காதலர் மோதல் ! நடிகை தற்கொ லை ! என்னய்யா நடக்குது உலகத்துல.. ! cinema news

Post a Comment

ஒரு நடிகைக்கு பல காதலர்கள்... அவர்களுக்குள் சண்டை.. அதனால் நடிகை தன்னை தானே மாய்த்துக்கொண்ட சம்பவம் சினிமா உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ஐதரா பாத்தில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்தேறியுள்ளது. பிரபல தெலுங்கு டிவி நடிகை ஸ்வணியை ஒரு பட தயாரிப்பாளர் காதலித்துள்ளார். அவர் மட்டுமில்லாமல் மூன்று பேர் காதலித்துள்ளனர். அவர்களுக்கிடையே ஏற்பட்ட மோதல் அந்த நடிகையை சாக போகும் அளவிற்கு தூண்டியுள்ளது. இதனை போலிசார் விசாரித்து வருகின்றனர். 

ஐதராபாத் மதுரா நகரைச் சேர்ந்தவர் ஸ்ராவணி. தெலுங்கு டிவி நடிகையான இவர் , பிரபல டிவி தொடர்களில் நடித்து வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் இவர் அவருடைய வீட்டில் தூக் கிட்டு தற் கொ லை செய்துள்ளார். சந்தகத்தின் பேரில் அவருடைய காதலரை தேவராஜ் என்பவரை கைது செய்துள்ளனர். 

அசோக் ரெட்டியிடம் விசாரணை நடத்த, போலீசார் முடிவு செய்தனர். அதற்கு முன்பாக அவர் தலைமறைவு ஆனார். இது குறித்து, போலீஸ் அதிகாரி ஸ்ரீனிவாஸ் கூறிய தகவல்: ஸ்ராவணியும், சாய் கிருஷ்ணாவும் காதலித்துள்ளனர். பின், கருத்து வேறுபாடு காரணமாக, பிரிந்துள்ளனர். 

அதன்பிறகு, தேவராஜ் ரெட்டி என்பவரை அவர் காதலித்துஉள்ளார். இந்நிலையில், அசோக் ரெட்டி தயாரித்த படத்தில், ஸ்ராவணி நடித்துள்ளார். அப்போது இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த மூன்று பேருமே, அவரை திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி அளித்து, ஏமாற்றி பயன்படுத்தி உள்ளனர். இதனாலேயே மனம் உடைந்து அவர் தற்கொலை செய்து கொண்டார்.

இந்த விவகாரத்தில், காதலர்கள் மூன்று பேருக்கும் இடையே, மோதல் இருந்ததாக தெரிகிறது. இதன் காரணமாக, அவர் தற்கொலை செய்து கொண்டாரா என்ற கோணத்திலும், விசாரணை நடத்தி வருகிறோம்.

சாய் கிருஷ்ணா, அசோக் ரெட்டி ஆகியோரால், உடல்ரீதியாக துன்புறுத்தப் பட்டதாக, ஸ்ராவணி பேசிய ஆடியோ பதிவை கைப்பற்றி உள்ளோம். அசோக் ரெட்டியை தேடி வருகிறோம். அவர் விரைவில் கைது செய்யப்படுவார்.இவ்வாறு, அவர் கூறினார்.

நடிகையை தாக்கியதாக அவரது முன்னால் காதலர் சாய் கிருஷ்ணாவை கைது செய்துள்ளனர். 

Related Posts

Post a Comment

Subscribe Our Newsletter