உங்கள் வீட்டிற்கு திடீரென எறும்புகள் படை எடுத்தால் என்ன அர்த்தம் தெரியுமா?

erumbu thollai
வீடுகள் என்று இருந்தால் எறும்புகள் கட்டாயமாக வரும். இதற்கெல்லாம் காரண காரியங்கள் இருக்கின்றதா? என்ற கேள்வி உங்கள் மனதில் இருந்தால், இந்த பதிவு உங்களுக்கானது அல்ல.

எறும்புகள் படை எடுத்து வருவதற்கும், காரணம் உண்டா? என்று தெரிந்து கொள்ளும் ஆர்வம் உங்களிடம் இருந்தால், இந்த பதிவை தொடர்ந்து படிக்கலாம்.

குடித்தனம் செய்யும் வீட்டில் திடீரென்று எரும்பு வருவதற்கு காரணம், நம் வீட்டில் உணவு பண்டங்கள் சரியான முறையில் பராமரிக்கப்படாமல் இருப்பதும் ஒன்று. இதைத் தவிர்த்து வெயில் காலங்களில், குளிர்ச்சியான இடங்களைத் தேடி எறும்புகள் வருவது இயற்கைதான்.

இவை எதுவுமே இல்லாமல் உங்கள் வீட்டு வெளிப்புறங்களில், கதவுகளுக்கு பின் பக்கங்களில், இப்படி எறும்புகள் வருவதற்கு வாய்ப்பே இல்லாத சில இடங்களில் திடீரென்று சாரைசாரையாக வரும். இந்த எறும்புகள் உங்களுக்கு எதை உணர்த்துகிறது என்பதை நீங்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள ஒரு அவசியம் இருக்கிறது.

அதைப் பற்றித்தான் தெரிந்து கொள்ள போகிறோம். எதிர்பாராமல் கூட்டம் கூட்டமாக உங்கள் வீட்டிற்குள் படையெடுக்கும் பிள்ளையார் எறும்பாக இருந்தாலும் சரி. கட்டெறும்பாக இருந்தாலும் சரி.

யாருடைய கஷ்டத்திற்கோ, நீங்கள் காரணமாக இருக்கிறீர்கள் என்பதை குறிக்கிறது. அதாவது உங்கள் மேல் பாசம் வைத்துள்ள ஒருவரிடம், நீங்கள் நீண்ட நாட்களாக பேசாமல் இருக்கும் பட்சத்தில், அதை நினைவுபடுத்த கூட இந்த எறும்புகளானது உங்கள் வீட்டில் படையெடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதாவது உங்களுக்கு நெருங்கிய சொந்தமாக இருந்தாலும், தூரத்து சொந்தமாக இருந்தாலும் உங்கள் மீது உண்மையான பாசம் வைத்திருப்பவர்கள் யாரையும் நீங்கள் தள்ளி வைத்திருக்கிறீர்கள் என்பதை குறிக்கின்றது.

பெண்களாக இருந்தால் கட்டாயம் அம்மா அப்பாவிடம் பேசாமல் இருக்க மாட்டீர்கள். உங்களுடைய மாமனார் மாமியார் உங்களுக்கு ஆகாதவர்கள் ஆக இருந்தாலும் கூட, அவர்கள் மனதில் உங்கள் மீது கொஞ்சம் பாசம் இருக்க வாய்ப்பு உண்டு.

அவர்களின் ஏக்கத்திற்கு நீங்கள் காரணமாக இருந்தாலும், அதை வலியுறுத்த இந்த எறும்புகள் உங்கள் வீடு தேடி வரும்.

சில ஆண்கள் தங்களுடைய தாய் தந்தையரிடம் சண்டை போட்டுக் கொண்டு பேசாமல் இருப்பவர்களும் உள்ளார்கள். அப்படி, இருக்கும் பட்சத்தில், அது மிகப்பெரிய தவறு.

உங்களிடம் பாசம் வைத்திருப்பவர்கள் உங்களை நினைத்து கொண்டு ஏங்கிக் கொண்டிருக்கும் பட்சத்தில், அது பெரிய பாவத்தை கொண்டு வந்து, நம் சந்ததியினருக்கு சேர்த்து விடும் என்பதை நினைவில் கொண்டு,

உங்கள் சொந்த பந்தங்களை, அலட்சியப்படுத்தாமல் நேரில் சென்று பார்க்க முடியவில்லை என்றாலும், தொலைபேசியிலாவது உரையாடும் வாய்ப்பை  ஏற்படுத்திக்கொள்ளுங்கள்.

சில வீடுகளில் கணவன் மனைவி பிரிந்து இருக்கும் பட்சத்தில், அவர்கள் மனதில் பாசம் இருக்க வாய்ப்பு உள்ளது.

மனதிற்குள்ளேயே ஆயிரம் முறை மன்னிப்பு கேட்பவர்கள், வெளியில் ஒருமுறை மன்னிப்பு கேட்டால் போதுமே, பிரச்சனைகள் தீர்ந்துவிடும். இதை எத்தனை பேர் நம்புவீர்கள் என்பது தெரியாது. ஆனால், சித்தர்களின் நூல்களில் குறிப்பிட்டுள்ள, குறிப்புகள் தான் இவை அனைத்துமே.

யாருடைய ஏக்கத்திற்கும், யாருடைய ஏமாற்றத்திற்கும் கட்டாயம் நீங்கள் காரணமாக இருக்காதீர்கள். உங்கள் மீது பாசம் வைத்து இருப்பவர்களை உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றாலும்,

உங்களுக்கு நெருங்கிய சொந்தங்களாக இருந்தால், அவர்களிடம் பேசுவதில் எந்த தவறும் இல்லை. குறிப்பாக குழந்தைகளை தாத்தா பாட்டிகளிடம் பேச வைப்பது அவசியம்.

மகனாக இருந்தாலும் மகளாக இருந்தாலும், தன்னுடைய தாய் தந்தையரிடம் பேசுவது அவசியம். மருமகள், மருமகன் தங்களுடைய மாமனார் மாமியாரிடம் பேச வேண்டியது அவசியம்.

இந்த வரிசையில் அத்தை, மாமா, பெரியம்மா பெரியப்பா என்று யார் இருந்தாலும் உங்கள் மீது பாசம் வைத்திருப்பவர்கள் என்றால் அவர்களை ஒதுக்கி வைக்காமல் பேசுவதே நல்லது.

இப்படி உங்க சொந்த பந்தங்களில் யாரையாவது நீங்கள் நீண்ட நாட்களாக பேசாமல் ஒதுக்கி வைத்து உள்ளீர்களா? என்று சிந்தித்துப் பாருங்கள்!

உங்கள் வீட்டில் எறும்புகள் படை எடுத்து வருவதற்கு இது கூட ஒரு காரணமாக இருக்கலாம். உங்களால் சில சொந்த பந்தங்கள் இடம் பேசுவதற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால்,

பேச முடியாத சூழ்நிலை என்றால் கொஞ்சம் அரிசி மாவு அல்லது ரவையிலோ சிறிதளவு சர்க்கரையை சேர்த்து கலந்து கோவில்களுக்கு சென்று அங்கு இருக்கும்  எறுப்புகளுக்கு உணவாக அளிக்கலாம்.

இதேபோல், வீட்டின் அருகில் செடி கொடிகள் இருந்தால் அங்கு வாழும் எறும்புக்கு, அரிசி மாவு சர்க்கரை ரவை சேர்த்து, உணவாக போடலாம். உங்கள் வீட்டில் வரும் எறும்புகள் காணாமல் போய்விடும்.

சொந்தபந்தங்கள் என்றுமே ஒன்றுகூடி இருப்பது நல்லது தானே இதை நமக்கு கூட்டம் கூட்டமாக, என்றுமே ஒன்றாக வாழும் எறும்புக் கூட்டம் வலியுறுத்துகிறது என்று சொன்னால் அதை நம்புவதில் ஒன்றும் தவறு இல்லையே!

உங்கள் மீது அன்பு வைத்திருப்பவர்கள், யாருடைய ஏக்கத்திற்கும் நீங்கள் காரணமாக இருக்கக் கூடாது என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

Post a Comment

0 Comments