சாப்பாடுக்கு வழியில்லை சார்.. ! கண்ணீர் விட்டு கதறி அழும் பிரபல வில்லன் நடிகர் !

Post a Comment
bakayaraj suryakanth

சினிமா என்பது பிரபலபடுத்தும் ஒரு ஊடகம் அவ்வளவுதான். அந்த பிரபலத்தை தக்க வைக்க வேண்டுமானால், சாதுர்யமும், திறமையும், தொடர் வாய்ப்புகளும் அமைய வேண்டும். இல்லையென்றால் பிரபலம் என்ற பெயரை தக்க வைத்துக்கொள்ள படாதபாட பட வேண்டும். அந்த புகழ் மயக்கம் என்ன செய்ய வேண்டுமானாலும் செய்யச் சொல்லும். குறிப்பிட்ட படங்களில் நடித்து முடித்த பிறகு வாய்ப்பு இல்லாமல் போகும் ஒவ்வொரு நடிகர் நடிகைகளும் சந்திக்கும் பிரச்னை இது.

அந்த புகழ் போதை கடன் வாங்கச் சொல்லும். அதே ஸ்டேடசை தக்க வைக்க என்ன வேண்டுமானாலும் செய்யச் சொல்லும். அதுபோலதான் தற்பொழுது வறுமையில் வாடும் சினிமா கலைஞர்களுக்கும் நடந்து கொண்டுள்ளது. சம்பாதிக்கும் பணத்தை சரியாக பயன்படுத்த தெரியாதவர்கள் வறுமையில் சிக்கித் தவிக்கிறார்கள்.


வாய்ப்பு இல்லாமல் பின்தங்கிவிடுகின்றனர். தற்பொழுது கொரானோ கொள்ளை நோய் காலமாகையால், அவர்களின் பிழைப்பு கேள்விக்குறியாக உள்ளது. அந்த வகையில் பிரபல வில்லன் நடிகர் சூர்யகாந்த் சாப்பாட்டுக்கு வழியில்லாமல் தவித்து வருகின்றேன் என்ற கண்ணீர் மல்க கூறியுள்ளார்.

பிரபல டைரக்டர் பாக்யராஜ் படத்தில் நடித்த நடிகர் சூர்ய காந்த் இதுகுறித்து கூறுகையில், பாக்யராஜ் சார் தான் என்னை முதன் முதலில் ‘தூரல் நின்னு போச்சு’ என்ற சினிமா படத்தில் என்னை அறிமுகப்படுத்தினார். அதன் பிறகு பாரதிராஜாவின் மண்வாசனை, கிழக்குச் சீமையிலே உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறேன். சமீபமாக கார்த்தியின் கைதி, விஜய் சேதுபதியுடன் சங்கத்தமிழன் உள்ளிட்ட படங்களில் நடித்தேன்.

ஆனால் தற்போது திரைப்பட படப்பிடிப்புகளும் இல்லை. சின்னத்திரை படப்பிடிப்புகளும் சரிவர நடக்கவில்லை. அதனால் பொருளாதார ரீதியாக மிகவும் பாதிக்கப்பட்டுள்ளேன். எனக்கு சர்க்கரை நோய் பாதிப்பு இருப்பதால் போன்ற உடல் ரீதியாகவும் மிகவும் கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கிறேன். 

எனக்கு ஒரு மாதத்துக்கு மாத்திரை மருந்து  வாங்கவே ரூ.1500 செலவாகிறது. அதை வாங்கக் கூட என்னிடம் இப்பொழுது பணம் இல்லை. நல்ல சாப்பாட்டுக்கே வழியில்லாமல் இருக்கிறேன். தயவு செய்து எனக்கு யாராவது உதவி செய்யுங்கள்” என்று வருத்தம் பொங்க கூறியுள்ளார்.

Related Posts

Post a Comment

Subscribe Our Newsletter