முடி உதிர்வை கட்டுப்படுத்த, அடர்த்தியான முடியை பெற, இளநரை போக்கி நீண்ட கூந்தல் பெற இப்படி செய்யுங்க !

Post a Comment
பெண்களுக்கு முக அழகுக்கு அடுத்து, அதிக அழகு கொடுப்பது அடர்த்தியான, கருமையான நீண்ட கூந்தல் தான். குறிப்பாக இந்தியப் பெண்களுக்கு கருமை கூந்தல் ஸ்பெஷல். அப்படிப்பட்ட பாரம்பரிய மிக்க நம் பெண்களின் தலைமுடி ஆரோக்கியம் எப்படி இருக்கிறதென்றால், பார்க்க சகிக்காத, அருவருத்தக்கதாக, அழகை கெடுப்பதாக உள்ளது என்றால் அது மிகையாகாது. சரி, நீண்ட கூந்தல், முடி உதிர்தலை கட்டுப்படுத்த, அடர்த்தியான தலைமுடியை பெற என்ன செய்ய வேண்டும்?

முடி உதிர்வை தடுத்து, அடர்த்தியாக வளர


முட்டை மஞ்சள் கரு, விளக்கெண்ணெய், கற்றாலை ஜெல் இந்த மூன்றையும் எடுத்து, நன்றாக கலக்கி அதை உச்சந்தலையில் தேய்த்து அரை மணி நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவினால், தலையில் தலைமுடி கொட்டுவது நின்று, முடி அடர்த்தியாக வளர ஆரம்பிக்கும்.

அளவுகள்:


  • 2 டேபிள் ஸ்பூன் மஞ்சள் கரு
  • 1 டேபிள் ஸ்பூன் விளக்கெண்ணெய்
  • 1 டேபிள் ஸ்பூன் கற்றாலை ஜெல்


பயன்படுத்தும் முறை:

இந்த மூன்றையும் எடுத்து நன்றாக கலக்கி , உச்சந்தலையில் முடியின் வேர்கால் நனையும்படி தேய்த்து நுனி விரல் கொண்டு இலேசாக மசாஜ் செய்து அரை மணி நேரம் ஊற விட வேண்டும்.

அதன் பிறகு குளிந்த நீரில் தலையை கழுவ வேண்டும். ர

நன்மைகள்:

விளக்கெண்ணெய் தலைக்கு குளிர்ச்சியை கொடுக்கும். இதனால் தலைமுடி வேகமாக வளர உதவுகிறது. முட்டை மஞ்சள் கரு தலை முடி உதிர்வை கட்டுப்படுத்துகிறது. கன்டிசனராக பயன்படுகிறது. தூசி துப்புகளிலிருந்து முடியை காக்கிறது.

சோற்றுக்கற்றாலை முடியை மென்மையாக்கி, அதிக வலு சேர்க்கிறது. தலையில் உள்ள தேவையற்ற பூஞ்சைகளை நீக்கி, முடி ஆரோக்கியமாக வளர உதவுகிறது.


Related Posts

Post a Comment

Subscribe Our Newsletter