பணத்தை முறையாக சேமிப்பது எப்படி?

 

how to save money in tamil

சேமிப்பின் அருமை எல்லோருக்கும் தெரியும், ஆனால் அதை யாரும் பின்தொடர்வதில்லை. ஏனென்றால் இன்றைய வாழ்க்கையை சந்தோஷமாக வாழ்வதே சிறந்த வாழ்க்கை என்று பலரும் தங்களை ஏமாற்றி வருகிறார்கள். உண்மையில் சேமிப்பு என்பது உங்கள் எதிர்காலத்தை இனிமையாக்கும். எல்லோர் வாழ்விலும் ஏதாவது ஒரு கஷ்டங்கள் வரும், அதை எதிர்கொள்ள இந்த சேமிப்பு உதவும். நாம் சேமிப்பதற்கான சில வழிகளை இங்கே காணலாம்.

30 நாட்கள் அட்டவணை

நாம் நம்முடைய மாத சம்பளத்தை வாங்கிய உடன் அதை வாங்கிய நாள் முதல் செலவு செய்ய தொடங்கி விடுகிறோம். இதனால் நம்முடைய சம்பளப் பணம் எங்கே செல்கிறது என்று நமக்குத் தெரிவதில்லை. எனவே நீங்கள் செலவு செய்யும் ஒவ்வொரு பணத்தையும் அடுத்த 30 நாட்களுக்கு எழுதி வையுங்கள். பிறகு நீங்கள் முப்பதாவது நாள் எந்த பொருட்களை உபயோகிக்காமல் அப்படியே இருந்தது, தேவையான பொருள், தேவையற்ற பொருளை எல்லாவற்றையும் பாருங்கள். அதில் நீங்கள் எவ்வளவு பணத்தை வீணாக்கி உள்ளீர்கள் என்பதைக் கணக்கிடுங்கள். இதுதான் உங்களின் அடுத்த மாதத்திற்கான சேமிப்பு.

10 சதவீத பணத்தை உங்களுக்காக வைத்துக் கொள்ளுங்கள்

நாம் சம்பாதிக்கும் பணத்தை நாம் எப்போதும் மற்ற தேவைகளுக்காக பயன்படுத்துகிறோம். உதாரணத்திற்கு ஆடைகள், காலணிகள், வீட்டு உபயோகப் பொருட்கள், அழகு மேம்பாட்டு பொருட்கள் என தேவை மற்றும் தேவையில்லாத பொருட்களை வாங்குகிறோம். இதனால் நமது சம்பளம் மிக விரைவில் முடிவடைந்துவிடும். எனவே நீங்கள் எப்போதும் உங்கள் சம்பள பணத்தில் இருந்து 10% சேமித்தால் அது இறுதியில் உங்களுக்கு உதவும். அப்படி செலவுகள் சரியாக செய்து விட்டால் இறுதியில் அந்த 10 சதவீத பணம் உங்களுக்கான சேமிப்பாக மாறிவிடும். இதைத் தொடர்ந்து செய்வதன் மூலம் நீங்கள் சிறிய தொழில் செய்வதற்கான பணம் உங்களிடம் வந்தடையும். எனவே எதிர்காலம் அழகாக இருப்பதற்கு 10 சதவீத சேமிப்பு சிறந்தது.

10 சதவீதம் கூடுதலாக சம்பாதியுங்கள்

சேமிப்புகள் என்னதான் அதிகரித்துக் கொண்டே இருந்தாலும் நம்முடைய சம்பாத்தியமும் அதிகமாக வேண்டும். எனவே முடிந்த வரை உங்களுக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் ஏதாவது சிறிய வேலையை செய்து பணத்தை சம்பாதிக்க முயற்சி செய்யுங்கள், அல்லது இணையதளம் மூலமாக பணத்தைச் சம்பாதியுங்கள். இது உங்கள் சேமிப்பை அதிகரித்து உங்கள் கஷ்டங்களை குறைக்கும்.

திட்டங்களை வகுத்து செலவு செய்யுங்கள்

மாதத்திற்கு ஒருமுறை நீங்கள் மளிகை பொருட்கள் மற்றும் வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்க கடைக்கு செல்வீர்கள். எனவே செல்வதற்கு முன்பாக உங்களுக்கு என்னென்ன பொருட்கள் தேவை என்பதை எழுதி வைத்துக் கொள்ளுங்கள். அதை அப்படியே வாங்குவதன் மூலமாக உங்கள் பணம் மிச்சமாகும். எந்த ஒரு தடையும் இல்லாமல் நாம் கடைக்கு சென்றால் பார்ப்பவை அனைத்தையும் வாங்கி பணத்தை வீணாக்குவோம்.

உங்கள் நேரத்தை சேமியுங்கள்

பொழுதுபோக்கிற்காக நாம் தொலைக்காட்சிகளுக்கு தேவையில்லாமல் பணம் வீனாக்கி வருகிறோம். எனவே அதைத் துண்டித்து பொழுது போக்கை தவிர்த்திடுங்கள். இதனால் உங்கள் நேரமும் மிச்சமடையும், அந்த நேரத்தில் நீங்கள் உபயோகமுள்ள ஏதாவது செயலை செய்யலாம். நாம் எங்கேயாவது பயணம் செலவு செய்யும்போது நம் தொலைபேசியிலேயே நம்முடைய பொழுதைப் போக்கிக் கொள்ளலாம்.

வங்கியில் சேமிப்பு கணக்கை தொடங்குங்கள்

வங்கிகளில் 10 வருடம் அல்லது 20 வருடம் என சேமிப்பு கணக்குகளை தொடங்குங்கள். அதே போல் உங்கள் முதுமை காலங்களில் வரவிருக்கும் உதவித் தொகையையும் சரியாக பயன்படுத்துங்கள். நிலம், நகை போன்றவைகளினால் பணத்தை முதலீடு செய்யுங்கள். இது உங்களுக்கு எப்போதும் கை கொடுக்கும்.

பணத்தை முடிந்த வரை சேமித்து ஏதாவது நல்ல முதலீடு செய்யுங்கள். குடும்பத்தில் இருப்பவர்கள் அனைவரும் ஏதாவது தொழில் செய்து பணத்தை சேமித்து ஒன்றாக திட்டமிடுவது சிறந்தது. இதனால் உங்கள் எதிர்காலம் வளமாக அமையும்.

Post a Comment

0 Comments