எப்படி வேண்டுமானாலும் நடிப்பேன்.. சினிமா உலகை அதிர்ச்சி அடைய வைத்த வாணிபோஜன் !!!

Post a Comment

ஏர் ஹோஸ்ட்டாக ஆக இருந்து, அதன் பிறகு தமிழ் சீரியல் மூலம் அதிக ரசிகர்களை கொண்டு பிரபலமானவர் நடிகை வாணி போஜன். இவர் பிரபல தனியார் டிவி (Sun Tv )சீரியலில் நடித்து புகழ் பெற்றார்.

சமீபத்தில் தெலுங்கு படமான ‘மீக்கு மாத்ரமே செப்தா’ என்ற படத்தில் அறிமுகமாகி,  டோலிவுட் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறார். விஜய் தேவரகொண்டா தயாரிப்பில் வெளியான புதிய படம் அது. இதைத் தொடர்ந்து தமிழிலும் பெரிய திரை வாய்ப்புகள் வந்து கதவைத் தட்டுவதாக பூரித்துச் சொல்கிறார் வாணி போஜன்.இந்நிலையில் தற்போது முதன் முறையாக, தமிழில் இளம் முன்னணி நடிகரான முரளி மகன் அதர்வா மற்றும் விக்ரம் பிரபுவுடன் வாணி போஜன் இணைந்து புதிய படங்களில் நடிக்கப்போவதாக சில தகவல்கள் தற்பொழுது கசிந்துள்ளது.

இவர் எப்பொழுதும் சும்மா இருப்பதில்லை. அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு அப்டேட்டாக இருப்பார். இதனால் ரசிகர்கள் மறக்காமல் லைக் போட்டு ஊக்கப்படுத்திக்கொண்டே இருப்பார்கள்.இந்நிலையில், இவர் சமீப காலமாக கவர்ச்சியான உடைகளில், நடிப்பது குறித்து விமர்சனங்கள் எழுந்தன.  இந்நிலையில் அவரிடம் இது குறித்த கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளித்த நடிகை வாணி போஜன், நான் என்ன உடை உடுத்த வேண்டும். அது எனக்கு எப்படி இருக்கு என எனக்கு தெரிந்து தான் செய்கிறேன். அது என்னுடைய விருப்பமாகவும் இருக்கிறது.படத்திற்கும், கதைக்கும் தேவையாக இருந்தால், நிச்சயம் அந்த இடத்தில் தேவையான அளவு வர்ச்சியாக நடிப்பது கூட அழகாக இருக்கும். அந்த காட்சிகளில் நடிக்க நான் தயார்.  ஆனால், தேவை இல்லாமல் வலுகட்டாயமாக கவர்ச்சி காட்சிகளை வைத்தால்,  அது நன்றாக இருக்காது, கவர்ச்சியாகவும் இருக்காது என கூறியுள்ளார்.


Related Posts

Post a Comment

Subscribe Our Newsletter