மாரைப்பால் இறந்த டாக்டர் சேதுராமனுக்கு ஆண் குழந்தை ! சேதுவே பிறந்து விட்டார் என சமூக வலைத்தளங்களில் குவியும் வாழ்த்துகள் !

Post a Comment

dr cheduraman
கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தின் மூலம் அறிமுகமாகி தமிழில் சில படங்களில் நடித்து பெயர் பெற்றவர் மருத்துவர் சேதுராமன். சினிமாவில் மட்டுமல்லாமல், டாக்டராகவும் சிறந்து விளங்கினார். தோல் ஸ்பெஷலிஸ்ட்டான அவர் பிரபல நடிகர்கள் மற்றும் அவருடைய கிளையண்ட்களுக்கு மருத்துவராக இருந்தார்.

கொரோனோ தொற்று ஆரம்ப காலத்தில் அவர் மாரடைப்பால் காலமானார். இந்த சம்பவத்தை கொரோனோ தொற்றால் டாக்டர் மரணமடைந்தார் என கிளப்பி விட்டனர் சமூக விரோதிகள். உண்மையில் மாரடைப்பால் தான் அவர் இறந்தார் என அவரது நண்பரும் சமூக வலைத்தளங்களில் பிரபலபமாக இருக்கும் டாக்டர் விஜய் ராஜேஸ் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், அவர் மரணமடைந்தபோது கர்ப்பமாக இருந்த அவரது மனைவிக்கு அழகிய ஆண்குழந்தை பிறந்துள்ளது. தகவல் அறிந்த அவரது ரசிகர்கள், மீண்டும் சேது ராமனே பிறந்துள்ளார் என்று வாழ்த்தி நெகிழ்ச்சியை வெளிப்படுத்து வருகின்றனர்.

இதைப் பார்த்த அவரது குடும்பத்தினர் மிகவும் மகிழ்ந்து, கண்ணீர் மல்க நன்றி தெரிவித்து வருகின்றனர்.


Related Posts

Post a Comment

Subscribe Our Newsletter