முடக்கத்தான் கீரை சூப் வைப்பது எப்படி?

mudakathan keerai soup seivathu eppadi

இப்போது குழந்தைகள் முதல், பெரியவர்கள் வரை வயது வித்தியாசமில்லாமல் மூட்டு வலியால் அவதிபடுகின்றனர். சில நோய் காரணிகளால் முடக்கு வாதம் ஏற்பட்டு நடக்க முடியாமல் தவிக்கின்றனர். அப்படி தவிப்பவர்கள் "முடக்கத்தான் கீரை சூப்" வைத்து குடித்தால் விரைவில் அது குணமாகிறது. 


சித்த மருத்துவத்தில் இந்த கீரை மிகவும் பயன்படுகிறது. குறிப்பாக வயோதிகர்களுக்கு இந்த பிரச்னை அடிக்கடி ஏற்படும். இதை "சூப்" செய்தோ, சட்னியாக அரைத்தோ, அல்லது தோசை மாவில் "முடக்கத்தான் கீரையை அரைத்து கலந்தோ பயன்படுத்தலாம். 


எந்த ஒரு பக்க விளைவுகளும் இல்லாத து. இயற்கையாக கிடைப்பதால் "பக்க விளைவுகள்" ஏதும் இல்லை. 


இது கிராம புறங்களில் மிக இயல்பாக கிடைக்கிறது. வயல் வரப்புகளில், புல் மேடுகளில், புதர்களில், ஏரி கரையோரங்களில் என எங்கு பார்த்தாலும் படந்து காணப்படும். 

mudakkathan keerai soup


குறிப்பாக மழைக்காலங்களில் அதிகளவு காணப்படும். இதை பச்சையாகவோ, அல்லது சமைத்தோ, ஏதேனும் ஒரு வடிவில் உண்டு வர, தாங்க முடியாத மூட்டு வலி கூட பறந்து போய்விடும். 


முடக்கத்தான் கீரை சூப் வைப்பது எப்படி? (Video) 

 என்பதை தெரிந்துகொள்வோம். 

தேவையான பொருட்கள்:

 

முடகத்தான் கீரை - 100 கிராம்

சீரகம் - 1 தேக்கரண்டி

மிளகு - 1 தேக்கரண்டி

தக்காளி - 1

பூண்டு - 5 பற்கள்

சாம்பார் வெங்காயம் - 5

கறிவேப்பிலை - சிறிதளவு

கொத்தமல்லி - சிறிதளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

 

முடகத்தான் கீரையை நீரில் அலசி சுத்தம் செய்யவும். அதன் காம்புடன் சேர்த்து நறுக்கி கொள்ளவும். நறுக்கிய முடகத்தான் கீரையை  தண்ணீர் ஊற்றி, சீரகம், மிளகு, வெங்காயம், தக்காளி, பூண்டு சேர்த்து வேக வைக்க வேண்டும். 

 

நன்கு கொதித்த பின்பு அதனை இறக்கி வடிகட்டி எடுத்து அதனுடன் நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லி இலைகளை போட்டு பரிமாறவும்.

 

குறிப்பு:

 

இதன் பயன்கள் என்னவென்றால், நமது மூட்டுகளில் உள்ள வலியை குறைப்பதுதான். மூட்டுக்களில் ஏற்படும் உபாதைகளுக்கு காரணம் மூட்டுகளில் தங்கும் யூரிக் அமிலம், புரதம், கொழுப்பு திரட்சி, சுண்ணாம்பு, பாஸ்பரஸ் படிவங்கள் தான். இவைகளை கரைத்து வெளியேற்றும்  சக்தி முடகத்தான் கீரைக்கு உண்டு. 

 

முடகத்தான் சூப் வாரம் ஒருமுறை உண்டு வந்தால் முடக்கு வாதம், நரம்பு தளர்ச்சி போன்ற வியாதிகள் நம்மை அண்டாது.


Post a Comment

0 Comments