ஆண்கள் குப்புற படுப்பது நல்லதா? மருத்துவ உலகம் என்ன சொல்கிறது?

aangal kuppura padukkalama



குப்புற படுப்பது என்பது ஆண்கள், பெண்கள் பலரும் செய்யும் ஒரு இயல்பான செயல். ஆனால் அப்படி படுப்பதால் உடலுக்கு ஏதனும் தீங்கு விளைவிக்குமா? அல்லது அது நல்லதா? மருத்துவ ரீதியாக ஏதேனும் விளக்கங்கள் உள்ளதா? என்பதை தெரிந்துகொள்வோம். 


பொதுவாக ஆணோ பெண்ணோ குப்புறப்படுத்து உறங்குவது கழுத்து மற்றும் முதுகெலும்பு இரண்டுக்கும் நல்லதில்லை என்பது மருத்துவ உலகின் அபிப்பியாயம்.

அவ்வாறு உறங்குவதால் மேலே தள்ளப்படும் வயிற்று பாகம் முதுகெலும்பின் வில்லைகளையும் அதன் இடையே இருக்கும் நரம்புகளையும் அதிகமாக அழுத்தி வளைவை உண்டாக்கும். இது உடலின் சில பாகங்களில் வலியை தரும்.

மேலும் அப்படி படுக்கும் போது தலையை நேராக வைத்து மூச்சு விடுவது தடைப்படும். அப்போது மூச்சு விடுவதற்காக தலையை ஒரு பக்கமாக வைத்து படுப்பதால் கழுத்தில் அதன் பக்க விளைவுகள் இருக்கும். இது நாளடைவில் கழுத்து எலும்பு வலியாக மாறிவிடலாம்.

அப்படி உறங்குவதால் குறட்டை விடுவது என்பது சற்று குறையலாம். அது ஒன்று தான் சிலருக்கு கிடைக்கும் நல்ல செயல்.

யோகாசனப் பயிற்சிகளில் சில ஆசனங்கள் குப்புற படுத்து தான் செய்ய வேண்டும். ஆனால் முறையாக அதை பயில வேண்டும். அதனால் உடலுக்கு நல்லதே தவிர தீமை கிடையாது. எனவே இந்த இரண்டையும் ஒப்பிடமுடியாது.

Post a Comment

0 Comments