பிரபல காமெடி நடிகர் திடீர் மறைவு ! ரசிகர்கள் அதிர்ச்சி !

Post a Comment

comedy nadigar maranam

 இவரைப் பார்த்தால் வடிவேலுவை பார்க்கத் தேவையில்லை. இவர் வடிவேல் போல் அச்சு அசலாக நடித்துக் காட்டியதால் இவர் வடிவேல் பாலாஜி என்று அழைக்கப்பட்டார்.


மதுரையை சேர்ந்த வடிவேல் பாலாஜி, முதலில் மிமிக்ரி ஆர்ட்டிஸ்ட்டாக தன் வாழ்க்கையை தொடங்கினார். பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிப்பரப்பான "கலக்கப் போவது யாரு" நிகழ்ச்சியின் மூலம் இவர் உலகின் அனைத்து பட்டி தொட்டி மூலைகளிலும் பிரபலமானார். 


வடிவேல் பாணியில் இவர் நடித்த அனைத்துக் காமெடிகளும் சூப்பர் ஹிட் ஆகின. அதன் பிறகு விஜய் டிவியின் நட்சத்திர நடிகராக திகழ்ந்த இவர், பட்டி தொட்டிகளில் நடக்கும் விழாக்களுக்குச் சென்று நிகழ்ச்சி நடத்தி ஓரளவு பணம், புகழ் ஈட்டினார். குறிப்பிட்ட நாட்களுக்குப் பிறகு இவருக்கு அதிக வாய்ப்புகள் அமையாத்தால் மன வருத்தமுடன் காணப்பட்டார். 


இதனிடையே திடீரென அவருக்கு பக்க வாதம் வந்து இரு கைகளும் முடங்கியது. பிரபல தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த நிலமையில், ஒரு கட்டத்திற்குப் பிறகு, அங்கு மருத்துவ சிகிச்சை அளிக்க போதுமான நிதி வசதி இல்லாத்தால், அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். 


இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அவர் இயற்கை எய்தினார். அவருக்கு வயது 43. இவருக்கு ஒரு மகள் மற்றும் மகன் உள்ளனர். தன்னுடைய இயல்பான பேச்சு, நகைச்சுவையால் தமிழக ரசிகர்களை பெற்றிருந்த இவரின் மரணம் அனைவரையும் துக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. 

Related Posts

There is no other posts in this category.

Post a Comment

Subscribe Our Newsletter