தப்பித் தவறி கூட இந்த உணவை சாப்பிடாதீங்க ! சர்க்கரை அளவை அதிகபடுத்திடுமாம் !

Post a Comment
anti diabetes foods
சர்க்கரைநோய் என்பது ஒரு நோயே அல்ல என்று இன்றைய நவீன மருத்து உலகில் அறிவித்து விட்டனர். அது ஒரு குறைபாடு நோய். அதை உண்ணும் உணவின் மூலம் நிவர்த்தி செய்து விடலாம். இன்று சர்க்கரை நோயாளிகள் காலையில் உண்ணும் உணவாக ப்ளாக்ஸ் கார்ன் உள்ளது. இது அடிப்படையில் நல்லது என்றாலும், தொடர்ந்து உட்கொள்வதால் சர்க்கரையின் அளவு தாறுமாறாக எகிறும் என்று கணித்துள்ளனர். காரணம் இதுதான்.

இதில் அதிகளவு செயற்கை சுவையூட்டிகள் மற்றும் கிளைசீமிக் இன்டெக்ஸ் அதிகளவு உள்ளதால், இரத்த சர்க்கரையின் அளவு அதிகரித்து, நீரிழிவு நோய் தீவிரமடைய வாய்ப்புகள் உள்ளதாக தெரிவித்துள்ளனர்.


சர்க்கரை நோயாளிகள் உண்ணும் உணவில் நிச்சயம் கவனம் செலுத்த வேண்டும். அப்படி செலுத்த தவறினால் இரத்த சர்க்கரை அளவு அதிகரித்து, இன்சுலின் பற்றாக்குறை ஏற்பட்டு, அதனால் உடல் உறுப்புகள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்படும். சில நேரங்களில் கால் வீரல்கள், கால்களை அதிகம் பாதித்து அதை அறுவை சிகிச்சை செய்து எடுக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுவதும் இதனால்தான்.

கார்ன் ப்ளேஸ் உணவு சோள மாவால் செய்யப்பட்டதுதான் என்றாலும், அதில் புரோட்டின் குறைவாக உள்ளது. இதனால் பசி அதிகம் அடங்காது. இதை உண்ட பிறகும் பசி உணர்வு இருந்து கொண்டே இருக்கும். அதன் விளைவாக அதிக உணவை எடுத்துக்கொள்வதால், சர்க்கரை குறைபாடு உள்ளவர்கள் கார்ன்ப்ளேக்ஸ் உணவை எடுத்துக்கொண்ட பிறகும் கூட , உணவுகட்டுப்பாடுகளை பின்பற்ற முடியாத நிலைக்குத் தள்ளப்படுவர்.

நார்ச்சத்துள்ள உணவுகளை இவர்கள் எடுப்பதன் மூலம் சர்க்கரையின் அளவினை கட்டுப்படுத்த முடியும். அதே நேரத்தில் இதய நோய் வராமலும் நார்ச்சத்து உணவுகள் தடுத்திடும். ஆனால் கார்ன் ப்ளாக்ஸ் சோளமாவு உணவு அப்படி அல்ல.

இதில் சோடியம் அதிகம் உள்ளது. ஒரு கப் உருளை கிழங்கு சிப்சைவிட, இதில் அதிகம் உள்ளது. இதனால் இரத்த அழுத்தம் அதிகரித்து இதய நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவேதான் இந்த கார்ன் ப்ளாக் உணவு சாப்பிடுவதற்கு முன்பு மருத்துவர்களின் ஆலோசனைப் பெற்ற பிறகு, சர்க்கரை நோயாளிகள் சாப்பிட வேண்டும்.

எப்பொழுதும் எந்த ஒரு உணவினையும் சர்க்கரை நோயாளிகள் எடுப்பதற்கு முன்பு கண்டிப்பாக டாக்டரின் ஆலோசனை பெற்று, அதன் பிறகு எடுத்துக்கொள்வது நல்லது. 

Related Posts

Post a Comment

Subscribe Our Newsletter