கள். 

#29.குழந்தையின் முடிவுகளை தாங்களே எப்போதும் எடுக்காதீர்கள். குழந்தைகளையும் அவ்வப்போது சிந்திக்க விடுங்கள். 

#30.எப்போதும் படிப்பு, படிப்பு எனக் குழந்தையை டார்ச்சர் செய்ய கூடாது. குழந்தையின் விருப்பத்துக்கு ஏற்று நடக்க அனுமதியுங்கள்


#31.ஐந்து வயதுக்குள் குழந்தைக்கு சொல்லித் தர வேண்டிய நற்பண்புகளை சொல்லிக் கொடுக்காமல் இருக்க வேண்டாம். தாயும் தந்தையும் வீட்டு நபர்கள் யாரேனும் நற்பண்புகளைச் சொல்லி தருவது அவசியம். 

#32.குழந்தை அடம் பிடிக்கிறது எனக் கேட்டது எல்லாம் வாங்கி தர கூடாது. அடத்தை சமாளித்து, குழந்தைக்கு அறிவுரை சொல்லுங்கள். 

#33.குழந்தை முன்னிலையில் தாய் தந்தை பாலியல் தொடர்பான சீண்டல்களை செய்ய கூடாது. 


#34.குழந்தை முன்னிலையில் பாலியல் தொடர்பான காட்சிகளை பார்க்க வேண்டாம். 

#35.வெளி இடங்களிலோ வீட்டின் வரவேற்பறை அனைவரின் முன்னிலையிலோ குழந்தையின் ஆடையைக் கழட்டி, வேறு ஆடையை மாட்ட வேண்டாம். குழந்தையை தனி அறைக்கு அழைத்து சென்று ஆடை மாற்றுங்கள். 

#36.குழந்தை முன் தாயோ தந்தையோ ஆடைகளை மாற்ற கூடாது. 4 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் தனது தாய், தந்தையின் மறைக்கப்பட்ட உறுப்புகளைப் பார்த்து குழம்பிப் போகலாம். 

#37. ஆறு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளை பெரியவர்கள் குளிக்க வைப்பதைத் தவிர்க்கலாம். அவர்களுக்கு குளிக்க சொல்லிக் கொடுத்துவிடுங்கள். 

#38. இந்த மதம், இந்தக் கடவுள் எனக் குழந்தைகள் மனதில் எதையும் திணிக்க கூடாது. 

#39. தங்களுடைய கனவுகளைக் குழந்தைகள் மூலமாக நிறைவேற்றிக் கொள்ள முயற்சிக்க கூடாது. 

#40. குழந்தை முன் தாய், தந்தை சண்டையிட கூடாது. அடிப்பது, திட்டுவது, பிறரைத் தவறாக பேசுவது கூடாது. 

#41. உடன் பிறந்த குழந்தைகளிடமே பாசம், வெறுப்பு, கோபம் என வித்தியாசம் காண்பிக்க கூடாது. அனைத்துக் குழந்தைகளுக்கும் அனைத்தும் சரி சமம் எனச் சொல்லி வளர்க்க வேண்டும். 

#42. ஆண், பெண் குழந்தைகள் எனப் பாலினம் பார்த்து, சிறப்பு சலுகைகளைத் தரக்கூடாது. 

#43. குழந்தையை எப்போதும் தனிமையில் விடக்கூடாது. பெரியவர்களின் முன்னிலையிலே குழந்தைகள் இருக்கும் படி சூழலை அமைத்துக் கொடுங்கள். 

Post a Comment

0 Comments