தொடர் தும்மல் வந்து அவதியா? இதோ இயற்கைத் தீர்வு !!!!

thummal neenga marunthu

எப்பொழுதும் விடாமல் தொடர் தும்மல் வந்து கொண்டிருந்தால், இந்த வீட்டு வைத்தியத்தை செய்வதன் மூலம் உடன் தும்மலை நிறுத்திடலாம். கரோனோ என்று பயப்படத் தேவையில்லை.

சுற்றுப்புறச்சூழல், தூசிகள், வீட்டின் ஒட்டடைகள், விலங்குகளின் ரோமங்கள் இப்படி ஒவ்வாமையை ஏற்படுத்தும் காரணிகளால் சிலருக்கு விடாமல் அச் அச் என்று தும்மல் வந்து கொண்டே இருக்கும். நிற்காது.

சிலருக்கு குடி நீர் சேராமல் சளி பிடித்து தும்மல் வந்து, மூக்கில் "நீர்" ஒழுகும். அவர்கள் ஒன்றுமே செய்ய முடியாமல், தலைவலி வந்து பாடாய் பட்டுக் கொண்டிருப்பார்கள்.

home remedy for sneezing



இதற்கெல்லாம் ஒரு சூப்பர் "ரெமிடி" உள்ளது. அது வீட்டிலேயே உள்ளது என்றால் நம்ப முடிகிறதா? அதுதான் பசு மஞ்சள். ஒரு விரல் அளவு எடுத்து அதை தோல் சீவி, அழகாக வட்ட வடிவமாக "கேரட்" போல வெட்டி,

ஒவ்வொரு துண்டமாக எடுத்து வாயில் போட்டு, உதடுகளை மூடி, மெல்ல மெல்ல ரசித்து மென்று எச்சில் உடன் கலந்து மெல்ல மெல்ல அந்த மாவை விழுங்கினால், அடடா.. அடா... அந்த ஒரு கணத்தை என்னவென்று சொல்ல...

உடன் ஒரு சில நிமிடங்களில் தும்மல், நீர் ஒழுகுதல், சளித்தொல்லை, காய்ச்சல் எல்லாம் போய் தொலைந்துவிடும். உங்களுக்கு ஆச்சர்யமாக இருக்கும்.

பச்சையாக இருக்கும் மஞ்சள் கிழங்கைதான் #பசுமஞ்சள் என்கிறோம். அதைத்தான் அப்படியே தோல் சீவி, உங்கள் சுட்டு விரல் நீளம் எடுத்து உண்ணச் சொல்கிறோம். அது தரும் மகிமை ஏராளம்.

நிச்சயமாக உங்களுக்கு வந்திருப்பது எந்த ஒரு வைரஸ் சளி, காய்ச்சல் என்றாலும் பசு மஞ்சள் முன்பு நிற்கவே நிற்காது. கூடவே 2 பல் பூண்டை எடுத்து இரண்டு மூன்றாக கட் செய்து, ஒரு பத்து நிமிடம் வைத்திருந்து, அதை மாத்திரை போல தண்ணீர் ஊற்றி விழுங்கலாம்.

thodar thummalal erpadum avathi

image credit: verywell.com

அல்லது இலேசாக கதக் புதக் என்று பல்லில் மட்டும் படும்படி மென்று, ஒரு வாய் தண்ணீர் ஊற்றி, அப்படியே விழுங்கிவிடலாம். அடுத்த பத்தாவது நிமிட்டத்தில் உங்களுக்கு எந்த ஒரு உடல் வலி இருந்தாலும் ஓடி விடும்.

அசதி நீங்கும். இரவு நன்றாக தூக்கம் வரும். ஜீரண மண்டலம் நன்றாகசெயல்படும். இரவு நேர சுகத்தில் அதிக நேரம் இன்பம் காண முடியும். 

தும்மல், ஆஸ்துமா, அலர்ஜி, நாட்பட்டசளித்தொல்லை,மூட்டு வலி, முடக்கு வாதம், தலைவலி, காய்ச்சல் எல்லாவற்றிற்கும் இது ஒரு சூப்பர் ரெமிடி.

sali neekkum pasumanjal


தொடர் தும்மல் மட்டும் இல்லீங்க.. மனசும் ரொம்ப சந்தோஷத்தில் மிதக்கும். உடல் அயர்வு நீங்கி, புத்துணர்வு பெருகும். சாப்பிட்டுப் பாருங்க.. அப்புறம் நீங்களே சொல்வீங்க... ஆஹா.. இது ஒரு அருமையா ரெமிடி தான் என்று..!!!!

முக்கிய குறிப்பு: குறிப்பு – இது கொரோனா காலம் என்பதால், சளி, இருமல், காய்ச்சல் உட்பட சில அறிகுறிகள் தென்பட்டால் சிறிதும் தாமதிக்காமல் 104 என்ற மருத்துவ தொலை பேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம். 

அல்லது நீங்களே கொரோனா நோய்க்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைக்கு சென்று அங்கு பரிசோதனை செய்து கொள்ளவும். 

ஒருவேளை கொரோனா நோய் தொற்று இல்லை யென்றால் மகிழ்ச்சியே. ஒரு வேளை கொரோனா நோய்த் தொற்றாக இருந்தால், அதற்கான சிகிச்சை எடுத்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Post a Comment

0 Comments