இளைஞனுக்கு மொட்டை.. பிரபல இயக்குநரின் வெறிச்செயல் !!!

Post a Comment


 ஏழை என்றால் இளப்பம் தான் என்று அடிக்கடி சொல்வார்கள். இருப்பவனுக்கு ஒரு கோடி, இல்லாதவனுக்கு தெரு கோடி என்று சொல்வார்கள். 

இருமாப்புடன் இருப்பவனுக்கு உடம்பெல்லாம் கொழுப்பு என்று சொல்வார்கள். அப்படித்தான் ஆகிவிட்டது உலகு. 

இல்லாத ஏழைகள் என்றால், இருப்பவனுக்கு இளப்பம். என்ன செய்தாலும் யாரும் எதுவும் செய்திட முடியாது என்ற தினாவட்டு. 

இந்த மனநிலை படித்தவர், பணக்கார ர், பதவியில் இருப்பவர், இல்லாதவர் என ஏகமனதாக வேறூன்றியே உள்ளது. 

என்ன செய்ய? சில தலைமுறைகளாக இப்படிப்பட்ட சூழலை உருவாக்கி, அதில் ஊறி, அதை விட முடியாமல் வெறிப்பிடித்து திரிகின்றனர் இன்னும். 

அந்த வகையில் இந்த சம்பவமும் நடந்தேறி உள்ளது. தெலுங்கு இயக்குர்/நடிகர் நாயுடு. இவர் ஒரு சில படங்கள் நடித்திருக்கிறார்.

அவர் வீட்டில் ஒரு தலித் இளைஞன் வேலை செய்திருக்கின்றான். மூன்று, நான்கு மாதங்களுக்குப் பிறகு, அங்கு வேலை செய்ய பிடிக்காமல் வேலையை விடுவதாக கூறியிருக்கிறான். 

வேலை வாங்கி பழக்கப்பட்டவன், சாதி உணர்வில் வாழ்ந்தவன் சும்மா இருப்பானா? 

போக முடியாது என்று தடை போட்டிருக்கிறான். செல்போன் திருடினாய் என பழி போட்டிருக்கிறான். பயந்த இளைஞனை பிடித்து, அடித்து உதைத்து மிரட்டியிருக்கின்றனர். 

வேலையைவிட்டு சென்றால், செல்போன் திருடினதாக புகார் கொடுத்து, உள்ளே தள்ளிவிடுவேன் என்று நேரடியாகவே மிரட்டியிருக்கின்றனர். 

பிறகு நடந்தேறியதே ஒரு கொடுமை.. அய்யோ. அதை அப்படியே CCTV படம் பிடித்து காட்டியிருக்கிறது பாருங்கள். 

மொட்டை அடித்து, அவமானப்படுத்தி விட்டிருக்கிறார்கள். அவசரப்பட்டு செய்தவர்கள், அங்கே CCTV இருப்பதை மறந்து விட்டிருக்கிறார்கள். 

இளைஞன் புகார் அளித்தான். புகாரின் பேரில் போலிசார் விசாரிக்க, அங்கிருந்த CCTV உதவிகரமாக இருந்திருக்கிறது. 

இதுதான் தன் வாயால் தானே கெடுவது என்பது. எதற்கோ வைக்கப் போய் இன்று வசமாக அவர்கள் வீட்டு கண்காணிப்பு கேமிராவிலேயே சிக்கியிருக்கிறார்கள். 

நேர்மையான காவல் அதிகாரிகளின் கையில் புகார் சென்றிருப்பதால், முறையான விசாரணை நடத்தி, இளைஞனுக்கு மொட்டை அடித்த இயக்குனர்/நடிகர் மற்றும் அவர் குடும்ப்பதாரை கைது செய்திருக்கின்றனர். 

நியாயம் வென்றிருப்பதாகவே தோன்றுகிறது. ஆனால் அவமானம்? அந்த இளைஞனுகுக கிடைத்த அவமானம் எப்படி மறையப்போகிறது?

எப்போது இந்த சாதி, மத பித்து பிடித்த விலங்குகள் திருந்தப்போகிறார்கள்? 

Related Posts

Post a Comment

Subscribe Our Newsletter