பிக்பாஸ் சீசன் 4 ல் பங்கேற்க மறுத்த பிரபலம் ! வெளியான பிண்ணனி .... !!!!

Post a Comment

big boss season 4

இன்றைய இளைய தலைமுறை வெகுவாக விரும்பி பார்ப்பது தனியார் தொலைக்காட்சி வழங்கும் பிக்பாஸ் தான்.  பிரபல தனியார் தொலைகாட்சியில் உலக நாயகன் கமல் (Kamal Hassan) தொகுத்து வழங்கி வரும் சூப்பர் நிகழ்ச்சி பிக் பாஸ் (Bigg Boss). இந்த நிகழ்ச்சி முதல் 3 சீசன் வெற்றிகரமாக முடிந்த நிலையில், தற்பொழுது நான்காவது சீசன் கோவிட் தொற்றுநோய் காரணமாக,  ஜூலை நடுப்பகுதியில் ஒளிப்பரப்ப வேண்டிய நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டது. 

இதற்கான வேலைகள் மிக மும்மரமாக நடந்து வரும் நிலையில், எதிர்வரும் அக்டோபர் மாதத்தில் இந்த நிகழ்ச்சி மீண்டும் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

அதே போல, ரியல் ஷோ பிக் பாஸ் தமிழ் சீசன் 4-ல் கலந்துகொள்ளும் பங்கேற்பாளர்களின் பட்டியல் தினம் தோறும் வெளியாகி வருகிறது. அது எந்தளவிற்கு உண்மை என தெரியாத நிலையில், சமீபத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப் போகிறார் என வைரலாக எதிர்பார்க்கப்பட்ட அவர் கருண் ராமன் தான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வில்லை என்பதை அவரே திட்டவட்டமாக கூறியுள்ளார்.

என்றாலும் பிக் பாஸ் தமிழ் சீசன் 4-ல் கலந்துகொள்ள ஓகே கூறிய 11 பிரபலங்கள் யார் யார் தெரியுமா?

 பிரபல நடிகைகளான நயன்தாரா, திரிஷா, ரைசா வில்சன், நமீதா என ஏகப்பட்ட பிரபலங்களுக்கு செலிபிரிட்டிகளுக்கு ஸ்டைலிஸ்ட் ஆக பணியாற்றி கருண் ராமன், இந்த ஆண்டு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப் போகிறார் என்ற தகவல்கள் வெளியாயின. 

ஆனால் தற்போது இது தொடர்பாக கருண் ராமன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், நான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை என்பதை ஆணித்தரமாக கூறியுள்ளார்.  அதை விட ஒரு மடங்கு சூப்பரான ஒரு வேலை எனக்கு இப்போ இருக்கு. அதனால் வீண் வதந்திகளை நம்பி யாரும் ஏமாந்து போக வேண்டாம் என கேட்டுக்கொண்டார். 

இதற்கிடையில் பிக் பாஸ் தமிழ் சீசன் 4-ல் கலந்துகொள்ளும் 11 உறுதிப்படுத்தப்பட்ட போட்டியாளர்களின் பட்டியல் இன்று வெளியாகியுள்ளது. பதினான்கு பிரபலங்கள் இதுவரை இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க சம்மதம் தெரிவித்திருப்பதாகவும்,  அவர்கள் அனைவரும் யார் யார் என்பதை அறிவிக்கும் பட்டியல் வெளியாகியுள்ளது. பிக் பாஸ் தமிழ் 11 உறுதிப்படுத்தப்பட்ட போட்டியாளர்களின் பட்டியல் இதோ..

 • சனம் ஷெட்டி
 • கிரன் ரதொட்
 • கருண் ராமன் 
 • ஷாலு ஷம்மு
 • ரியோ ராஜ்
 • அமுதவாணன்
 • அமிர்தா ஐயர்
 • சிவானி நாராயணன்
 • புகழ்
 • ஆர் ஜே வினோத்
 • பாலாஜி முருகதாஸ் 

எனவே நிகழ்ச்சியை ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கிறார்கள். பங்கேற்பாளர்களின் கேரக்டர் மிகவும் சுவராஷ்யமாக இருக்கும் என்பதால் இந்த ஷோவிற்கு எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கும். ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கிறார்கள். Related Posts

Post a Comment

Subscribe Our Newsletter