உடல் துர்நாற்றம் நீங்க உண்ண வேண்டிய உணவுகள்

உடல் துர்நாற்றம் என்பது இன்று பலருக்கும் இருக்கக் கூடிய ஒரு பொதுவான பிரச்னை.நன்றாக சோப்பு போட்டுக்குளித்தாலும் கூட, அடுத்த சில நிமிடங்களில் ஈரம் காய்வதற்குள்ளாகவே அக்குளில் அந்த முடை நாற்றம் எடுக்க ஆரம்பித்துவிடும். 

அதிக அளவு தண்ணீர் குடித்தால் கூட, அந்த நாற்றம் போவதில்லை. விலை உயர்ந்த body spray பயன்படுத்தி உடல் துர்நாற்றத்தை மறைக்க பலரும் முயற்சி செய்தாலும், சில மணி நேரங்களில் உடல் பழைய நிலைமைக்கு மாறி காட்டிக்கொடுத்துவிடும். 

பொது இடங்களில் நடக்கும் நிகழ்வுகளில் அதிக நேரம் பங்கேற்க முடியாமல் தவிப்பர். இவ்வாறான,
  •  உடல் துர்நாற்றம் ஏன் ஏற்படுகிறது? 
  • என்ன செய்தால் அதை விரட்டலாம்? 
  • என்னென்ன உணவுகள் உடல் வெளியிடும் கெட்ட நாற்றத்தை போக்கக் கூடியவை 

என்பதை இந்த கட்டுரையில் தெரிந்துகொள்ளலாம்.  


உடல் துர்நாற்றம் பலருக்கும் இருக்கும் ஒரு பெரிய பிரச்னை. ஒரு விழாவுக்கு சென்றாலோ, பொது இடங்களில் உலவும்பொழுதே அதிக வியர்வையுடன் ஏற்படும் உடல் துர்நாற்றம் பிறரை முகம் சுளிக்க வைக்கும்.  

சில நேரங்களில் உபயோகிக்கும் "பர்ப்யூம்" களையும் மீறி வியர்வை நாற்றம் காட்டிக் கொடுத்துவிடும். சிலர் இந்த பிரச்னையாலேயே பொது காரியங்களில் கலந்து கொள்ளாமல் வீட்டிலேயே இருப்பர். 

இந்த கடுமையான பிரன்யை மன ரீதியாக பாதிப்பை ஏற்படுத்தும். ஆனால் உடல் துர்நாற்றத்தை சில உணவுகளை சாப்பிடுவதன் மூலம் போக்கிடலாம். சில நாட்கள் அதற்கு ஆனாலும், உடனடி நிவாரணம் கொடுக்கும் உணவுகளும் உண்டு.

உடல் துர்நாற்றத்தைப் போக்கிடும் உணவுகள் 


நாம் உண்ணும் உணவுகளைக் கொண்டே உடல் துர்நாற்றத்தை மிக எளிதாக போக்கிடலாம். 

எலுமிச்சை: 

சாதாரணமாக கிடைக்கும் எலுமிச்சையை வெறும் வயிற்றில் உப்பு கலந்து "ஜூஸ்" ஆக குடிக்க உடல் நாற்றம் இருக்கும் இடம் தெரியாமல் போய்விடும். இதில் உள்ள அசிட்டிக் தன்மை உடல் துர்நாற்றத்தை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களை கட்டுப்படுத்தும் தன்மை கொண்டது. இதில் அதிக மருத்துவ குணங்கள் நிறைந்திருப்பதால் பயன்படுத்துவதால் எந்த வித பக்க விளைவுகளும் ஏற்படுவதில்லை. 

அதிகமாக வியர்வை மற்றும் கெட்ட நாற்றத்தை ஏற்படுத்தும் அக்குள் பகுதிகளுக்கு எலுமிச்சை இரண்டாக வெட்டி எடுத்து பூசி, அரை மணி நேரம் கழித்து உலர்ந்த பின்பு குளிக்க உடனடியாக அந்த பகுதியிலிருக்கும் கெட்ட நாற்றம் போய்விடும். 

எப்படி பயன்படுத்துவது?



கிரீன் டீ 


இதில் உள்ள ஆன்டி ஆக்சிடன்கள் உடலை துர்நாற்றம் ஏற்படுத்தும் பாக்டீரியாக்களிலிருந்து காக்கிறது. உடலில் குளுட்டாதியோன ன் உற்பத்திக்கு உதவி செய்து, உடலில் உள்ள கெட்ட கிருமிகளை ஒழிக்கிறது. இதில் உள்ள பாலிபீனல்கள் வாய்துர்நாற்றத்தை உருவாக்கும் கிருமிகளை அழித்து, வாய்க்கு புத்துணர்ச்சியைக் கொடுக்கிறது. 

கிரீன் டீ எப்படி பயன்படுத்துவது?


ஒரு சிறிய பாத்திரத்தில் ஒரு டம்பளர் நீர் ஊற்றி, அதில் அரை டீஸ்பூன் கீரின் டீ தூளை போட்டு இரண்டு அல்லது மூன்று நிமிடங்கள் கொதிக்க வைத்து இறக்கி, குடிக்க உகந்த சூட்டில் (வெது வெதுப்பாக) காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். 

தினமும் இப்படி செய்து வந்தால் உடலில் தங்கியிருக்கும் கழிவுகளை வெளியேற்றி, உடலிருந்து வெளிப்படும் கெட்ட நாற்றத்தை போக்கிடும். 

தக்காளி: 


இது ஒரு மிகச்சிறந்த சரும கிருமி நாசினியாக செயல்படுகிறது. உடல், முகம் போன்றவற்றில் இதை நன்றாக அரைத்து பூசி கால் அல்லது அரை மணி நேரம் உடலை ஊறவிட்டு, பிறகு குளிப்பதன் மூலம் உடலில் உள்ள அழுக்குகள் மற்றும் நாற்றத்தை தோற்றுவிக்கும் கெட்ட பாக்டீரியாக்களை அழித்து உடலில் நல்ல மணம் வீச செய்கிறது. 

தக்காளி ஜூஸ் செய்து குடிப்பதன் மூலமும் இந்த பிரச்னையை போக்கலாம். அல்லது ஒரு முழுத் தக்காளியை கட் செய்து சாலட்டில் சேர்த்து சாப்பிடலாம். 

தேங்காய் எண்ணெய். 

காலங்காலம்மாக தேங்காய் எண்ணெய் தோலுக்கு மினுமினுப்பு ஏற்படுத்த பயன்படுத்தப்ட்டு வருகிறது. இது ஒரு நேச்சுரல் Deodorant ஆக செயல்படுகிறது. 

இதில் உள்ள ஆன்ட்டி மைக்ரோபியல் பண்புகள் உடல் துர்நாற்றத்தை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களின் வளர்ச்சியைத் தடுக்க உதவும். தேங்காய் எண்ணைய்யை சமையலில் பயன்படுத்தி வந்தால், ஜீரண கோளாறுகளை தீர்த்து, சருமத்தை மினு மினுக்கச் செய்யும். 

தேங்காய் எண்ணெய் பயன்படுத்துதல் 

ஒன்று அல்லது இரண்டு டேபிள்ஸ்பூன் தேங்காய் எண்ணையை வெறும் வாயில் ஊற்றி,  Oil Pulling செய்வதன் மூலம் வாய் துர்நாற்றத்தை தடுத்திடலாம். குறைந்த பட்சம் கால் மணி நேரமாவது வாயில் வைத்து, வாயை மூடி கொப்புளிக்க வேண்டும். 

ரோஸ்மேரி


இதில் உள்ள மென்தால் மற்றும் குளோரோபில் உடலில் ஏற்படும் துர்நாற்றத்தை நீக்கி, அதற்கு காரணமாக இருக்கும் பாக்டீரியாக்களை ஒழிக்கிறது. வாசனை மிகுந்த இந்த ரோஸ்மேரி உடல் துர்நாற்றத்தை நீக்கி, நல்ல மணத்தை ஏற்படுத்தும். 

எப்படி பயன்படுத்துவது? 

ஒரு டீஸ்பூன் ரோஸ்மேரி உலர்ந்த இலைகளை எடுத்து, ஒரு கப் நீரில் போட்டு நன்றாக கொதிக்க வைத்து, அதை பருக்கலாம். 

அல்லது 8-10 துளிகள் ரோஸ்மேரி திரவத்தை இரண்டு டேபிள் ஸ்பூன் நீரில் ஊற்றி கலந்து அதிகம் வியர்க்கும் பகுதிகளில் தடவலாம். அப்படி தடவுவதன் மூலம் உடல் துர்நாற்றத்தை ஏற்படுத்தும் கிருமிகளிடமிருந்து உடலை பாதுகாக்கலாம். 









Post a Comment

0 Comments