மூட்டு வலி தீர இயற்கை முறையில் தீர்வு ! இப்படி செய்தால் மூட்டுவலி, முழங்கால் வலி, இடுப்பு வலி நிமிடத்தில் மறையும் !


இன்று எல்லோருக்கும் மூட்டு வலி, முழங்கால் வலி, உடல் வலி என்று வந்து பாடாய்படுத்துகிறது. குறிப்பாக வயோதிகர்களுக்கு சொல்லவே வேண்டியதில்லை. வயோதிகம் காரணமாக கால்சியம் சத்து குறைந்து மூட்டு வலி அதிகரிக்கிறது. வளர்ந்து வரும் நாகரீகம் காரணமாக உடல் உழைப்பு குறைகிறது. இதனால் உடலுக்குத் தேவையான சக்தி கிடைப்பதில்லை. உடல் உறுதியாகமல் இருப்பதால் தேவையில்லாத நோய்கள் வந்து நம்மை இம்சைப்படுத்துகிறது.

மூட்டு வலி தீர என்ன செய்யலாம்?


உடல் உழைப்பு தான் பிராதனம். வீட்டில் இருந்து வேலை செய்பவர்கள் கண்டிப்பாக ஒரு மணி நேரமாவது சூரியல் வெளியில் நிற்பது அவசியமாகிறது. இதனால் உடலுகுத் தேவையான விட்டமின் டி கிடைக்கிறது. விட்டமின் டி கிடைப்பதால் எலும்புகள் வலுவடைந்து உடல் கட்டுக்கோப்பாக மாறுகிறது. கீழே விழுந்தால் கூட எலும்பு முறிவு தவிர்க்கப்படுகிறது.

மூட்டு வலிக்கு காரணம் மூட்டுத் தேய்மானம்


வயோதிகம் காரணமாக கால்சியம் சத்து குறைந்து, மூட்டு வலிக்கு வித்திடுகிறது. மூட்டுத் தேய்மானம் ஏற்பட்டு, ஜாயிண்டுகள் ஒன்றுக்கொன்று உரசிக்கொள்வதால் வலி அதிகரிக்கிறது. மூட்டுத் தேய்மானத்திற்கு உடல் உழைப்பு இல்லாமை ஒரு காரணமாக உள்ளது. மேற்கத்திய கலாச்சாரம் பரவியதால், டேபிளில் உட்கார்ந்து சாப்பிடுவது, மேற்கத்திய டாய்லட் பயன்படுத்துவது, சூரிய வெளிச்சத்தில் அதிகம் இல்லாமல் இருப்பது போன்ற காரணங்களால் மூட்டுத் தேய்மானம் அதிகரிக்கிறது. இந்திய கலாச்சாரத்தைப் பயன்படுத்தினால் இது குறையும். முறையாக கீழே அமர்ந்து சாப்பிடுவது, இந்திய வகை டாய்லட்களில் குத்துக் காலிட்டு அமரந்து கழிவு நீக்குவது போன்ற செயல்களால் மூட்டுகள் மடங்கி இயங்குவதால் அதிக இயக்கம் கிடைக்கிறது. அதே சமயம் மூட்டுகள் நன்றாக இயங்குவதற்கு வாய்புகள் ஏற்படுகிறது.

பெண்களுக்கு மூட்டு வலி ஏற்படுவதற்கான காரணங்கள் !


பெண்களுக்கு 50 வயதுக்கு மேல் மாதவிடாய் நிற்பதால் ஏற்படும் எலும்பு அடர்த்தி குறைதல் ஒரு காரணமாக பார்க்கப்படுகிறது. ஆண்களுக்கும் இதே வயதில் இந்த குறைபாடு ஏற்படுவது கண்டறியப்பட்டுள்ளது. இதற்கு காரணம் உடல் உழைப்பு குறைவது, விட்டமின் டி குறைபாடு மற்றும் உணவு வகை மாற்றங்கள் ஆகும்.

மூட்டு வலிக்குத் தீர்வு !


வெளிநாட்டில் மூட்டு வலி வர காரணம் விட்டமின் டி குறைபாடுதான் காரணம். அங்கு வெயில் குறைவு. நம் நாட்டில் அப்படி அல்ல. அதிக வெயில் உள்ளது. வெயிலில் நின்றால் போதும். தோல் உடலுக்குத் தேவையான விட்டமின் டி தயாரித்துப் பெற்றுக்கொள்ளும். இதனால் எலும்புகள் வலுவடைந்து மூப்பு அடைந்த போதும் எலும்பு முறிவுகள் ஏற்பாடமல் இருக்கும்.

முதியவர்களை பாதுகாத்தல்: 


முதியவர்கள் பாத்ரூமில் வழுக்கி விழுந்து இடுப்பு எலும்பு முறிவு, கை, கால், மணிக்கட்டு முறிவு என அவதிப்படுகிறன்றனர். அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் பாத்ரூமில் கைப்பிடிகளை அங்கங்கே ஏற்படுத்தி, அதைப் பிடித்துக்கொண்டு அவர்கள் செல்லும்படியாக அமைக்க வேண்டும். மேலும் வழுக்கும் "டைல்ஸ்" போன்றவற்றை தவிர்த்து, நல்ல "கிரிப்" கிடைக்கும் வகையில் தரைத்தளத்தை அமைக்க வேண்டும். மேலும் பாத்ரூமில் அதிக ஈரம் இல்லாமல் உடனடியாக காய்ந்து போகும்படி வெளிச்சம் உள்ளே நுழைந்து வெளிவரும்படி சன்னல் அமைத்திருக்க வேண்டும். இவற்றை செய்வதன் மூலம் முதியவர்கள் கீழே விழுந்து எலும்பு முறிவு ஏற்படாமல் பாதுகாக்க முடியும்.









Post a Comment

0 Comments