நோய் எதிர்ப்பு சக்தி கொடுக்கும் உணவுகள் !

 

ethirppu sakthi tharum unavugal

''தொற்று வந்த பின்னும் உரிய நேரத்தில் உரிய உணவும் மருந்தும் அவர் எடுக்காததால் தான் அவரைக் காப்பாற்ற முடியவில்லை!''கொரோனா தொற்றில் இறந்த பலரைப் பற்றி மருத்துவர்கள் சொல்லும் பெரும்பான்மைக் காரணம் இதுதான்.

எந்தத் தொற்று நோய்க்குமே மூன்று கட்டங்கள் உள்ளன. கடுமையான கட்டம், நோயிலிருந்து வெற்றிபெற துவங்கும் கட்டம், நோயிலிருந்து மீளும் கட்டம் என்று இதை விவரிக்கிறார்கள் மருத்துவர்கள்.

உடலில் வைரஸ் தொற்று ஏற்பட்ட உடனே அதற்கான அறிகுறிகளாக காய்ச்சல், இருமல், தொண்டைப்புண் மற்றும் உடல் வலி ஏற்படுகிறது. அதை உணராதபட்சத்தில் நோயின் தாக்கம் அதிகரித்து, அடுத்தடுத்த கட்டங்களை நோக்கிச் செல்கிறது.

முதற்கட்டமான தீவிரம் அல்லது கடுமையான நிலையில் தசைகளில் சேமிக்கப்பட்டுள்ள ஆற்றலை அவசர தேவைக்காக உடல் பெற்றுக் கொள்கிறது. அதனால் பசியின்மை, உடல்சோர்வு மற்றும் நீர்ச்சத்து குறைபாடு ஏற்படும். இது இயல்பானது. இதற்கு அச்சப்படத்தேவையில்லை என்கின்றனர், இயற்கை மருத்துவர்கள்.

நடைப்பயிற்சி, யோகா, மூச்சுப்பயிற்சி, நல்ல துாக்கம், நேர்மறை எண்ணங்கள், நம்பிக்கையூட்டும் பேச்சு போன்றவை நம் உடல் உள்ளத்தின் பலத்தை உறுதி செய்வதில் முக்கியப் பங்காற்றுகின்றன. 

ஊட்டச்சத்தும், நோய் எதிர்ப்புச் சக்தியும் தான் நம்மைக் காக்கும் முக்கியக் காரணி என்று விளக்குகின்றனர் நேச்சுரோபதி மருத்துவர்கள்.

உடல்நிலை, வயதுக்கேற்ப எந்த வகையான உணவை உட்கொள்ள வேண்டும் என்பதை இயற்கை மருத்துவர்களிடம் கேட்டு அறிந்து கொள்வது அவசியம்.

எதைச் சாப்பிடுவது என்பது முக்கியம்... எது எதைச் சாப்பிடக்கூடாது என்பது அதை விட முக்கியம்!


கபத்தை நீக்கவல்ல கீரைகள்!


''கபம் இருக்கும்போது கீரையும் பழமும் எடுக்கக்கூடாது என கூறுவர். ஆனால் கொத்தமல்லி, புதினா, துாதுவளை, முசுமுசுக்கை, வெங்காயத்தாள், பசலைக் கீரை, கறிவேப்பிலை, மணத்தக்காளி போன்றவை தனியாகவோ அல்லது கூட்டாகவோ செய்து சாப்பிடுவது கபத்தை முறிக்கும். 

வைட்டமின்'சி' உள்ள ஆரஞ்சு, சாத்துகுடி, நெல்லிக்காய் கொய்யா, ஆப்பிள், குடைமிளகாய், லிச்சி பழம், பப்பாளி, அன்னாசி, மாம்பழம் சாறாகவோ அல்லது தனி பழமாக குறைந்த அளவு சாப்பிடலாம்!''


நுரையீரலை காக்கும் உணவுகள்!


பூண்டு, இஞ்சி, சிறிய வெங்காயம் குடை மிளகாய் உணவில் சற்று அதிகமாக சேர்த்துக் கொள்ளலாம். பூண்டு பால், இஞ்சி கஷாயம், வெங்காயச் சாறுடன் தேன் கலந்து சாப்பிடலாம். சோம்பு, பச்சை கற்பூரம், கிராம்பு, லவங்கம் ஆகியவற்றை நம் உணவில் கூடுதலாகச் சேர்த்துக் கொள்ளலாம்.

ஒரு சில கீரை வகைகள், வைட்டமின் 'சி' அதிகமுள்ள பழங்களை உரிய மருத்துவர்களின் பரிந்துரையில் சாப்பிடலாம். 

முளைகட்டிய பயிறு கருப்பு சுண்டல், அவரை விதை, பீன்ஸ் விதைகள், ராகி, கம்பு, சோளம், மக்காச்சோளம் தினமும் குறைந்தது, 75 கிராம் அளவு சாப்பிட வேண்டும். 

இரும்பு சத்தை அளிக்கும் துத்தநாகம், வைட்டமின் 'இ' நிறைந்த உணவுகள் பாதாம், முந்திரிப் பருப்பு, அக்ரூட், வேர்க்கடலை, சிவப்பு அரிசி, கருப்பு எள் போன்றவற்றை சரியான விகிதத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

Post a Comment

0 Comments