முடிவுக்கு வருகிறதா? விஜய் சேதுபதியின் சினிமா வாழ்க்கை? மீண்டும் தொடங்கிய சர்ச்சை !!!

vijay sethupathi

சினிமாவைப் பொறுத்தவரை ஒருவர் எந்த ஒரு பின்னணி இல்லாமல் ஜெயிப்பது மிக கடினம். அப்படி ஜெயித்தவர்கள் உச்சானி கொம்பை தொடாமல் இருந்ததில்லை.  ஆனால் அதற்கு முன்பு அவர்கள் பட்ட பாட்டை கேட்டால் இப்பொழுதும் கண்ணீர் வரும் அளவிற்கு மிக மோசமானதான கதையாக இருக்கும். அவர்களின் கதையில் ஒரு வாழ்க்கைப் பாடமே மறைந்திருக்கும். அப்படிப்பட்ட ஒரு நடிகர் தான் நம் "மக்கள் செல்வன்" விஜய் சேதுபதி.

கடந்த காலங்களில் அவ்வப்போது இந்து இறை நம்பிக்கையை கொச்சைப்படுத்தி பேசுவதை பெரிதாக எடுத்துக் கொள்ளாத இந்துக்கள், தற்போது யார் தங்கள் மதத்திற்கு எதிராக பேசினாலும் வெகுண்டு எதிர்ப்பு தெரிவிக்கும் அளவுக்கு எழுச்சி அடைந்துள்ளனர். அந்த வரிசையில் நடிகர் ஜோசப் விஜய், நடிகர் சிவகுமார், நடிகை ஜோதிகா, இயக்குனர் சமுத்திரக்கனி, நடிகர் சூர்யா, நடிகர் விஜய்சேதுபதி, நடிகர் சீமான், நடிகர் கமல்… ஆகியோர் மக்கள் மத்தியில் உள்ள தங்கள் நன்மதிப்பை இந்து மத எதிர்ப்பு பிரச்சாரத்தின் மூலம் தங்களாவே மக்கள் மத்தியில் எதிர்ப்பை சம்பாதித்துள்ளனர்.

நடிகர் விஜய் சேதுபதி கடந்த 2019ஆம் ஆண்டு ஒரு தனியார் தொலைக்காட்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இந்து கோவில் சாமி சிலைக்கு நடைபெறும் அபிஷேகம் குறித்து இந்துக்கள் மனம் புன்படும்படி பேசிய பேச்சு, தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனை தொடர்ந்து இந்து அமைப்புகள் ஓன்று கூடி நடிகர் விஜய் சேதுபதிக்கு பாடம் கற்பித்தே ஆக வேண்டும் என முடிவெடுத்து, தமிழகம் முழுவதும் அவர் மீது காவல் நிலையங்களில் புகார் கொடுத்து வருகின்றனர்.

இந்து மகா சபையினர் திருச்சி காவல் ஆணையரிடம் புகார் கொடுத்துள்ளனர். இந்து முன்னணியினர் திருநெல்வேலி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். மேலும் இந்து அமைப்பை சேர்ந்த பலர் தமிழகம் முழுவதும் நடிகர் விஜய் சேதுபதி மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் கொடுத்து வருகின்றனர். காவல்துறை நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் நீதிமன்றம் சென்று நடிகர் விஜய் சேதுபதி மீது அவருக்கு தக்க பாடம் புகட்ட முடிவெடுத்துள்ளது இந்து அமைப்புகள்.

Post a Comment

0 Comments