ஜிப்பில் மாட்டிக் கொண்ட அதை எப்படி எடுப்பது? How to Free a Penis from a Stuck Zipper

Post a Comment
How to Free a Penis from a Stuck Zipper



தலைப்பை பார்த்ததும் என்னடி இப்படி ஒரு பதிவுன்னு உங்களுக்குத் தோணும். ஆனால் இது பெரிய விசயமே அடங்கியிருக்குங்க.. சாதாரணமா பேண்ட் ஜிப் போடும்பது கவனமாக போட்டால் ஒண்ணும் ஆகாது. ஆனால் அவசர அவசரமாக போட்டால் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் குஞ்சா மணி அதுல சிக்கிக்கும். ஜீப் லாக் ஆனதும், அதைத பிரிக்கவும் முடியாது. ஜாய்ண் பண்ணவும் முடியாது.

இப்படித்தான் எங்க ஊர்ல ஒரு சிறுவனுக்கு ஜட்டி போடாமல் புதுசா ஒரு ஜூன்ஸ் பேண்ட் , T-shirt வாங்கி வந்தாங்க. ஆசையா பையனை குளிப்பாட்டி, சட்டையை போட்டுவிட்டு, பேண்ட்டை போட்டாங்க. ஜிப்பை அவங்க அப்பா போட, சரக்குன்னு இழுத்தாரு. பையன்.. அய்யோ. அம்மா.. ன்னு கத்தி அழ ஆரம்பிச்சுட்டான்..

அப்புறம் என்ன? பேண்ட் போட்டதுக்கு ஏண்டா இப்படி அழவறேன்னு அவங்க கோவிச்சிட்டுப் போய் சோபாவுல உட்கார்ந்திட்டாரு. பையன் கதறிகிட்டே அவங்க அம்மா கிட்ட போகவும்தான் தெரிஞ்சது... பையன் குஞ்சு மணி ஜிப்பில மாட்டி வெளியில பாதி தொங்கிட்டு இருந்தது. அதை எடுக்கவும் முடியல.. பிரிக்கவும் முடியல... உடனே ஒரு கத்திரை எடுத்து ஜிப் பக்கத்துல வெட்டி பேண்ட்டை கழட்டிட்டாங்க. ஆனால் ஜிப் மட்டும் குஞ்சா மணியில ஒட்டிட்டு இருந்தது.
How to Free a Penis from a Stuck Zipper



இலே தோல் நசுங்கி, அதுல இரத்த கசிவும் இருந்துச்சு. உடனே டாக்டர்கிட்ட எடுத்துட்டு ஓடுனாங்க. அதுல நல்ல வேலை முன் தோல் மட்டும் அதுல மாட்டிகிட்டதால, டாக்டர் அதை ஊசிபோட்டு கட் பண்ணி எடுத்துட்டாரு. ஜிப்பை கடைசி வரைக்கும் பிரிக்க முடியலேங்கிறது வேதனையான உண்மை.  படிக்க நகைச்சுவையா இருந்தாலும், சின்ன பயபுள்ளைகளுக்கோ, பெரிய ஆம்பிளைகள் அவசரமா ஆபிசுக்கு போகும்போதோ ஜட்டி போட்டு, அதன் பிறகு ஜிப்பை கவனமா இழுத்துப் போடுங்க. இல்லேன்னா ரொம்ப கஷ்டமா போயிடும்.

சரி, ஜிப்புல அது மாட்டிகிச்சு..? எப்படி சுலபமா எடுக்கிறது? இந்த டாக்டர் சொல்றதை கேளுங்க. நீங்களாகவே ஏதாவது முயற்சி செய்து விபரீதமாகிட போகுது. அப்புறம் அது பெரிய பிரச்னையில் கொண்டு போய் விட்டுடும்.

Related Posts

Post a Comment

Subscribe Our Newsletter