முகம் அழகா இருந்தாலும்.. இது மட்டும் இல்லேன்னா... அப்புறம் கஷ்டம் தான்...! muga alagu kurippugal

Post a Comment
muga alagu kurippugal


பெண்கள் அழகுக்கு முக்கியத்துவர் அளிப்பார்கள். குறிப்பாக முகத்திற்கு இஷ்டத்திற்கும் பேஸ் கிரீம்கள், லோசன்கள், முக புவடர்கள், ஃபேஸ் வாஷ்கள் என ஏகப்பட்ட பிராண்டுகளின் தயாரிப்புகளை முகத்தில் போட்டு ஒரு வழி செய்து விடுவார்கள்.


ஆனால் பாருங்கள், அங்கேயே அருகில் இருக்கு இரு காது மடல்களுக்கு மட்டும் அதிக முக்கியத்துவம் கொடுக்காமல் இருந்து விடுவார்கள். முகம் அழம்புவது என்றாலும் முன் புற முகத்திற்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து நீவி, வழித்து கழுவுவார்கள். காதுமடல்களை ஏனோதானோவென நனைத்து டவல் கொண்டு ஈரத்தை மட்டும் துவட்டி விட்டு விடுவார்கள்.

இதனால் என்ன ஆகும் என்றால், காது மடல்கள் முகத்தை விட டல்லடித்து, கலர் மங்கலாக காணப்படும். அப்படி உங்களுக்கோ அல்லது உங்கள் வீட்டுப் பெண்களுக்கோ இருந்தது என்றால், இப்படி செய்து பாருங்கள். உங்கள் காது மடல்கள் அழகாகி, வசிகரமாக தோற்றமளிக்கும்.

உங்கள் குழந்தைகளுக்குப் பயன்படுத்தும் Baby Lotion ஐ கொஞ்சம் எடுத்து காது மடல்களில் தடவி வந்தால், முகத்திற்கு ஈடாக, காது மடல்களின் நிறம் மாறி பார்ப்பதற்கு ஜொலிக்க ஆரம்பிக்கும். காது மடல்கள் உங்கள் காதுகளில் வந்து என் அழகை பார்த்தாயா என்று தேனீ போல ரீங்காரமிட ஆரம்பித்துவிடும்.

எனவே பெண்களே இதுவரைக்கும் எப்படியோ, முகத்தில் இனி காது மடல்களுக்கும் அதிக முக்கியத்துவர் கொடுங்கள். முகம் முழுமைக்கும் அழகாகட்டுமே...!!!!

Related Posts

There is no other posts in this category.

Post a Comment

Subscribe Our Newsletter