வாய் துர்நாற்றம் தீர இயற்கை வழிமுறைகள் !



சிலர் பக்கத்தில் வந்தால் "கப்பு" ஆளை த்தூக்கும். அடேங்கப்பா... இந்த ஆள் கிட்ட பேசறதவிட, பாழும் கிணத்துல விழுந்து செத்து போயிடலாம் போல ஒரு வெறுப்பு உணர்வு தோன்றும். ஆளையே வாய் துற்நாற்றம் கொன்று விடும் அளவிற்கு மிக மோசமானதாக இருக்கும். 

ஆனால் எதிர் இருப்பவர் நண்பரோ அல்லது மிக நெருக்கமான சொந்தக் கார்ரோ இருந்து விட்டால், அவரிடமிருந்து எப்படி தப்பிப்பது என்ற எண்ணமே அதிகம் வந்து போகும். 

சொல்லவும் முடியாமல், மெல்லவும் முடியாமல் இருக்கும் அந்த தருணம் இருக்கிறதே... அப்பப் ப்பா... அதைத்தான் தர்ம சங்கடம் என்று சொல்வார்கள்.

vai natram neenga



அதே துர்நாற்றம் நமக்கே வந்து விட்டால், ... அதை நினைத்தாலே அருவருப்பாக உள்ளதா? அப்படி வந்து விட்டால் என்ன செய்வது? அதற்கான ரெமிடி தான் நாம் இங்கே பார்க்கப்போவது.

பொதுவாக இதுபோன்ற வாய் துற்நாற்றம் ஜீரண கோளாறுகளால் ஏற்படக்கூடியவை. இதனால் பெருங்குடலில் புண்கள் ஆகி, அதன் வெளிப்பாடாக வாயின் வழியாக அந்த நாற்றம் குடலைப் பிடுங்கும் அளவிற்கு வெறியேறும். 

சரியாக பல் துலக்காத காரணத்தில் கூட வாய் துர்நாற்றம் ஏற்படும்.

இதனை உடனடியாக தவிர்க்க வேண்டுமானால், வாயில் நறுமணம் வீசும் சூயிங்கம் போன்றவற்றை மெல்லலாம். அல்லது இயற்கையில் கிடைக்கும் புதினா இலைகளை 4, 5 எடுத்து மென்று சாறை விழுங்கிவிட்டு துப்பலாம்.

ஏலக்காய் 2 எடுத்து வாயில் நன்றாக மென்று,சாறை விழுங்கிவிட்டு சக்கையை துப்பி விடலாம். இதனால் வாயில் உடனடி நறுமணம் ஏற்பட்டு, துர்நாற்றத்தை வராமல் அழிழ்த்து விடும். 

ஆனால் இதெல்லாம் உடனடி தீர்வு மட்டும்தான். உண்மையிலே வாய் துர்நாற்றத்திற்கு தீர்வு வேண்டுமனால் அல்சரை குணமாக்க வேண்டும்.

vai thurnatram neenga



அதற்கு இயற்கைமுறையை பயன்படுத்தலாம். உதாரணமாக தினமும் காலையில் எழுந்தவுடன் தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணைய் இரண்டு ஸ்பூன் வாயில் ஊற்றி 30 நிமிடம் வரை "ஆயில் புல்லிங்" செய்யலாம். 

இதனால் வாயில் உள்ள கெட்ட நாற்றத்தை உண்டாக்கும் கிருமிகள் அழிக்கப்பட்டு, பற்கள் மட்டும் வாய் சுவர்களில் அடங்கியிருக்கும் கிருமிகளை அழித்து, குடலுக்கு , அல்சருக்கு நல்ல மாமருந்தாக செயல்படுகிறது. 

remedy for mouth bad smell



  • தொடர்ந்து 30 நாட்கள் இப்படி ஆயில் புல்லிங் செய்து வர நல்ல குணம் தெரியும்.
  • மிளகுதக்காளி இலைகளை வெறும் வயிற்றில் மென்று தின்று வர, நாட்பட்ட அல்சர் வெகு விரைவில் குணமாகும். 
  • அதே போல தேங்காயை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர அல்சர் குணமாகும். தேங்காய் பால் எடுத்தும் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வரலாம்.
  • அடிக்கடி மிதமான பத த்துடன் சாப்பிடும் பத த்தில் உள்ள தேங்காயை சாப்பிட்டு வரலாம்.
  • வெந்தயத்தை 48 நாட்கள் இரண்டு ஸ்பூன் அளவு எடுத்து வெறும் வயிற்றில் மென்று சாப்பிட்டு வர கண்டிப்பாக அல்சர் குணமாகும்.

இப்படி செய்வதன் மூலம் அல்சர் குணமாவதுடன், வாய் துர்நாற்றம் போயே போய்விடும். அப்புறம் என்ன? உங்கள் வாயும் நறுமணம் வீசும். !

Post a Comment

0 Comments