பிரபுவுக்கு ஜோடியாக ஐஸ்வர்யாவா? என்னய்யா சொல்றீங்க? அதிர்ச்சிதகவல் !!!!

Post a Comment

சின்னத்தம்பி படம் மூலம் தமிழக பட்டிதொட்டிகளெல்லாம் பிரபலமானவர் நடிகர் பிரபு. இவர் நடித்த படங்கள் பெரும்பாலும் வெற்றிப்படங்களாகவே அமைந்திருந்தன. 80,90 களில் பிரபு - சத்யராஜ் படங்கள் என்றாலே ரசிகர்கள் விரும்பி பார்த்தார்கள். இளைய திலகம் பிரபு சிரித்தால் கவர்ச்சியாக கண்ணத்தில் குழி விழும். அந்த அழகை பார்த்து ரசிக்காத ரசிகைகளே இல்லாதிருக்க முடியாது.

இந்நிலையில் சமீபத்தில் பிரபல மணிரத்னம் இயக்கிவரும் பிரம்மாண்ட ’பொன்னியின் செல்வன்’ திரைப்படம் குறித்த தகவல்கள் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருக்கின்றன. இந்த படத்தில் ராஜராஜசோழன் பாத்திரத்தில் ஜெயம் ரவியும் வந்தியத்தேவன் கேரக்டரில் நடிகர் கார்த்தியும் நடித்து வருவதாக செய்திகள் வெளிவந்தது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் பிரபு மற்றும் சரத்குமார் ஆகிய இருவரும் பொன்னியின் செல்வன் கதையில் வரும் பெரிய பழுவேட்டரையர் மற்றும் சின்ன பழுவேட்டரையர் வேடத்தில் நடிக்கவிருப்பதாக கூறப்பட்டது. ஆனால் சரத்குமாருக்கு பதிலாக தற்போது சின்ன பழுவேட்டரையர் வேடத்தில் நிழல்கள் ரவி நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. பெரிய பழுவேட்டரையர் வேடத்தில் பிரபுவே நடிப்பார் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் சரத்குமாருக்கு வேறு ஒரு முக்கிய கேரக்டர் இந்த படத்தில் வழங்கப்படுவதாகவும் கூறப்பட்டு வருகிறது.

பொன்னியின்செல்வன் கதையின்படி பெரிய பழுவேட்டரையரின் காதலியாக நந்தினி என்ற கேரக்டர் இருக்கும். அப்படியானால் அந்த நந்தினி கேரக்டரில் நடிப்பவர் யார்? அது ஐஸ்வர்யா ராய் தானா? அப்படியானால் அவர் பிரபுவுக்கு ஜோடியாக நடிக்கிறாரா? என்ற தகவல் தற்போது மிக வேகமாக பரவி வருகிறது. மேலும் ஐஸ்வர்யாராய், மந்தாகினி என்ற கேரக்டரிலும் இப்பொழுது நடித்து வருகிறார் என்பதும் அந்த மந்தாகினி சுந்தரசோழர் காதலி என்பதும் குறிப்பிடத்தக்கது.

தமிழ் நடிகர்கள் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி, பிரபு, சரத்குமார், நிழல்கள் ரவி உள்ளிட்ட பலர் நடித்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு அரசு அனுமதி கிடைத்தவுடன், மீண்டும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரபுவுக்கு ஐஸ்வர்யா ஜோடியா என்பது குறித்து உறுதியாக நிலையில், சமூக வலைத்தளங்களில் அந்த கேரக்டரின் ஜோடி இவராகதான் இருக்கும் என்ற தகவல் மிக வேகமாக பரவி வருகிறது. 

Related Posts

Post a Comment

Subscribe Our Newsletter