அல்சர் தொல்லை இனி அறவே இல்லை. இப்படி செய்தால் போதும் !!!

Post a Comment
ulcer gunamaga
குடல் எரிச்சல், வயிற்று வலி, சாப்பிடும்போது ஏற்படும் அதிக நெஞ்செரிச்சல் போன்றவைகள் அல்சர் இருப்பதற்கான அறிகுறிகள். அல்சர் எப்படி ஏற்படுகின்றதென்றால், அதிக நேரம் கண் விழிப்பது, தேவையில்லாத கார உணவுகளை உண்பது. அதிக கோபம், குழப்பமான மனநிலை போன்ற காரணங்களால் வயிற்றில் ஆசிட் அதிகமாக சுரந்து "வயிற்றுப்புண்" "அல்சர்" ஏற்படுகிறது.

அல்சரை குணமாக்க இயற்கை மருந்து


  • அல்சர் விரைவாக குணமாக வெள்ளை பூசணியை ஜூஸ் செய்து குடிக்கலாம். 
  • முருங்கை கீரையை நன்றாக வேக வைத்து, அதை மைய அரைத்து, தயிரில் கலந்து சாப்பிடலாம். 
  • யோகாசனம் (வஜ்ஜிராசனம்) செய்வதன் மூலம் அல்சரை குறைக்கலாம். 


ஜீரண கோளாறு காரணம் என்ன?

இன்று அநேகர் ஜீரண கோளாறால் அவதிப்படுகின்றனர். அதற்கு காரணம் பாஸ்ட் புட் மற்றும் பதப்படுத்தப்பட்ட காய்கறி உணவுகள் தான். குறிப்பாக இட்லி  மாவை பிரிட்ஜ்ல் வைத்து ஒரு வாரத்திற்கு கூட பயன்படுத்துகின்றனர். இதனால் ஜீரண கோளாறு ஏற்படுகிறது. ஓட்டல்களில் கூட இதையே தான் செய்கின்றனர். இதனால் அல்சர், வயிற்று வலி, அஜீரண கோளாறு ஏற்படுகிறது. மூட்டு வலி வந்து விடும். இயற்கை தன்மையில் உணவுப்பொருட்கள் இருந்தால் மட்டுமே உடல் கோளாறுகள் எதுவும் ஏற்படுவதில்லை.

இதையும் வாசியுங்கள்: தொப்பை குறைய மூச்சுப் பயிற்சி 

சர்க்கரை நோயாளிகள் பழங்கள் சாப்பிடலாமா?

கண்டிப்பாக சாப்பிடலாம். அளவாக சாப்பிட வேண்டும். கொழுப்பில் நல்ல/கெட்ட கொழுப்பு இருப்பது போல, பழங்களில் உள்ள சர்க்கரை நல்ல சர்க்கரை, கெட்ட சர்க்கரை என இருக்கிறது. பழங்களில் நல்ல சர்க்கரையே அதிகம் இருக்கும். இதனால் சர்க்கரை நோயாளிகள் பழங்கள் சாப்பிடுவதால் ஒன்று ஏற்படாது. ஆனால் ஜூஸ் செய்து குடிப்பதை தவிர்க்க வேண்டும்.
மன அழுத்தம் தீர

மன அழுத்தம் இன்று பலருக்கும் ஏற்படுகிறது. செய்யும் வேலை, இருக்கும் சூழ்நிலை இப்படி பல காரணங்கள். நல்ல மனநிலையில் இருக்கும்போது உடலில் சுரக்கும் ஹார்மோன்கள் உடலை எதுவும் செய்வதில்லை. ஆனால் கோபமான, பதட்டமான மனநிலையில் உள்ளபோது சுரக்கும் ஹார்மோன்கள் அதிக பாதிப்பை ஏற்படுத்துகிறது. கெட்ட கார்மோன் சுரப்பினால் ரத்த அழுத்தம், மன அழுத்தம் , உடல் உபாதைகள் ஏற்படுகின்றன. 

ஆக்சிஜன் குறைவு நிவர்த்தி செய்தல்


கம்ப்யூட்டரில் வேலை செய்பவர்களுக்கு ஆக்சிஜன் சக்தி
கம்ப்யூட்டரில் வேலை செயபவர்களுக்கு தேவையான ஆக்சிஜன் சக்தி கிடைப்பதில்லை. காரணம் அவர்கள் வேலையில் மூழ்கிவிடும்பொழுது, முழுமையாக சுவாசிப்பதில்லை. இதனால் தேவையான அளவு ஆக்சிஜன் கிடைப்பதில்லை.

இதற்கு தீர்வு மூச்சு பயற்சி ஒன்று தான். மூச்சுப் பயிற்சி செய்யும்பொழுது நுரையீரல் விரிவடைந்து போதுமான காற்றினை உள்ளிழுத்து தேவையான காற்றை உயிர் சக்தியாக மாற்றுகிறது. இயற்கை உணவு மற்றும் யோக பயற்சியால் ஆக்சிஜன் அளவு அதிகரித்து உயிர் சக்தி கிடைக்கும். ஆயுள் கூடும். 

Related Posts

Post a Comment

Subscribe Our Newsletter