தீப்பெட்டி கணேசனுக்கு ராகவா லாரன்ஸ் செய்த அதிர்ச்சி செயல் ! எப்பா.. இப்படி ஒரு மனுசா இந்த உலகத்துல.! மகிழ்ச்சியில் ரசிகர்கள் போட்ட கமெண்ட் !!

Post a Comment

ராகவா லாரன்ஸ் மாஸ்டர் அடிப்படையில் மிக வறுமையில் இருந்து , யாருடைய பின்னணி இல்லாமல், சினிமாவில் வளர்ந்து வந்தவர். அதனால் பிறர் படும் கஷ்டங்கள் அவருக்கு அத்துப்படி. அதனடிப்படையில் அவர் சேவை நிறுவனம் தொடங்கி, இல்லாதவர்களுக்கு, இயலாதவர்களுக்கு, உடல் குறைபாட்டுடன் இருப்பவர்களுக்கு தன்னால் ஆன உதவிகளை செய்து வருகிறார்.

தன்னுடைய நடன (Dance) பயிற்சி பள்ளியில், பணக்கார பிள்ளைகளுக்கு மட்டுமில்லாமல், ஏழை எளிய திறமையுடையவர்களுக்கும் இலவசமாக பயிற்சியை கொடுத்து வருகிறார். மேலும் இயற்கை இடர்பாடுகள், வறுமையில் வாடும் மக்கள் என அவர் பார்வைக்கு சென்றடையும் பிரச்னைகளுக்கு தீர்வு கொடுக்கிறார். பண உதவி மட்டுமில்லாமல் ஆத்மார்த்தமாக அவர்களுக்கு ஆதரவு கொடுத்து வருகிறார்.

அந்த வகையில்  தீப்பெட்டி கணேசன் நடிகர் கொரோனோ ஊரடங்கு காலத்தில் குடும்பத்தை நிர்வகிப்பதற்கு போதுமான பணமில்லாத நிலையில், வறுமையில் வாடி வருவதை அறிந்து, தானே நேரில் சென்று அவர் குடும்பத்திற்கு தேவையான பொருள் உதவிகளை செய்து தந்திருக்கிறார். அது மட்டுமில்லாமல் அவருடைய இரண்டு குழந்தைகளுக்கும் எதிர்கால கல்விச் செலவை ஏற்று அவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறார்.


இதனால் நெகிழ்ந்து போன தீப்பெட்டி கணேசன், எதிர்பாராமல் கிடைத்த இந்த உதவியை தன் வாழ்நாள் முழுக்க மறக்க மாட்டேன் என்று கண்ணீர் மல்க பேட்டி அளித்துள்ளார். ஒரு துணை நடிகராக சில படங்களே நடித்துள்ள தீப்பெட்டி கணேசன் குடும்பத்திற்கு இத்தனை உதவிகளையும் சத்தம் போடாமல் செய்துள்ள ராகவாலாரன்சை பலரும் பாராட்டி வருகின்றனர்.

ட்விட்டரில் ஒரு ரசிகர், எப்பா... என்ன மனுசன்யா இவரு... இப்படி ஒரு மனுசன இந்த உலகத்தில் பார்த்தே இல்ல.. என்று மகிழ்ச்சி பொங்க, அவருடைய மாஸ்டரை புகழ்ந்து தள்ளி உள்ளார்.

கோடிகளில் சம்பாதிக்கும் நடிகர்கள் கொஞ்சம் கூட உணர்வில்லாமல், நாட்டு மக்களுக்கு உதவாமல், தன்னுடைய வாரிசுகள் மட்டும் வளர வேண்டும். மகிழ்ச்சியில் திளைக்க வேண்டும் என்று சுயநலத்துடன் இருக்கும் சூழ்நிலையில், தான் சம்பாதிக்கும் பணத்தை முக்கால் வாசி பங்கு, பொது சேவைகளுக்குப் பயன்படுத்தும் ராகவா லாரன்சை எத்தனை பாராட்டினாலும் தகும்..!


Related Posts

Post a Comment

Subscribe Our Newsletter